"சந்துரு! இன்னைக்கு நம்ம வீட்ல சிறுதானியம் போட்டு பலகாரம் புதுசா செய்தோம். டிவில செய்து காட்டினாங்க. சேம்பிள் பாரு" என்றார் நண்பரின் தாய். வரகு, சாமை தினை, குதிரைவாலி, கம்பு, கேழ்வரகு, அவல், அரிசி மாவு எல்லாம் அரைத்துப் போட்டு அப்பம் என்ற பெயரில் ஒன்றை நண்பர் வீட்டில் கொடுத்தார்கள். இதை குழிப் பணியாரம் சட்டியில் போட்டு நெய் ஊற்றி எடுத்தாராம். கன்னங்கரேல் என்று காட்சி தந்தது. சரி, கேழ்வரகு போட்டதால அந்த நிறம் என்று நினைத்தேன்.
அதை ஒரு துண்டு பிய்த்து வாயில் போட்டேன். கோணிப்பை வாசனை வீசியது. அது வேகவில்லை, உள்ளே கட்டி தட்டி இருந்தது. வெல்லம் மிகக் குறைவாக இருந்தது, இந்த திட மாவு எங்கிருந்து வேகும்? ஈரமின்றி வரண்ட இந்த மாவை எப்பவும்போல் வாணலியில் ஊற்றி பொறித்து எடுத்திருந்தால் முகத்தில் பட்டாசு வெடித்திருக்கும்.
"பயப்படாதே! அதிகமா நெய் விடலை. தாராளமா சாப்பிடு" என்றார். அதுதான் பிரச்சனை என்று நினைத்துக் கொண்டேன். அவரிடம் எப்படிச் சொல்வது என்று தெரியாமல் ஒரே ஒரு சிறு அப்பம் மட்டும் உண்டேன். "ஆன்ட்டி, ஒரு டம்பளர் வெந்நீர் மட்டும் குடுங்க போதும். வயிறு நிறைவா இருக்கு" என்றேன். என் நண்பர் "நிஜமாவே, நல்லா இருக்கா?" என்றார். "எப்பவும் சாப்பிடும் அப்பத்தைவிட இது ஒரு மாற்றா இருக்கும். ஆனால் இதை அடிக்கடி நம்ம சாப்பிட முடியாது heavyஆ இருக்கும்.. வயித்துக்கு ஒத்துக்காதே " என்றேன்.
அவர்கள் கஷ்டப்பட்டு உண்டதுபோக மீதியை மறுநாள் புறாவும் காக்கையும் நீரில் போட்டு ஊறவைத்து நிதானமாகக் கொத்திச் சாப்பிடும் என்று நம்புவோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக