"அரசு ஊழியர்களும், ஜாக்டோ ஜியோ அமைப்பின் ஆசிரியர்களும் இன்று மறியலில் ஈடுபட்டனர்."
இதுதான் இன்று ஸ்க்ராலிங் நியுஸ். மீண்டும் பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்துதல், ஊதிய உயர்வு போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடக்கிறது.

அவருடைய தன்னலமற்ற சமத்துவ நோக்கு (Selfless and Secular) பற்றிய என்னுடைய அரைப்பக்க ஆங்கில கட்டுரை, 2011 ஆம் ஆண்டு ஆசிரியர் தினத்தை முன்னிட்டு The Hindu நாளேடில் Open Page பகுதியில் பிரசுரமானது. அதற்கு கார்டூனிஸ்ட் திரு.கேஷவ் அருமையாகப் படம் வரைந்திருந்தார். ஆசிரியர்களுக்கு இன்று கிடைத்துள்ள உரிமையும், அங்கீகாரமும், பொருளாதார மேம்பாடும் அன்று கிடைக்கவில்லை. ஒவ்வொருவருக்கும் ஊதிய பற்றாக்குறை இருந்த போதும், சமூக முன்னேற்றத்தில் ஆசிரியர்களின் பங்கு அதிகம் இருப்பதால் எதிர்ப்பு ஏதும் காட்டாமல் மெளனமாக இருந்தது ஆச்சரியமே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக