About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

வியாழன், 10 மே, 2018

இராம நாமம்

சிவவாக்கியத்தில் உள்ள சில பாடல் வரிகளை இங்கே இடுகிறேன்.

சிந்தைமேவு ஞானமும் தினம்செபிக்கு மந்திரம்
என்தைராம ராமராம ராம என்னும் நாமமே
சதாவிடாமல் ஓதுவார் தமக்குநல்ல மந்திரம்
இதாம்இதாம் இராமராம ராமஎன்னும் நாமமே
ஆனதேது அழிவதேது அப்புறத்தில் அப்புறம்
ஈனதேது ராமராம ராம என்ற நாமமே
ஓதடா அஞ்சுமூன்றும் ஒன்றதான வக்கரம்
ஓதடா இராமராம ராமவென்னும் நாமமே.
தெளியுமங்கை உடனிருந்து செப்புகின்ற தாரகம்
எளியதோர் இராமராம ராமவிந்த நாமமே
மாரமார மாரமார மரங்களேழும் எய்தஸ்ரீ
ராமராம ராமராம ராமவென்னும் நாமமே.
- (சிவவாக்கியர்)
'இராமா.. இராமா' என்று எப்படியேனும் பகிரங்கமாக வாய்விட்டு உரக்கச் சொல்லி பிராயச்சித்தம் தேடிக்கொள்ள இது ஒரு நல்ல நூதன தந்திரம். நாம ஜெபமும் செய்யவேண்டும் ஆனால் பகுத்தறிவு நாத்திகமும் வெளிப்படவேண்டும் என்ற தீவிர உறுதியோடும் திட்டத்தோடும் இருக்கும் திரு.கி.சாரங்கபாணியை பாராட்டாமல் இருக்கவே முடியாது. தன்னை நம்பி வந்த நாத்திக கருஞ்சட்டை தொண்டர்களும் 'இராம' நாமம் ஜெபித்து பாப நிவர்த்தி பெற தன்னாலான உபாயம்தான் இந்த பொதுக்கூட்ட உரை. சபாஷ்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக