1908 ஆம் ஆண்டு ஷிர்டி சாய்பாபா முதன்முதலில் ஒருவருக்கு காயத்ரி மந்திர உபதேசம் செய்து வைத்தார். யாருக்கு? ராஜம்மா என்கிற 15 வயதான தமிழ் பெண்ணுக்கு. காதில் மந்திரம் உபதேசித்து, அதை இப்பெண் படித்து சரியாக உச்சரிக்க ஏதுவாக ஒரு தாளில் இம்மந்திரத்தை பென்சிலால் எழுதித் தந்தார். எந்த மொழியில்? தமிழில்!
உர்து, அராபி, மராத்தி மட்டுமே பேசும் பாபா அன்றுதான் தமிழும் பேசத்தெரியும் என்பதைக் காட்டினார். ராஜம்மாளுக்கு தமிழ் மட்டுமே தெரியும் என்பதால், பாபா தமிழில் உபதேசித்துள்ளார். அதன்பின் யாருக்கும் காயத்ரி உபதேசித்ததில்லை. பிற்பாடு இவருக்கு 'சிவம்மா தாயி' என்று பாபாவே புதிய பெயர் சூட்டினார். துறவிகளுக்கு உண்டான பல இன்னல்களையும் சோதனைகளையும் இவர் சந்தித்தார். கணவர் இவரை விட்டுப் பிரிந்து போய் வேறொரு மணம் செய்துகொண்டார்.
தன் ஒரே மகனோடு பெங்களூருவில் வாழ்ந்து வந்தார். மகன் காவல் துறையில் அக்காலத்தில் பணிபுரிந்தது சாலை விபத்தில் மாண்டுபோனார். அதோடு சிவம்மா தாயிக்கு வாழ்க்கை வெறுத்துப் போனது. பெங்களூரின் புறநகர் பகுதியான மடிவளாவில் சுடுகாடு ஓரமாக ஒரு மரத்தடியில் தங்கி, யார் உணவு கொடுத்தாலும் வாங்கி உண்டு வந்தார். எப்போதும் தவத்தில் இருந்தார். அவர் நிலைக்கண்டு யாரோ ஒருவர் அப்பகுதியில் தன் கால் கிரவுண்ட் நிலத்தை இவர் பெயருக்கு எழுதிக் கொடுத்தார். முகம் தெரியாத யாரோ இவர் பெயரில் எழுதித்தர அவசியமில்லை. அதற்கு சாயிதான் காரணம். சக்தி குரூப்ஸின் பொள்ளாச்சி மகாலிங்கம் இந்த சிவம்மா தாயிக்கு தூரத்து உறவு என்று பிறகு தெரியவந்தது.
பக்தர்கள் தரும் காசைக்கொண்டு மடிவளாவில் குடில் அமைத்து பிற்பாடு அங்கேயே சாயி ஆலயத்தைக் கட்டினார். ஷிர்டி பாபா சமாதி ஆனபிறகும்கூட சூட்சும ரூபமாக இவருடன் தினமும் அந்த ஆலயத்தில் பேசினார். சாயி சிலைக்கு அடியில் பூமியில் ஒரு குழி தோண்டி, அங்கேயே அமர்ந்து தவம் இருக்கத் தொடங்கினாராம். நவம்பர் 1994 ஆம் ஆண்டு தன்னுடைய 105வது வயதில் சிவம்மா சமாதி ஆனார். அற்புத சாயி லீலைகளுக்கு முடிவில்லை!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக