இன்று ஆட்டோவில் பயணித்த ஒரு வடநாட்டுக்காரர் தன்னுடைய கையில் நீளமாக எதையோ பச்சை குத்தியிருந்தார். என்னவென்று முன்னே உற்றுப்பார்த்துப் படிக்க, அது மஹா மிருத்யுஞ்ஜய மந்திரம் என்று தெரிந்தது. உடனே ஒரு போட்டோ எடுத்தேன்.
ஓம் த்ரியம்பகம் யஜா மஹே, சுகந்திம் புஷ்டி வர்தனம்;
உருவாருகமிவ பந்தனான், ம்ரித்யோர் மோக்ஷியே மா(அ)ம்ருதாத்
உருவாருகமிவ பந்தனான், ம்ரித்யோர் மோக்ஷியே மா(அ)ம்ருதாத்
இந்த மந்திரத்தின் பொருள், 'மூன்று கண்களை உடைய, சுகந்தமான நறுமணத்தை உடைய, நம் எல்லோருக்கும் உணவு அளிப்பவரும், நம்மை வளர்ச்சி அடைய செய்பவருமான சிவ பெருமானை போற்றி வணங்குகிறோம். விளா பழம் எப்படி தன் காம்பில் இருந்து பிரிந்து விழுகிறதோ, அதே போல நம்மை பந்தங்களில் இருந்து விடுவித்து, மரணம் என்னும் பயத்தில் இருந்து விடுவித்து, அழியாத நிலை அதாவது மோக்ஷ நிலை அடைய செய்வாயாக, என்றும் அழியாதவனே ஈஸ்வரா"
அந்த ஈசன் எப்படி வேண்டுமானாலும் யார் மூலமாவது ஏதேனும் ஒரு செய்தியை நமக்குச் சொல்லி உணர்த்துகிறான். இங்கே பதிவிட ஒரு கருப்பொருளையும் கண்ணில் காட்டிவிட்டான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக