இதற்குமுன் பழைய பதிவில் ஒரு விஷயத்தைச் சொல்லியுள்ளேன். மேருவில் தான் படித்த பலகோடி வடமொழி/தமிழ் நூல்களில் ஒரு பங்கு கலியுக மனிதர்கள் கைக்குக் கிடைத்தால் அது ஈசனின் உபயம் என்றார் போகர். அப்படியே நூல்கள் இருந்தாலும் அது விதியாளியின் கைக்கு மட்டுமே சென்றடையும் என்கிறார்.
எப்போதோ எழுதிய நூல்களில் என்ன கடினமான மொழியும் எழுத்து வடிவமும் இருந்ததோ, அதை இக்காலத்திற்கேற்ப மாற்றி செப்பனிட்டு நூல்களைக் காத்துவைத்து தக்க நேரத்தில் மாண்பர்கள் பயனுற நூல்களை பொது நோக்கத்திற்காக கொடுப்பவர்கள் யார்? அவர்கள் சித்தர்களாகவோ, சித்த பிரதிநிதிகளாகவோ இருக்க வாய்ப்புண்டு. தஞ்சை சரஸ்வதி மகால் நூலகத்தில் ஒவ்வொரு கால் நூற்றாண்டிலும் திடீர் திடீரென வைத்திய நூல்கள் வந்து சேர்கிறது. எல்லாமே ஆய்வு செய்து அச்சிடும் தரத்தில் நல்ல முறையில் உள்ளது.
நூலக கேட்டலாகில் இடம்பெறாத முதல்முறை வரும் அதிசய நூல்களும் உண்டு. சிவ சூட்சுமம் விளங்காமல் இருக்கவேண்டி, சில கட்டில் ஓலைகளில் சில சொற்கள் பகுதி சிதைந்து தூளாகி இருக்கும். ஆனால் பொருளில் பெரிதாக பாதிப்பு இல்லாமல் இருக்கும். சிலவற்றில் ஓலைகள் முன்பின் மாறி இருக்கும். பாடல்களின் அந்தம் ஆதி சொற்களை வைத்து ஓலைகளை வரிசைப் படுத்திவிடலாம்.
இவ்வாறு காலத்துக்கு தகுந்தபடி ஈசன் மின்னூல் ஸ்கேனிங் தரத்திற்கு நூல்களை அளிக்கிறான். பகுத்தறிவு பேசும் தமிழர்களுக்கு இதெல்லாம் திகில் விஷயமாகவே இருக்கும். ஆக, எந்த நூலை எப்போது சுற்றில் விடவேண்டும், எதை திடீரென சுற்றிலிருந்து மறைக்கவேண்டும் என்பதை அருளல், மறைத்தல் என்பதாகச் செய்து வருகிறான். இந்நேரம் நூல்கள் எப்படி இக்கால மொழி நடையில் வருகிறது என்ற ரகசியத்தை அறிந்திருப்பீர்கள். ஓம் நமசிவாய.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக