Rig Vedic Period (2005 B.C. - 1500 B.C.)
Post Vedic Period (500 B.C. - 1100 A.D.)
Muslim Period (1100 A.D. - 1700 A.D.)
British Period (1700 A.D. - 1947 A.D.)
Post Vedic Period (500 B.C. - 1100 A.D.)
Muslim Period (1100 A.D. - 1700 A.D.)
British Period (1700 A.D. - 1947 A.D.)
வேதங்கள் ஆதியிலிருந்தே உள்ளதை சரித்திர ஆய்வாளர்கள் மறந்து விடுவார்கள். ஏன்? சமய நூல்களில் சொல்லப்பட்ட உண்மைகளை ஏற்றுக் கொள்ளாமல் பூமியைத் தோண்டிப்பார்த்து தொல்லியல் சொல்லும் சாட்சியம் இருந்தாலே ஏற்கப்படும். அதுவரை பாரத தேசத்தில் எல்லாமே சிறப்பாக இயங்கியவை ஆங்கிலேயர்கள் வந்தபின் மாறியது. அவர்கள் எழுதுவதே நம் சரித்திரம். 'நாங்கள் சொல்லும் வருடத்திலிருந்து உங்களுடைய வேதகாலத்தை கணக்கு வைத்துக்கொள்ளுங்கள்' என்ற சொல்லியுள்ளான். அவன் சொன்னதே Stone/Iron/ Bronze Age காலங்கள். அவன் சொன்னபடியே இதுவரை நாமும் வரலாறு பாடங்கள் படித்து முடித்தோம். நம் தென்னகத்தில் தலைத்தூக்கிய பகுத்தறிவு /நாத்திக பேரலை, ஆங்கிலேயனுக்கு வரப்பிரசாதமாக அமைந்தது.
இன்றைக்கு கலியாண்டு 5119 முடிந்துள்ளது. கலியுகம் தொடங்கி ஆயிரம் வருடங்கள் கழித்தே வேத காலம் தொடங்கியது என்று வரலாறு பக்கத்தில் பதிவு செய்துள்ளார்கள். டிசம்பர் 31 - ஜனவரி 1 தேதிகளுக்கு இடையே ஏதுமில்லாத சூனிய தினம் இருக்கிறதா? இல்லை. அதுபோல்தான் முந்தய யுகத்திற்கும் கலியுகதிற்கும் தொடர்ச்சி வரும். மனித அவதாரமாக வந்த கடவுளும் குருகுலத்தில் வேதம் படித்தனர். 'வேதங்களில் நான் சாம வேதம்' என்கிறார் கிருஷ்ணர், 'வசிஷ்டர் இராமனுக்கு வேதம் கற்பித்தார்' என்று நாம் அறிவோம். இலங்கேஸ்வரன் இராவணன் 'சதுர்வேதி' என்பதும் தெரியும். ஆக, கடந்த யுகங்களிலும் வேதங்கள் இருந்துள்ளது. அவ்வளவு ஏன்? விஷ்ணுவின் முதலாம் மச்சவதாரமே வேதங்களைக் காக்க வந்த அவதாரம். இப்படி இருக்கும்போது, வேதகாலம் தொடங்கியே இன்றைக்கு வெறும் 4000 ஆண்டுகள்தான் ஆகிறதா? நம்முடைய தொன்மையை தனித்துவத்தோடு காட்டமுடியாமல் செய்தது யார்?
அநேகமாக, உபநிஷத்து, சம்ஹிதை மற்றும் புராணங்களை இந்த ஆசாமிகள் வேதங்கள் என்று நினைத்துக்கொண்டு அப்படிச் சொல்லியிருக்கலாம். ஸ்ம்ருதிகளை யார் எழுதுவார்கள்? ஒவ்வொரு துவாபர யுகம் முடியும்முன் வேத வியாசர் தலைமையில் ரிஷிகளுக்கு நூல்களை தொகுக்கும் பணிகள் கொடுக்கப்படும். இதை யார் முடுக்கி விடுவது? சிவ பெருமான். சென்ற மகாயுகத்தில் வந்த கலியுகத்திலும் இதுபோல் தேதிகளை மாற்றிப் போட்டு குளறுபடிகள் நடந்திருக்குமா? இருக்கலாம். இவ்வாறு நடப்பது கால விதி. நூல் பாடத்திட்டத்தை செப்பனிட்டு சரிசெய்வது வேத வியாசரின் வேலை. இப்போதுள்ள உபநிஷத்து மற்றும் புராணங்கள் அடுத்த மகாயுக சுற்றில் (43 லட்ச வருடங்கள் கழித்து) வரும் துவாபர யுகத்தில் செப்பனிடப்படும். அப்போதும் ஒரு வேத வியாசர் வருவார்.
இத்தனை தொன்மையான பாரம்பரியம் கொண்ட நாம், வடமொழி தென்மொழி என்று அடித்துக் கொள்ள புறப்பட்ட காலம்முதல் எல்லாமே மாறிவிட்டது. கோடி யுகங்கள் வாழ்ந்து மறைகளைப் போற்றிய மூத்த தமிழ் சித்தர்களே கவலைப்படாத மொழி விஷயமானது ஏன் ஒரு நூற்றாண்டாக ஊதி பிரச்சனை ஆனது? சிவபெருமானுக்கும் validity date கொடுக்கும் காலத்தில் உள்ளோம். அதுவும் கலியுக லட்சணத்தில் ஒன்று.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக