NEET - Never Ending Embarrassment Test
'நீட்' தேர்வு எப்போதும்போல தமிழக மாணவிகளுக்கு தலைவலியாகவே இம்முறையும் வந்தது. உளவு பார்த்து தளவாடங்களை திருடியவனைக்கூட இப்படி சோதனை போட்டிருப்பார்களா என்று தெரியவில்லை. காது, மூக்கு, தலைமுடி, ஆடைகள் என அனைத்தையும் ஸ்கேன் செய்துமுடித்து, அவரை சாமியாடிவிட்டு வந்து நிற்கும் பெண்போல் ஆக்கி விட்டதுதான் கொடுமை. இப்படிச் செய்தால் எப்படி இயல்பாக தேர்வு எழுத மனம் இலயிக்கும்? போக்குவரத்து நெரிசலால் தாமதமாக வந்தவர்களை கேட்டிற்கு வெளியே வெயிலில் நிற்க வைத்து எப்படி எல்லாம் சித்திரவதை செய்ய முடியுமோ அதை செய்துள்ளது இந்த CBSE வாரியம். பன்மடங்கு பெரிய பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தேர்வுகளே அமைதியாக நடைபெறும்போது, இந்த நீட் தேர்வு மட்டும் ஏன் இப்படி கபளீகரம் ஆகிறது? இத்தேர்வில் high level frisking செய்யும் அளவிற்கு அப்படி என்ன முக்கியத்துவம் என்று எனக்குத் தெரியவில்லை. இதைபார்க்கும் அரசியல் கட்சிகள் என்ன செய்கின்றனவோ?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக