'தலைவர் உயிருக்குப் போராடும்போது அவர் முன்பு பேசியதையும் நடந்து கொண்டதையும் கிண்டலடிப்பது உச்சகட்ட அநாகரிகம்' என்று யாரோ ஒரு கட்சித் தலைவர் நேற்று தொலைக்காட்சியில் பேசினார்.
சமூகத்தின் செயல்பாடு அப்படித்தான் இருக்கும். அரசியலில் இல்லாமல் பொதுவாழ்வில் இருந்த அப்துல்கலாம் ஐயாவை யாரேனும் இப்படி கிண்டல் பேசினார்களா? அவர்தான் அப்படியாக நடந்து கொண்டாரா? ஒருவருக்கு எத்தனை வயதானாலும் 'பேசிய தீயபேச்சும் செய்த தீயசெயலும்' காலத்திற்கும் வடுவாக நின்றுவிடும். அதை அலசிப்பார்த்து பேசுவதில் நாகரிகம் அநாகரிகம் என்று ஏதுமில்லை. 'நன்றே செய் இனிதே பேசு' என்று ஔவை சொன்னாளே! தலைவர் அன்றே கொஞ்சம் பிரயத்தனப்பட்டு மூதுரை ஆத்திச்சூடி நல்வழி படித்து அதன்படி ஒரு இம்மியளவு நடந்ததிருந்தாலும் உலகமே 'நல்லவன்' என்று கொண்டாடி இருக்கும். 'இளமையில் கல்' என்பதை அலட்சியப் படுத்தக்கூடாது. இதற்கு கலைஞரே உதாரணம்.
அவரை 'முத்தமிழ் காவலர்' என்றால் 'சங்கத்தமிழ் மூன்றும் தா' என்று விநாயகரிடம் கேட்டுப்பெற்ற ஔவையின் சொல்லை மதியாது போவாரோ? அவள் சித்தர். "நான்மறை, திருக்குறள், தேவாரம், திருவாசகம், திருமந்திரம், எல்லாமே ஒரு வாசகம்தான் என்பதை உணர்" என்றாள். அதை இவர் பகுத்தறிவோடு ஒதுக்கினார். அவர்கள் போற்றிய கூத்தனையும் அரங்கனையும் பீரங்கி வைத்து தகர்ப்பேன் என்றார். 'கூடா நட்பும் , பேசிய சொல்லும், செய்த செயலும்' காலம் இருக்கும்வரை ஒலிக்கத்தான் செய்யும். இதில் வயதென்ன? சாதி என்ன? நாகரிகம் என்ன?
இது படிப்பினை... கலைஞருக்கு மட்டுமல்ல நம் அனைவருக்கும் பொருந்தும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக