About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

சனி, 12 மே, 2018

அக்னி!

நாம் உண்ணும் உணவுகளின் குறைந்தபட்ச செரிமான நேரம் எவ்வளவு?
தர்பூஸ் 20 நிமடங்கள்
தக்காளி 30 நிமடங்கள்
வாழைப்பழம் 50 நிமடங்கள்
பால் 1 மணிநேரம்
அரிசி/கீரை/காய்கறிகள் 1.5 மணிநேரம்
மீன் 1.5 மணிநேரம்
பருப்பு/நட்ஸ்/சீஸ் கொழுப்பு 3 மணிநேரம்
சிக்கன் 4 மணிநேரம்
இறைச்சி 8 மணிநேரம்
பர்கர்/பிட்சா 12 மணிநேரம்
சூரிய சக்தியின் காரணமாகவும், உடல் தன்மையையும், வயிற்றில் அக்னியின் அளவைப் பொறுத்தும் இந்த செரிமான நேரம் அமைகிறது. மந்த அக்னி, குடலில் மெதுவான நகர்வு, குடல் புழு, இவற்றின் காரணத்தால் செரிமான நேரம் இரண்டு மடங்கு அதிகமாகும்.
குடல் சுத்தமாக இருந்தாலே ஆயிரக்கணக்கான நோய்கள் அண்டாது என்பது சித்த வைத்திய கோட்பாடு. இறைச்சி சமைக்கும்போது என்னதான் புதினா, சோம்பு, மசாலா, இஞ்சு, பூண்டு அரைத்து ஊற்றினாலும், குடல் என்னும் கிடங்கில் தேங்கிய குப்பை 'கமகம' க்கும். ஆக, தினப்படி உணவு கிடைப்பதற்கு அன்னபூரணியின் தயவு வேண்டும்; உண்டி முதல் குண்டி வரை அது எரிந்து சக்தியாக கிரகிக்கப்பட வைத்தீசனின் தயவு வேண்டும். சிவனும்-சக்தியும் இல்லாமல் நம் உடல் இயங்குமோ? அரைத்து செரித்த உணவை குடலில் பஞ்ச பூதங்களாகப் பிரிப்பதும் அவனே!
"பேணிற் பிறவா உலகருள் செய்திடும் காணில் தனது கல்வியுளே நிற்கும்
நாணில் நரகநெறிக்கே வழிசெயும் ஊனில் சுடும் அங்கி உத்தமன் தானே" என்கிறது திருமந்திரம்.
No automatic alt text available.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக