About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

புதன், 2 மே, 2018

ஆதாரப் பண்

'பள்ளிவாசலில் ஒலிக்கும் வாங் ஓசை கிட்டத்தட்ட இந்த சாமவேத இசையைப் போல் இருக்கிறது. முகமது நபியாகப் பிறந்த போகர் தான் இஸ்லாமியருக்கு இந்த இசையை அறிமுகப் படுத்தியிருப்பார் போலிருக்கு." என்று நண்பர் ஒருவர் சொன்னார்.
அதுவே ஆதாரப் பண். அவருடைய ஒப்பீடு அருமை! நம் தமிழர்கள் மனதில் ஈசனும்-வேதமும் ஆரியமே என்று பதிந்து விட்டதால் அதை முற்றிலும் வெறுப்பார்கள். “வேதங்கள் தெரிழுதேத்தும் விளங்கு தில்லைக் கண்டேனே” என்று திருவாசகம் சொல்கிறது. அதாவது தில்லையில் வேதங்களனைத்தும் சிவபெருமானை தொழுதவாறு உள்ளன என்கிறார் மணிவாசகர். சிதம்பரம் நடராஜர் கோயிலில் இந்த வேதத்தை காலையில் கருவறையில் பாடவேண்டும் என்று வலியுறுத்தியது ஏன் என்பது இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும். தேவாரப் பாடல்கள் அருளியவர்கள் வேண்டுமென்றே வேதத்தை உயர்த்திபேசி தமிழை இகழந்து பொய்யுரைத்தார்களா? நாம்தான் சிந்திக்க வேண்டும். "சங்கரனைச் சந்தோக சாமம் ஓதும் வாயானை மந்திரிப்பார் மனத்துளானை வஞ்சனையால் அஞ்செழுத்தும் வழுத்துவார்க்குச் சேயானைத் திருவீழிமிழலையானைச் சேராதார் தீநெறிக்கே சேர்கின்றாரே." (திருமுறை 6.50.4). இதே கருத்தை திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் தத்தம் பதிகங்களில் பாடியுள்ளனர். இவர்களே எதிர்க்காத ஈசனை, வடமொழியை, வேதத்தை தமிழர்கள் ஏன் எதிர்க்கிறார்கள்?🤔.
சிவபெருமான் கயிலாயமா /தென்னாடா என்று அவனை கூறு போட்டுப் பார்த்த விளைவுதான் இது. அப்போதைய லெமுரியாவில் தமிழ்ச்சங்கம் வளர்த்ததாகட்டும், சேயோன் முருகன் குறிஞ்சி நில ஆதிகுடியில் தமிழ் பரப்பியதாகட்டும், இதற்கும் வடமொழி வேதத்திற்கும் ஒரு சம்பந்தமுமில்லை. இங்குதான் எல்லோரும் குழம்பிக்கொண்டு ஈசனை/ வேதத்தை வேற்றுமையோடு பார்க்கிறார்கள். ஆக, பக்தி நெறியில் மொழிக் கலகம் வருவது ஏன்? 'நான் ஆதிகுடியோன் என்றால் நான் பேசும் மொழியில் அவன் ஏன் படைக்கவில்லை?' என்ற கோபம் தெரிகிறது. இதற்கு நவபஞ்ச (14) முறை உடுக்கை அடித்த நடராஜன்தான் பதிலளிக்க வேண்டும். தொல் மொழி ஆய்வு என்ற கோணத்தில் புரட்சிகர திராவிட ஆர்வலர்கள் 'தில்லையில் அம்பலம் என்ற ஒன்று இருந்ததே இல்லை. அங்கு ரிஷிகளும்/சித்தர்களும் வழிபடவில்லை. அது புத்த விகாரமாக இருந்ததாம். ஆகவே ஐம்பூதம், நடராஜர், வேதங்கள், திருமூலர், வடமொழி, எல்லாமே ஆரிய கதைகள்' என்று தங்கள் ஆசை தீர வேள்வியில் நெய் ஊற்றி ஊதி விட்டனர். ஈசனையும் வேதங்களையும் உயர்த்திப் பேசும் தேவாரத்தைத் தூற்றினர். மொழியை ஆராய்கிறேன் என்று சொல்லி இறுதியில் ஈசனின் முகத்தில் கைவைக்கத் துணிந்தனர். 👿🤭.
இறையைத் தாண்டி மொழி நிந்தனை வலுக்கிறது என்றால் அது கடவுள் நம்பிக்கை இல்லாத சில தமிழர்களின் கருங்கூவல் என்று தெரிகிறது. சுயம்பனான ஈசன் ஏன் வேதத்தை வடமொழியில் படைத்தான்? மொழி பிரச்சனைக்கு அவன்தான் காரணம் என்று முற்போக்கு தமிழர்கள் வெறுப்பார்கள். சாமவேதம் இசைப்பதை ஏற்கமுடியாதோர் சமயக் குரவர்களை 'ஆரிய' வந்தேறிகள் எனப் பெயரிட்டுச் சாடினாலும் ஆச்சரியமில்லை. அந்த அளவிற்கு வெறுப்புத் தீ இங்கே எரிகிறது. எல்லா மொழிகளும் அவன் அருளால் வந்தவை. அரசியல்/பூகோள ரீதியல் முட்டி மோதிக்கொள்வோர் போகட்டும், நமக்கு யாதொரு நட்டமுமில்லை. எம்மொழியும் நமதே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக