பாரத தேச நாள்காட்டியில் நாம் இதுகாறும் பின்பற்றி வரும் கலியாண்டு என்பது கிமு 3102 ஆண்டில் தொடங்கியது என்று அறிவோம். ஏனென்றால் அந்த ஆண்டில்தான் கிருஷ்ணர் உடலை நீத்தார், அதனால் துவாபர யுகம் முடிந்து உடனே கலியுகம் பிறந்தது என்பார்கள். அதன்படி இன்றைக்கு கலியப்தம் 5119.
ஆனால் மகான்களுக்கும் ஜோசியர்களுக்கும் நிறைய வேறுபாடு உள்ளது. ஸ்ரீ கிருஷ்ணர் இந்த பூவுலகைவிட்டு போனபோது அது பிரஜோத்பதி வருடம் என்று மகான்கள் கூறியுள்ளனர். அதன்படி பார்த்தால் மேலே தீர்மானிக்கப்பட்ட ஆண்டு தவறு. அது கிமு 2930 ஆகும். அதாவது உண்மையான கலியாண்டு 172 ஆண்டுகள் பின்னேதான் பிறந்தது என்று வல்லுனர்கள் கூறியிள்ளனர். ஒரே தேசத்தில் இரு கலியாண்டுகள் என்பதை நாம் என்ன கண்டோம்?
அதன்படி பார்த்தால் கல்கியாக வரவுள்ள ஸ்ரீ வீரபோக வசந்தராயர் சேனையுடன் வர இன்னும் தாமதமாகுமே. "இந்த 1965-66 ஆம் ஆண்டை விட்டால் அடுத்த விஸ்வாவசு ஆண்டு 2025-26 தான் வரும். அவர் வருவது எப்போது என்பது அவருக்கே தெரிந்த பரம ரகசியம்' என்று என்னுடைய நூலில் சொல்லியிருந்தேன்.
"கன்னி ராசியில் குரு சஞ்சரிக்கும்போது, கல்கியின் அவதாரம் ஸ்ரீசைலத்தில் தன் பரிவார சேனைகளோடு களத்தில் இறங்குவார்" என்று சொல்லப்படும் வருடம் 2025. அதுபோல் மகர ராசியில் குரு வரும்போது தீ மழை பொழியும், மகாயுத்தம் அணுகுண்டு பிரளயம் நடக்கும் என்றும் தீர்க்கதரிசனம் உள்ளது. அது 2044.
ஏன் கல்கியின் வருகையை பஞ்சாங்க கணிதக்ஞர்கள் முன்பின்னாக சொல்லியுள்ளனர் என்றால் அதுவும் இறை சித்தமே. "தர்மம் காக்க எடுக்கும் அவதாரத்தின் பிறப்பு விவரத்தை ஆராய முடியாது, அது ஒருநாளும் வெளிப்படாது" என்று மகாவிஷ்ணு உரைத்தார். இதைத்தான் பைபிளில், தேசலோனிக்கேயர் 5:2 "இரவிலே திருடன் வருகிறவிதமாய்க் கர்த்தருடைய நாள் வருமென்று நீங்களே நன்றாய் அறிந்திருக்கிறீர்கள்" என்று சொல்கிறது.
ஆக, கலியாண்டு எதுவாகவோ இருக்கட்டும், தர்மராஜர் படை திரட்டி வரும் நாள் வெகு தூரத்தில் இல்லை என்பது தெரிகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக