குடியரசு காலத்திலும் ஊரே போற்றும் ஒரு மகாராஜா உள்ளார். அவர்தான் சிங்கம்பட்டி ஜமீன் சமஸ்தானத்தின் மகாராஜா, ஸ்ரீ சிவசுப்ரமணிய கோமதிசங்கர முருகதாஸ் தீர்த்தபதி மகாராஜா. இன்றைக்கு யானை குதிரை சேனைப் படைகள் எதுவுமின்றி, ஜமீன் சொத்துகள் நாட்டுடைமை ஆனபிறகு எல்லாம் இழந்தும், தன் சமஸ்தான மக்களின் அன்பைப் பெற்றுள்ளார். திருநெல்வேலி தாண்டி மணிமுத்தாறு மலையடிவாரத்தில் உள்ளது இந்த அமைதியான சிங்கம்பட்டி ஜமீன்.
இவர் மேற்கத்திய கல்வி கற்றவர். ஆன்மிகத்தில் நாட்டம் கொண்டவர். சுவாமி விவேகானந்தரை சிக்காகோ அனுப்பிவைத்த பாஸ்கர சேதுபதி மன்னரின் மகள் இவருக்கு பாட்டி முறை. இவர் சித்த நெறிகளை ஆராதிப்பவர். பல சித்துகளை கைவரப் பெற்ற 88 வயதான சித்தர். இன்று பெயரளவில் சம்பிரதாயம் காக்க ராஜாவாக இருக்கிறார். இவருடைய தந்தை வெள்ளிகாறரை கொன்றார் என்பதற்காக இவர்களது பிரசித்தி பெற்ற 8000 ஏக்கர் 'மாஞ்சோலை எஸ்டேட்' தண்டம் கட்ட மும்பாய் கம்பனிக்கு தாரை கொடுக்கப்பட்டது. இந்த வயதிலும் இவர் முகத்தில் ராஜ கம்பீரம் தெரிகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக