வண்ணம் நிறைந்த ஓவியமோ
கைவண்ணம் தந்த காவியமோ
மலரல்ல வண்ண ஓவியமல்ல
மலரந்த பூக்களில் இதழ்களல்ல
தலையும் உடலும் நளினமாக்கி
தத்ரூபமாக அமர்ந்த மனிதர்கள்
முதல்முறை மலரென ஏமாந்தும்
மறுமுறை பார்த்தபின் வியந்தும்
கலைமீது கலையாத நேசத்தோடு
குறுக்கி வருத்தி தலைவணங்கி வட்டத்தில் அமர்ந்த இவர்களை
வாழ்த்தாமல் இருக்க முடியுமோ?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக