"மன்னனே தன் தேச வளத்தை அழித்து காற்றையும் மண்ணையும் நீரையும் நஞ்சாக்குவான், மக்களைக் கொன்று குவிப்பான்." இது கலியுக லட்சணங்கள்.
இதை இன்று கண்கூடாக தூத்துக்குடியில் காண்கிறோம். எலியின் வாலை பெருச்சாளி பிடித்திருக்க, பெருச்சாளியின் வாலை முதலை பிடித்திருக்க, முதலையின் வாலை முதலாளி பிடித்திருந்ததானாம். அப்படி ஆகிவிட்டது இன்றைய ஸ்டெர்லைட் பிரச்சனை. அந்நிய முதலீடு, வேலை வாய்ப்பு, பொருளாதார அபிவிருத்தி என்று சொல்லியே நம் மாநிலத்தில் எல்லா பாதகங்களும் நடந்துவிட்டது.
"பேச்சுவார்த்தை நடத்தியது எங்க ஆட்சிதான் ஆனால் ஆலையைக் கட்ட NOC கொடுத்து கையொப்பமிட்டது பின்னாடி வந்த ஆட்சி. அனுமதி தந்தது நாங்கதான் ஆனால் விஷவாயு கசிந்தும் ஆலையை மூடாம இயங்க விட்டது எங்களுக்கு பின்னாடி வந்த முன்னாடி இருந்த ஆட்சி" என்று ஆளாளுக்கு விரல் சுட்டிப்பேசி சண்டையிடுவது தீர்வாகுமா? பாவம் தூத்துக்குடி மக்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக