About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

சனி, 28 டிசம்பர், 2019

வாசுகியின் உலகம்

பாதாள உலகம் எப்படி இருந்தது என்பதைப்பற்றி பழைய பதிவு ஒன்றில் போட்டிருந்தேன். மண் மரம் செடி கொடி கடல்போன்ற ஏறி, சுறா மீன்கள், என பலவற்றை நான் அங்கு கனவில் கண்டதையும் அங்கு நிலவிய சூழலைப்பற்றியும் சொல்லியிருந்தேன். அது நாகலோகம் என்றும் அழைக்கப்படுகிறது.
அங்கே அது ஏழு உலகங்களாகப் பிரிக்கப்படுகிறது. அங்கு நாகரிஷிகள் ஆட்சி செய்கிறார்கள். அதல விதல நிதல தலாதல மகாதல ரசாதல பாதாள என்பனவாகும். வாசுகி தலைமை வகிக்க அங்கே எப்போதும் வேத மந்திரங்கள் முழங்கிக்கொண்டே இருக்குமாம். ஆயிரம் தலைகள் கொண்ட ஆதிசேஷன் கூட இந்த லோகத்து ஜீவராசிதான். அப்படி என்றால் புராணம்படி இந்த பாதாள உலகிற்கு யாரேனும் போய் வந்தனரா? ஆம். இராமபிரானின் மோதிரத்தைக் கண்டெடுக்க ஹனுமான் இந்த நாகலோகத்திற்கு வந்தபோதுதான் இதற்குமுன் பல யுகங்களில் பல இராமர்கள் அவதரித்த விஷயமே அனுமனுக்கு வாசுகி மூலம் தெரிய வந்தது. அந்த நாகலோலகம் அசாத்தியமானது. சொர்க்கத்திற்கு நிகராக எல்லா கட்டுமானங்கள் கொண்ட நகரங்களும் உண்டு என்று சிவபுராணம், பத்ம புராணம், விஷ்ணு புராணம், வாயு புராணம் என எல்லாமே விவரிக்கின்றது.
அந்த நாகரிஷிகள் எப்படியான சக்தியைப் பெற்றவர்கள்? அவர்கள் தாம் நினைத்த மாத்திரத்தில் எந்த ரூபத்தையும் எடுக்கவல்ல ரிஷிகள். பாதாள லோகத்திற்கும் கீழாக உள்ளதுதான் நரகம். அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் உள்ளது என்பதற்கு இணங்க அதே உலகங்கள் நம் உடலில் சக்கரங்களாக உள்ளன. மூலாதாரம் முதல் சகஸ்ராரம் வரை ஏழு, மூலாதாரத்திற்குக் கீழேயுள்ள அதல முதல் பாதாளம் வரை ஏழு. ஆக ஈரேழு பதினாலு உலகங்கள்.
மூலாதாரம் மண். அதனடியில் பாதாள உலகங்கள் தொடங்கும். அதனால்தான் குண்டலினி என்ற பாம்பு மூலத்தில் தலையை கீழுலகம் நோக்கிப் பார்க்கச் சுருண்டு படுத்துக் கிடக்கும். ஆறாதார சக்கரங்களான மூலாதாரம் முதல் சகஸ்ராரம் வரை யோக சாதனைக்குப் பயனுள்ளது. மற்றவை கணக்கில் கொள்வதில்லை. மலம் /சிறுநீர் கழித்துவிட்டு வந்தால் உங்கள் தொடை கெண்டைக்கால் வெலவெலத்து பலவீனமாகத் தெரிவது ஏன்? மலம் நிறைந்த மூலம் காலியானதும் அங்கே கனமில்லாமல் போகும்போது சக்தியோட்டம் தெளிவாகும்போது இந்த பலவீனம் தெரியும். அது அதல-பாதாளம் வரை பத்து நிமிடங்களுக்குச் சோர்வைக் காட்டும். ‘மலம் போனால் பலம் போகும்’ என்பது பழமொழி. ஆனால் அதுதான் ஆதாரமாக உடலுக்கு வலு தந்து தாங்கிப் பிடிக்கும்.
யோக நிலையிலும், உண்மையாக பூகோள நிலையிலும் இந்த உலகங்கள் இருக்கின்றன. அங்கே ஸ்தூல உடலுடன் சென்றாலும் சூட்சும ரூபத்தில் இருக்கும் பல விஷயங்கள் நம் கண்களுக்குத் தெரியாது.
அந்த நாகலோக ரிஷிகளில் பலர் ஈசனின் கட்டளைகள் ஏற்று பூமிக்கு வந்து அவதாரங்கள் எடுத்துவிட்டு மீண்டும் நாகலோகம் சென்றடைந்து பணிகளை மேற்கொள்வார்கள். அப்படியான வேதம் ஓதும் நாகரிஷிகளில் சிலர் நெரூர் சதாசிவ பிரம்மேந்திரர், வடலூர் இராமலிங்க அடிகள், சந்த் ஞானேஸ்வர் என்று சொல்லிக்கொண்டே போகலாம். இவர்கள் நினைத்த மாத்திரத்தில் இன்றும் அரூபமாக தினமும் தாங்கள் ஸ்தாபித்த கோயில்களில் உலாவந்து ஈசனை பூசித்துச் செல்வது வழக்கம். அத்தி வரதர் எழுந்தருளியபோது பாதாள லோகம் பற்றி மேலோட்டமாகச் சொன்னேன்.
அதுபோல் சித்தர் பாடல்களில் மேரு மலையில் ஏறிப்போய் பல அதிசயங்களைக் கண்டதை போகர் உரைத்தார். ‘உண்மையில் அதெல்லாம் இல்லை. யோக மார்க்கத்தில் சஞ்சரித்து முதுகுத்தண்டு வழியே நிலைகளில் உயரந்து கடைசியில் மேரு/பொதிகை/கயிலாயம் என்ற சகஸ்ரார சக்கரத்தில் குண்டலியை நிலைக்கச் செய்து சச்சிதானந்த நிலையை அடைவதைத்தான் குறிக்கின்றார். வேறொன்றுமில்லை!’ என்று சிலர் கூறுகின்றனர். இது யோக மார்க்கத்தில் சரி. ஆனால் உண்மையில் ககன குளிகையை அடக்கிக் கொண்டு அங்கே ஸ்தூல தேகத்துடன் பறந்துபோன போகரை என்ன சொல்வார்களோ?
“பாலகா! நீர் யார்? ஏன் இங்கு வந்தீர்? ஸ்தூல தேகத்துடன் மேருவில் யாரும் பிரவேசிக்க விதியில்லை. சித்தர்முனி கூட்டத்தினரின் சாபம் கிட்டும்” என்று சொன்னபோது. “நான் திருமூலரின் மரபில் வந்த காலங்கிநாதரின் சீடன் போகர். நீங்கள் எனக்கு அருள் புரியுங்கள். மேருவின் ரகசியங்களை அறியச் செய்யுங்கள்” என்று கேட்டுக் கொள்கிறார். “அய்யன் காலாங்கியின் சீடரா? வருக!” என்று சொல்லி வேண்டிய ரகசியங்களையும் சமாதியிலுள்ள நூல்களையும் காட்டுகின்றார்கள். சித்தர் அவருடைய தேகத்திலுள்ள ஆறாதார சக்தி சக்கரங்களில் ஏறி தெய்வத்தைக் காண ககன குளிகை எதற்குக் கொள்ளவேண்டும்? சுவரூப, சந்தான, மாலினி, கமலினி, போன்ற மற்ற ரசமணி குளிகைகள் போதுமே! ஆகாய மார்க்கமாகப் பறக்க உதவுவது ககன குளிகை. அப்படித்தான் சப்த சாகரங்களைச் சுற்றி வந்தார்.
ஆகவே, அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் உண்டு. அந்த இரண்டையுமே சித்தர்கள் அடைந்து சாதித்தார்கள் என்று சொல்லவே இந்தப் பதிவு. நம் யோக நிலைகள் வழியே உயர்ந்து சொர்க்கத்தை அடைவதும் நரகத்தை அடைவதும் அவரவர் செயல்களையும் ஆன்ம பலத்தையும் ஜெபத்தையும் பொறுத்தது என்பதை வருகின்ற வைகுண்ட ஏகாதசியில் ஆடும் பரமபதம் விளக்கும்.
No photo description available.

செவ்வாய், 10 டிசம்பர், 2019

பாவக் கணக்கு!

நான் சொல்லப்போவது ஓர் உண்மைச் சம்பவம்.
1968. ஐம்பது ஆண்டுகளுக்கு முன் என் நண்பனின் அப்பா திரு.ராமன் மும்பையில் வேலையில் இருந்தார். தன்னுடைய சென்னை அலுவலக சகாவின் பிள்ளைக்கு மும்பையில் அணுசக்தி நிலையத்தில் பொறியியலாளர் பணிக்கான நேர்காணலுக்கு அழைப்பு வந்திருந்தது. அங்கு அந்தப் பிள்ளை வந்ததும் ரயில் நிலையம் சென்று கூட்டிக்கொண்டு போனது முதல் தங்க வைத்து அணுசக்தி நகருக்கு அழைத்துச் சென்று வந்து, வண்டி ஏற்றி சென்னைக்கு அனுப்பியது வரை ஒருநாள் விடுப்பு போட்டுவிட்டு பொறுப்பேற்று உதவினார்.
மும்பையில் வேலை செய்த தன்னுடைய மேலதிகாரியிடம் (தமிழர்) சென்னை கிளையில் உள்ள நண்பரின் மகன் இண்டர்வியுவுக்கு வந்தது பற்றியும் தான் விடுப்பு போட்டுவிட்டு போனதன் காரணத்தைச் சொல்லியுள்ளார். இரண்டு மாதங்கள் கழித்து அந்தப் பிள்ளை தேர்வில் செலெக்ட் ஆகி வேலையும் மும்பையில் கிடைத்தது. பிற்பாடு நண்பரின் அப்பா ஓராண்டில் கொல்கத்தாவுக்கு மாற்றலாகிப் போனார். காலங்கள் ஓடியது.
1989. என் நண்பரின் மூத்த அண்ணன் முதுகலை ரசாயனம் முடித்த வருடம். அவருடைய அப்பா அவருக்குத் தீவிரமாக நல்ல வேலைக்குப் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது மும்பையில் வேலை செய்த அந்தப் பிள்ளை சென்னையில் நண்பருடைய அப்பாவை எதேச்சையாக சந்தித்தார். அப்போது என் நண்பரின் அப்பா தன்னுடைய மகனுக்கு வேலை சிபாரிசு செய்ய முடியுமா என்று கேட்டுள்ளார்.
அதற்கு அவர், 'அப்படியா? அப்போ இதுக்கு முன்னாடி நீங்க உங்க பையனுக்கு வேலை கேட்டீங்களே அது மூத்த மகனா?' என்றுள்ளார்.
'இல்லையே பா... இவன்தான் என் மூத்தமகன்' என்றார்.
'ஒ.. அப்போ 7 வருஷத்துக்கு முன்னாடி கண்ணாடி போட்டுகிட்டு ஒருத்தர் என்னிடம் வந்து "நான்தான் இராமன், அடையாளம் தெரியுதா? உன்னை மும்பயில இண்டர்வியுவுக்கு கூட்டிகிட்டு போனபோது பார்த்தது.." என்றாரே.
"அது நான் இல்லையே... இத்தனை வருஷம் கழித்து இப்போதான் உங்களை பாக்குறேன் தம்பி" என்று இவர் சொன்னார்.
"உங்களோடு வேலை செய்தவங்க யாருடைய மகனாவது Atomic Power ல வேலை செய்யறாங்களா?" என்று கேட்டுள்ளார்.
சற்று யோசித்துவிட்டு, "ஆமா.. மும்பையில என்னுடைய மேலதிகாரியோட பையன் ஒருத்தன் அங்க அணுசக்தில வேலையில இருக்கான்" என்றார்.
"ஐயோ.. ஏமாந்துட்டேன் சார்... அப்போ அந்த ஆள்தான் என்கிட்டே 'நான்தான் ராமன்னு' பொய் சொல்லி என்னை சிபாரிசு பண்ணச் சொன்னார். நானும் நன்றிக்கடனுக்கு செய்தேன். உங்களைப் பார்த்து 30 வருசம் ஆச்சில்ல உங்க முகம் சரியா நியாபகம் இருக்கலை.. மோசம் போயிட்டேனே" என்று மனம் வருந்தினார்.
"பரவாயில்ல விடுப்பா.. யாருக்கு என்ன வரணும்னு இருக்கோ அதுதான் அமையும். It's okay" என்று என் நண்பரின் அப்பா சொன்னார்.
2018 ஆண்டு இறுதியில் விழுப்புரம் அருகே ஒரு விபத்து. "ஓட்டுனர் உள்பட காரில் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் சம்பவ இடத்திலேயே பலி" என்று பத்திரிக்கையில் செய்தி வந்தது.
தன் பெயர் ராமன் என்று எந்த மேலதிகாரி பொய் சொல்லி தன் மகனுக்கு வேலை வாங்கினாரோ, அந்த மகன்தான் விபத்தில் மாண்டார். தந்தை செய்த பாவம், மகனையும் மருமகளையும், பேத்தியையும் சுவடின்றி துடைத்து அழித்தது. பொய் சொல்லி வாங்கிய அரசு வேலையில் வாழ்ந்தும் வளர்ந்தும் என்ன பயன்? இறந்தவரின் Benefits எல்லாம் claim செய்ய குடும்பத்தில் Nominee, Successor இல்லாமல் ஈட்டிய பாவத் தொகை பல லட்சங்கள் ரொக்கமாக பாவம் செய்த 94 வயது தந்தையிடமே வந்து சேர்ந்து விட்டது. தன் மகனுடைய குடும்பம் கூண்டோடு அழிந்ததற்கு அழுவாரா, கையில் சுளையாக அரை கோடி வந்தததற்கு சந்தோஷப்படுவாரா?
இதை என் நண்பர்தான் அண்மையில் சொன்னார். மக்களே! நீங்கள் நேர்மையாக முடிந்தவரை இருக்க முயலுங்கள். இக்காலத்தில் இதுபோன்ற பொய்கள் சொல்வது சாதாரணம். இது ஒரு பாவமா இதற்கு மரண தண்டனையா? என்று நீங்கள் நினைக்கலாம். தண்டனை என்பது எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். ஈசன் நம் ஒவ்வொருவரின் அறக் கணக்கையும் வைத்துள்ளான்!

வியாழன், 14 நவம்பர், 2019

தமிழும் சன்மார்க்கமும்

"தமிழனுக்கு கடவுள் இல்லை..."
"வழிபாடு இல்லை.."
"மதம் இல்லை."
"தமிழ் மட்டும் தான் எங்கள் உயிர்."
இப்படி கூறும் நாத்திக வாதிகளுக்கும், பகுத்தறிவு வாதிகளுக்கும். இதோ சில உண்மைகள்.

சிவன் இல்லை எனில் நக்கீரனும் பொய்.
முத்தமிழ் சங்கங்களும் பொய்யே...

பிள்ளையார், முருகன் கடவுள் இல்லை எனில் ஔவையும் பொய். அவரின் தமிழ்க் கவியும் பொய்யே...

கண்ணகி இந்து கடவுள் இல்லை எனில் ஐம்பெரும் தமிழ்க் காப்பியங்களும் பொய்யே...

பெருமாள் கடவுள் இல்லை எனில் ஆழ்வார்களும் பொய்.  அவர்களின் தமிழ் திவ்வியப் பிரபந்தங்களும் பொய்யே...

இந்து கடவுள் இராமர் இல்லை எனில் கம்பனும் பொய்.  அவனின் தமிழ்க் காவியமும் பொய்யே...

இந்து மதம் பொய் எனில் திருவள்ளுவரும் பொய். அவரின் திருக்குறளும் பொய்யே...

இந்து கடவுள்கள் பொய் எனில் திருமுறைகளும் பொய். திருமந்திரமும் பொய். தமிழும் பொய். தமிழ் வரலாறும் பொய்யே.

மொத்தத்தில் இந்து சமயமும்,  இந்துக் கடவுள்களும்,  இந்து சமய வழிபாடுகளும் இரண்டறக் கலந்ததே தமிழ் என்பது இப்போது புரிகிறதா?

உடனே..........
இந்து என்பது அண்மையில் வந்தது.
இந்து என்பது தமிழனுக்குரியதல்ல.
இந்து என்பது வடநாட்டுக்குரியது என்று சொல்ல வருவீர்களே!

இந்து என்பது நமது எல்லா சன்மார்க்க தெய்வ வழிபாடுகளுக்கும் வழங்கப்பட்ட பொதுவான பெயர். இதில் தமிழரின்..இ

சூரிய வழிபாடு..
நடுகல் வழிபாடு..
சந்திரன் வழிபாடு..
மர வழிபாடு..
மலை வழிபாடு..
பஞ்ச பூத வழிபாடு..
பேய் வழிபாடு..
குலதெய்வ வழிபாடு..
நாக வழிபாடு..
காளை வழிபாடு..
யக்ஷ வழிபாடு...
சிவ வழிபாடு..
முருக வழிபாடு..
மாயோன் வழிபாடு..
அம்மன் வழிபாடு..
இந்திரன் வழிபாடு..
வருணன் வழிபாடு..
விநாயகர் வழிபாடு..

ஆகிய வழிபாடுகள் அனைத்தும் உள்ளடங்கியுள்ளது. மேலே குறிப்பிட்டது போல இதையெல்லாம் தனித்தனியாக சொல்லிக் கொண்டிருக்க முடியாது. எனவேதான் இந்து என்ற பொதுவான சொல்லைப் பயன்படுத்துகிறோம்.!!

வெள்ளி, 8 நவம்பர், 2019

கோமியம் தங்கமயம்

நம் இந்து சம்பிரதாயப்படி சுத்தி செய்யும் எல்லா சடங்குகளிலும் பசு கோமியம் இடம்பெறும். வீடு முழுதும் புரோட்சணம் செய்ய, அடிபட்ட சிராய்ப்புகளைச் சுத்தம் செய்ய, மருந்தாக உட்கொள்ள, தீயசக்திகளை விரட்ட, மண்வளம் கூட்டும் பஞ்சகவியமாக என்று அநேக பயன்பாடு உண்டு.
பசுவின் ஐந்து பொருட்களான பால் தயிர் நெய் சாணம் கோமியம் ஆகியவற்றின் கலவையே பஞ்சகவ்வியம். இது மனிதனுக்கு கால்நடைகளுக்கு தாவரங்களுக்கு உற்ற மருந்தாக வயிற்றில்/குடலில் தேங்கிய ஆமத்தை நீக்க அருமருந்தாகப் பயன்படுகிறது. சித்த மருத்துவத்தில் ரசவாதம் செய்யும்போது புடம் போட வரட்டியும், மூலிகைத் திருநீறு தயாரிக்கவும் பயன்படுகிறது.
வடக்கே அதிக விலைக்குப் போகும் பசுமாடு என்றால் அது கீர் இனம். எடை கனமானதும், தட்ப வெட்பத்தைத் தாங்கிக் கொள்ளும் திறனும், நோய் எதிர்ப்பு சக்தியும், அதிக பாலும் தரவல்லது. இதனுடைய ஒரு லிட்டர் கோமியத்தில் சுமார் 3-10 மில்லிகிராம் அளவுக்கு தங்கத் துகள்களின் கூறுகள் கரைந்துள்ளதாகப பல்லாண்டுகளுக்கு முன்பே பரிசோதனை முடிவு வெளியானது. இது எப்படியும் மேற்கத்திய நாட்டு ஆய்வாளர்களையும் கார்பரேட் மருந்து நிறுவனங்களையும் கோபப்படச் செய்யும்.
'ஐய்யயே! அந்த பசு எப்படியோ போகட்டும் அது தமிழ்நாட்டு பசு இல்லை' என்ற அளவில் சிந்திக்கும் மாசடைந்த தமிழர்களே அதிகம் உள்ளனர். சாணம் முதல் கோமியம் வரை தமிழாக இருந்தால்தான் மதிக்க வேண்டும் என்ற மூடத்தனத்தை முற்போக்குக் கட்சிகள் விதைத்து விட்டன. இனி காலம் போகிற போக்கில் இதன் மதிப்பு தெற்கே தேயும்.
சாணம், கோமியம், நாட்டுச் சர்க்கரை, தண்ணீரில் கலந்து ஒருநாள் நுரைக்க வைத்து வடிகட்டினாலே அமிர்த கரைசல் தயார். இதை தெளிப்பு உரமாகப் பயன்படுத்த நல்ல பலன் கிட்டும். மதுராந்தகம் அருகே ஒரு வைணவர் தனிப்பட்ட அளவில் பசுக்களை பராமரித்து Medicated Komiyam மற்றும் Distilled Komiyam தயார் செய்து பாட்டிலில் அடைத்து வியாபாரம் செய்கிறார். இதற்கு நல்ல வரவேற்பும் உள்ளது. முன்பெல்லாம் கிராமத்து வீட்டினுள் மண் தரையில் பசுஞ்சாணத்தையும் கோமியத்தையும் கரைத்துப் பூசுவார்கள். அது நாளடைவில் இறுகிப் போய் தரை பசுமையும் மஞ்சளும் கலந்த நிறத்தில் ஜொலிக்கும். வீட்டினுள் கிருமி நாசினியாகவும் வெப்பத்தைக் கட்டுப்படுத்தவும் பயன்பட்டது. அதுபோல்தான் கோமியத்தின் மருத்துவ பண்பும்.
சுமார் பத்து ஆண்டுகள் இவ்விதம் தெளித்த மண் தரையை சிறிதளவு பெயர்த்து எடுத்து சோதித்தால் அடர்த்தியாக தங்கத் துகள்கள் கெட்டிப் பட்டிருக்கும் என்பது உறுதி. ஊசி போட்டு அதன் மருத்துவ பண்புகளை கெடுக்காதவரை, வடக்கோ /தெற்கோ கோமாதாவின் எல்லா இன கோமியத்திலும் தங்கத்துகள் பரவலாக இருக்கும். புனிதமான கோமியத்தில் திருமகள் லட்சுமி நிரந்தரமாக வாசம் செய்கிறாள். கிராமத்து வீட்டில் பெரிய அலமாரி கப்போர்டுகள் சுவற்றில் வைத்துக் கட்டுவார்கள். அது நாளடைவில் கரையானால் செல்லரித்துப் போகாமல் இருக்க அதை சுவற்றின்மீது வைத்துக் காரைப் பூசும்முன் ஒரு தாமரை இலையை அகலமாக விரித்து சுவற்றில் வைத்து அதன்மீது மரச்சட்ட அலமாரியைப் பதிப்பார்கள். தாமரையில் லட்சுமி நிரந்தரமாக வாசம் செய்கிறாள்.
No photo description available.

திங்கள், 4 நவம்பர், 2019

திருக்குறள் நான்காம் பால்: வீடு

வீடு என்னும் மோட்ச காண்டம் பற்றி தனித்தொகுப்பு உள்ளது. அதை அச்சேற்றாமல் பதிப்பில் முடக்கியதாக திருவள்ளுவரின் வம்சத்தில் குல மடாதிபதி பல வருடங்களுக்குமுன் சொன்னதாக நாம் கேள்விப்பட்ட செய்தி. அறம் கடைபிடித்தால் பொருளும் இன்பமும் இறுதியில் வீடும் கிட்டும், இதற்கென தனியாக ஒரு காண்டம் உண்டா என்ன? உண்டு. இதற்கு என்ன ஆதாரம்?

திருவள்ளுவரின் மருமகன் ஏலேல சிங்கன் வகையறா திருவள்ளுவ நாயனார் மடத்தின் மடாதிபதியாக 1900ல் அலங்கரித்தவர் இதுபற்றிக் கூறியிருந்தார். தனியாக மோட்ச காண்டம் உண்டு என்றும் அதில் வள்ளுவ குலதினற்கு ஏற்ப ஜோதிடமும் சேர்ந்து வரும். இது சமயம் சார்ந்த மூட நம்பிக்கை என்று அக்கால ஆங்கிலேயர்களும் நம் திராவிட எழுச்சிக்கு வித்திட்ட கூட்டமும் சேர்ந்து இதை பதிப்பாக விடாமல் தடை போட்டதாக மடாதிபதி பிற்பாடு 1960 ல் சொன்னதாக அறிகிறோம்.   .

"தமிழ்ச் சங்க நூல்களில் திருக்குறள் என்ற பெயர் மட்டும் தொகை என்ற சங்க நூல் பட்டியலில் பெயர் குறிப்பு மட்டும் இருந்தது. ஆனால் முழு ஓலைச் சுவடியும் எங்கும் கிடைக்கவில்லை.

அன்றைய பிரிக்கப் படாத கோயமுத்தூர் மாவட்டத்தில் ஈரோடு அருகே முடவாண்டி சத்தியமங்கலம் என்ற ஊரில் கள்ள கவுண்டன் பாளையம் என்ற ஊரில் திருவள்ளுவரின் மருமகனும் ஒரே வாரிசுமான ஏலேல சிங்கனின் வாரிசுகள் அரசர்களிடம் பட்டயங்கள் பெற்று மடாதிபதிகளாக உள்ளதாக தமிழ் அறிஞர்களுக்குத் தகவல் கிடைத்தது. இவர்களுக்கு கொங்கு வள்ளுவர், கொங்கு பறையர் உட்பட அப்பகுதியில் வாழும் பல்வேறு ஜாதியினர் குல சீடர்களாக உள்ளதாக தமிழ் அறிஞர்கள் அங்கு சென்ற போது அறிந்து கொண்டனர். மேலும் இந்த மடம் கரூர் பரமத்தி அருகே நடந்தை,அந்தியூர் ,குள்ளவீரம் பாளையம்,பாலக்காடு எல்லை ஆகிய இடங்களில் தங்களைப் போலவே உறவு முறை மடங்களை கொண்டிருந்ததாகவும் அறிந்து கொண்டனர்.

குழந்தை ஆனந்தர் மடம் என்று அழைக்கப்பட்ட இந்த மடங்களில் திருவள்ளுவர் தன் கையால் பூஜை செய்து, பிறகு மருமகன் ஏலேல சிங்கனிடம் அளித்த மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் விக்ரஹங்கள் பூஜை செய்யப்பட்டு வந்ததாகவும் அறிந்து கொண்டனர். ஏன்? காரணம் திருவள்ளுவரின் பூர்வீக ஊர் மதுரை ஆகும்.

கொங்கு பறையர்களின் புரோகிதர்களான கொங்கு வள்ளுவர்களுக்கே குருவாக விளங்கியதால் திருவள்ளுவர் என்ற பட்டப் பெயர்களையும் கொண்டு இருந்தனர் இம்மடாதிபதிகள். ஜோதிடம் குறித்து இவர்கள் நிமித்தம் பார்ப்பதற்காக, அதாவது ஓலைச் சுவடிக்கட்டில் நடுவில் நூலைப் போட்டுப் பார்த்தால் எந்தப் பக்கம் வருகிறதோ அந்தப் பக்கத்தில் ஒரு திருக்குறளும், ஓரத்தில் ஒரு ஜோதிடக் குறிப்பும் இருக்கும். அந்த ஜோதிடக் குறிப்பை பார்ப்பதற்கான ஒரு புனித நூலாக மட்டுமே திருக்குறளை இம்மடாதிபதிகள் அப்போது பார்த்து வந்தனர்.

தற்போது இந்த சுவடிகள் 3 பிரதிகளாகவும் உள்ளன. ஆனால் இம்மூன்று சுவடியிலும் அறத்துப்பால்,பொருட்பால்,காமத்துப்பால் இவை மட்டுமே இருந்தன. சுவடியில் இருக்கும் ஜோதிட குறிப்பு ஆன்மிக குறிப்பாக இருந்ததால் மோட்சத்துப்பாலாக இருந்தது. இதை பின்னாளில் சம்பந்தப்பட்ட முற்போக்கு கூட்டம் மத மூட நம்பிக்கை என்று நிராகரித்து திருக்குறளில் சேர்க்காமல் இருட்டடிப்பு செய்தனர்.

நமக்குத் தெரிந்து அறுபத்து மூன்று நாயன்மார்களுக்கு மேலும் ஒன்று உண்டு. 'அப்பாலும் அடி சார்ந்தார்.' கபிலர், பரணர், திருவள்ளுவர் முதலான நாற்பத்து ஒன்பது கடைச்சங்கத் தமிழ் புலவர்கள்தான் 'பொய்யடிமை இல்லாத புலவர்கள்' என்ற நாயன்மார்கள். திருவள்ளுவரும் மேற்கூறிய 49 புலவர்களைப் போல விபூதி, ருத்ராட்சம் அணிந்து பஞ்சாட்சரம் என்ற நமச்சிவாய மந்திரத்தை ஓதி மதுரை சங்கத் தலைவனான சொக்கநாதரை இரு கையை கூப்பி வணங்கியவாரே அகத்தியம்,தொல்காப்பியம் ஆகிய இலக்கண நூல்களின் வழிகாட்டுதலின் படி சங்க இலக்கியங்கள் பாடியதை சேக்கிழார் பெரிய புராணத்தில் குறிப்பிடுகிறார்.

பொய்யாமொழிப் புலவர் என்று போற்றப்பட திருவள்ளுவ நாயனார் என்றே, திருவள்ளுவர் பூஜித்த லிங்கத்தை இன்று வரை பூஜித்து வரும் திருவள்ளுவரின் பெண் வழி பேரன்களான இந்த மடாதிபதிகள் கூறி வருகின்றனர். சில புலவர்களின் சூழ்ச்சியால் சேர நாட்டுக்குத் தஞ்சம் போக வேண்டியனாது. இன்றும் கேரளா பக்கம் திருவள்ளுவ நாயனாருக்குக் கோயில்கள் உண்டு. சடையப்ப வள்ளல் ஆதரவுடன் ஏலேல சிங்கன் வாரிசில் ஒருவர்தான் மைலாப்பூரில் இருந்து கரூர் பரமத்தியிலுள்ள நடந்தை, முடவாண்டி, சத்தியமங்கலம் ஆகிய ஊர்களில் குடியேறியதாக அறிகிறோம். ஏலேல சிங்கனிடம் இருந்த லிங்கம் இந்திரனுக்கு அறும் பாவம் தீர்த்த லிங்கம், தந்திரத்தில் கொடிய விஷத்தை அறுத்த லிங்கம், சதா சிவானுக்கேற்ற லிங்கம், சொக்கலிங்கம் என்ற குறிப்பும் மடத்தில் உள்ளது.


இக்கட்டுரைக்குச் செய்திகளை வழங்கிய நண்பர் திரு.T. பாலசுப்ரமணிய ஆதித்யன் அவர்களுக்கு நன்றி.

சர்ச்சைக்குள் சித்தர்!

கடந்த இரண்டு நாட்களாக திருவள்ளுவர் Top 5 இடத்தில் பேசப்பட்டு வருகிறார். அவர் காவியா வெள்ளையா? நீறில்லா நெற்றியா திரிபுண்டரமா? முப்புரி நூல் பூண்டாரா இல்லையா? உருத்திராட்சம் தரித்தாரா இல்லையா? குடும்பஸ்தரா சன்னியாசியா? சந்ததி இருந்ததா இல்லையா? 'அறம் பொருள் இன்பம்' என முப்பால் இருக்க நான்காம் பால் குறிக்கும் 'வீடு' தொகுப்பு அழிக்கப்பட்டதா மறைக்கப்பட்டதா? ஆதிக்க ஆங்கிலேயராலா திராவிடக் கூட்டத்தாலா? 
இங்ஙனம் திருவள்ளுவரே திகைக்கும் அளவில் கலி 5120 ஆண்டில் அவரைப் பற்றி விசாரணைகள் நடக்கின்றது. முதன் முதலில் 1812 ல் F.W.எல்லிஸ் பதிப்பித்ததுதான் முதல் பிரதி. அதன் பிறகு பல 'மூலமும் உரையும்' தொகுப்புகள் அச்சாகி வெளிவந்தது. இங்கே படத்தில் நீங்கள் காண்பது 1885 ஆம் ஆண்டு முருகேச முதலியார்வாள் பதிப்பின் அட்டைப்படம்.
எல்லாவற்றையும் ஆராய்ந்து பார்க்கும்போது திருவள்ளுவர் சிவசத்தியை பூஜித்த நாயன்மாராகக் கருதப்படுபவர். போகர் இவரை 'அறிவான ஞான சித்து' என்கிறார். போகர் கொங்கணர் திருவள்ளுவர் ஔவையார் கோரக்கர் எல்லோரும் சமகாலத்து சித்தர்கள். குரு- சீடர் மரபில் வருவோர். 'சங்கத்து புலவர்களின் நந்நூலேற்ற அகத்தியர்' என்கிறார் போகர். Agathiyar school of syllabus பின்பற்றப்பட்டு 'தேர்வுபெற்ற சித்தர்' என அங்கீகரிக்கப்பட்டவர் திருவள்ளுவர். அப்படியெனில் அவர் சமஸ்கிருதத்திலும் புலமை பெற்றவராகத்தான் இருந்திருக்க வேண்டும். (இது போகர் உரைக்கும் தகுதி அளவுகோல்படி.)
சுமார் 40 ஆண்டுகளுக்கு முன் ஓவியர் வேணுகோபால சர்மா பக்திப்பழமாய் வரைந்த திருவள்ளுவரின் படம் நிராகரிக்கப்பட்டது. பிற்பாடு அவரை சமணத் துறவியாக பட்டை கொட்டை இல்லா வெறுமையுடன் வரைந்த படம் ஏற்கப்பட்டது. எப்படி திருமந்திரம் அக்காலத்திலேயே ஶ்ரீமந்த்ரமாலா என்று சமஸ்கிருதத்தில் இயற்றப்பட்டதோ அவ்வாறே திருக்குறளும் 'ஸ்லோக தோஹே' என்று அந்நாளிலே இயற்றப்பட்டு இன்றும் மறைப்பாக இருக்கலாம். எப்போதும்போல் நடக்கும் கூத்தை நாம் வேடிக்கைப் பார்ப்போம்.
Image may contain: 1 person
No photo description available.

ஞாயிறு, 27 அக்டோபர், 2019

காரணம் தெரிய 27 வருடங்களானது!

நான் சொல்லும் இப்பதிவு சற்று ஆச்சரியமானதாக இருக்கும். அது 1992-93. கல்லூரி மாணவனாக இருந்தபோது நான் கண்ட கனவைப்பற்றிச் சொல்கிறேன்.
விடியற்காலை கனவில் நான் காஞ்சி மகாபெரியவர் ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் முன்னே நின்றுள்ளேன். அவர் பிரம்பு நாற்காலியில் கால் நீட்டி அமர்ந்துள்ளார். அவருக்கு முன்னே தரையில் பழைய டேப்ரிகார்டிங் நாடா சுற்றிக்கொண்டிருக்க அவரை BBCயின் ஒரு நிருபர் பேட்டி காண்கிறார். இந்த ஆங்கிலேயர் கேள்வி கேட்க அதற்குப் பெரியவர் வாய்திறந்து பதில் சொன்னாலும் அது எனக்குக் கேட்கவில்லை. வலது உள்ளங்கையைப் புருவத்தின்மீது குவித்து அதிக ஒளியால் கண்கள் கூசாமல் இருக்க மறைப்பாக வைத்துக்கொண்டு என்னையும் பார்த்தார். ஆனால் அவருடைய குரல் சற்றும் எனக்குக் கேட்கவில்லை. ஆங்கிலேயர்க்கும் கேட்கவில்லை. ஆனால் ஒலிப்பதிவு நாடா சற்றிக் கொண்டிருந்தது. எனக்கு ஒரே தவிப்பு! அவர் சொன்னது எனக்கு ஏற்புடையதாக இருந்து நமக்குக் கேட்கவில்லையோ என்று மன சஞ்சலம். இதுதான் நான் கண்ட கனவு.
அன்று சீக்கிரமே எழுந்து விட்டேன். வீட்டு வாயிலில் அன்றைய ஆங்கிலச் செய்தித்தாள் கிடந்ததை எடுத்து வந்து செய்தித்தாளை முழுதுமாக விரித்துப் பார்க்கும்போது, கீழே ஒரு கட்டம்போட்ட விளம்பரம் இருந்தது. “The Voice of Sankara” Audio release at Narada Gana Sabha என்று அதில் செய்தி இருந்ததைப் பார்த்ததும் அதிர்ச்சி. நாம் கண்ட அந்த பேட்டியின் ஒலிநாடாவோ என்று நினைத்தேன். பிறகு சமயம் கிடைக்கும்போது அதை வாங்கிக் கேட்கவேண்டும் என்று நினைத்து அப்படியே காலம் ஓடியது. பிற்பாடு ‘தெய்வத்தின் குரல்’ புத்தகம் ஒன்றிரண்டை நூலகத்தில் படித்தேன். முழுதுமாக ஆறு பாகங்கள் வாங்கவில்லை.
நேற்று எதேச்சையாக ஒரு மருத்துவரின் பேட்டியைக் கண்டேன். அவர் டாக்டர். பிஸ்வகுமார், நரம்பியல் நிபுணர். இந்திய இராணுவத்தில் மருத்துவராகப் பணிபுரிந்தவர். மகாசுவாமியின் உடல்நலம் சோதிக்க பிரத்தியேகமாக வரவழைக்கபட்டார். பரமாச்சாரியர்க்கு 97 வது வயதில் ஆரம்ப நிலை ஸ்ட்ரோக் வந்துள்ளதைக் கண்டறிந்து மருந்து கொடுக்கலானார். இது வெளிவட்டத்தில் யாருக்கும் தெரியாமலே இருந்தது. மூப்பின் காரணமாக உடல்நலம் சரியில்லை என்றே நம்பப்பட்டு வந்ததாம். அதன்பின் வாராவாரம் வியாழக்கிழமையில் இவர் சென்னையிலிருந்து காஞ்சி மடத்திற்குச் சென்று அவரைத்தொட்டுப் பார்த்துப் பரிசோதனை செய்யும் பாக்கியத்தைப் பெற்றார். ஸ்ட்ரோக் வந்ததன் காரணமாக மகாசுவாமியின் குரல்வளை பாதித்திருந்ததால் அவர் தன் 98 முதல் 100வது வயதுவரை அதிகம் பேசாமல் மௌனம் காத்ததையும் டாக்டர் வெளிப்படுத்தினார். அவர் தன் கனகாபிஷேகத்திற்கு முன்பு அவசியம் இருந்தால் மட்டுமே பேசினாராம். 1994 ஆம் ஆண்டு நூறாவது வயதை பூர்த்தி செய்ய நான்கு மாதங்கள் இருக்கும்போது மார்கழி மாதத்தில் சித்தியடைந்தார்.
மஹாதேவ அம்சமாக இருந்தாலும் மனித சரீரத்தின் வினைப்பயனை அனுபவிக்க வேண்டியதுள்ளது என்பதற்கு இவர் உதாரணம். 1993ல் அவர் என் கனவில் பேச முற்பட்டும் அப்பேச்சு எதுவும் எனக்குக் கேட்காமல் போனதன் காரணத்தை இன்று 27 வருடங்கள் கழித்து அறியப்படுத்தினார்! இனி என் மனதில் நெருடல் இல்லை.
Image may contain: one or more people, people standing, beard, eyeglasses and closeup

செவ்வாய், 22 அக்டோபர், 2019

பழசென்ன புதுசென்ன?

சமையல் செய்யாவிட்டால் ஹோட்டலுக்குப் போய் சாப்பிட்டுக்கொள்ளலாம். வங்கி வேலைநேரம் முடிந்தபின் பணம் எடுக்க ஏடிஎம் சென்று எடுக்கலாம்.தேசிய பண்டிகை ஞாயிறன்று வந்தால் மறுநாள் விடுமுறை அறிவிக்கலாம். தின்பண்டம் செய்ய முடியாவிட்டால் கடைசி நேரத்தில் கடையில் வாங்கிடலாம். பண்டிகைக்குப் புத்தாடை வாங்க ஜவுளிக் கடைக்குச் சென்றிடலாம். ஆனால் புதுத்துணி வாங்கி தைக்கக் கொடுத்துவிட்டு கெடு தேதிக்குக் காத்திருக்கும்போது அந்த தையல்காரரே இறந்துவிட்டால், ஐயோ பாவம்! துணி இன்னும் வெட்டப்படாமல் தைக்கப்படாமல் அப்படியே மூட்டையாக அடுக்கி வைக்கப்பட்டால் டெலிவரிக்குக் காத்திருந்த வாடிக்கையாளர்கள் வேறெங்கும் கொடுத்து தைக்க அவகாசமின்றி ஏமாற்றம் அடைவார்கள்.
எங்கள் பகுதியில் இருந்த டெய்லர்க்கு என்ன நேர்ந்ததோ தெரியவில்லை அங்காடி வீதியெங்கும் அஞ்சலி சுவரொட்டியில் காணப்பட்டார். சிறிய கடையின் ஷட்டர் மூடியே இருந்தது. உடனே அவருடன் உரையாடிய நினைவுகள் ஓடியது. முன்னொரு சமயம் ஒரு மாலைப்பொழுதில் கடைக்குச் சென்றேன்.
நான்: "சார், இந்த பேன்ட் கொஞ்சம் டக் பிரிச்சு தைக்கணும்'
அவர்: "பழைய துணி எல்லாம் விளக்கு வைக்கிற நேரத்துல எடுக்க மாட்டேன்"
நான்: "இன்னைய பொழுதுக்கு மட்டும்தானா இல்ல எப்பவுமே தைக்கிறது இல்லையா?"
அவர்: "எப்பவுமே தைக்கமாட்டேன். வேற யார்கிட்டேயாவது கொடுங்க" என்று சொல்லிக்கொண்டே மேசைமீது விரித்திருந்த அளவு மார்கிங் செய்த பிளவுஸ் துணியை டர்...டர் என்று வெட்டிக்கொண்டு இருந்தார்.
நான்: "அச்சச்சோ.. விளக்கு வெச்ச நேரத்துல ஒரு நல்ல துணியை இப்படி அபசகுணமா கிழிச்சு வெட்றீன்களே.. சென்டிமென்ட் பேசுறீங்க.. இது மட்டும் பரவாயில்லையா?" என்று கலாய்த்தேன்.
துணி கத்தரிப்பதை நிறுத்தி விட்டு ஏறெடுத்து என்னை முறைத்தார்.
அவர்: "தைக்க மாட்டேன். பிரச்சனை பண்ணாம போங்க சார்' என்றார்.
தொழில் என்று வந்தபின் துணியில் புதிதென்ன பழையதென்ன? இதுபோல் நம்மைக் கடந்து போகும் கதாபாத்திரங்கள்தான் எத்தனை விதம்!
No photo description available.

ஞாயிறு, 20 அக்டோபர், 2019

மின்னும் ஆக்கங்கள்

நாம் கையாளும் மின்னியல் சர்கியூட் எல்லாமே மிகவும் பழமையானது. ஏற்கனவே இருந்த சூத்திரங்கள் கலியின் தொடக்கத்தில் காணாமல் போனது. பிறகு ஐரோப்பிய விஞ்ஞானிகள் மூலம் ஒவ்வொன்றாக வெளிப்பட்டது. அக்கால கட்டத்தில் பாரதத்தில் இவை ஒரு சில வைத்திய குடும்பத்திற்கு மட்டும்தான் தெரிந்திருந்தது. அப்படியிருந்தும் அவை பெரிய அளவில் பயன்படவில்லை. எல்லாம் சிவ சித்தம். சித்தர்கள் ராஜ்ஜியத்தில் இப்போது சித்த நூல்களில் உரைக்கபட்டவை எல்லாமே அதிவேகமாகப் புலப்பட்டு வருகிறபடியால் நாம் பிரமித்து நிற்கிறோம். கீழடி கதையும் அப்படித்தான்.

தோண்டிக்கொண்டே போய் வெறும் பானை சில்லுகள், செங்கல் சுவர்கள், பாசி மணிகள், சுடுமண் சுதைகள் மட்டும் கிட்டுவது சரிபடாது. ஊரகக் கட்டுமான குடியிருப்பின் வாஸ்து வரைபடமும் அக்காலத்து பயன்பாட்டுப் பொருட்கள் ஓரளவுக்குத் தெரியவரும். ஆனால் நவீன அறிவியல் உபகரணங்கள் மற்றும் புதைந்த ஆக்கங்கள் தெரியவருவது நம் கையில் இல்லை. அதை அவன்தான் வெளிக்கொண்டு வரவேண்டும். அதுவரை இப்படியெல்லாம் இருந்துள்ளன என்று வேதங்கள்/சித்தநூல்கள் வாயிலாக நாம் தெரிந்து கொள்வதோடு சரி. மாமல்லபுர துறைமுகம் மற்றும் நகரத்தின் கடலடி அகழ்வாராய்ச்சிக்கு மீண்டும் திட்டம் போட்டுள்ளனர். ஆச்சரியமான பொருட்களும் கிடைக்கலாம் முக்கியத்துவம் பெறாதவைகளும் கிடைக்கலாம். 



சனி, 19 அக்டோபர், 2019

குவாங்சு தில்லைவனம்

நான்காம் காண்டத்தில் போகர் தென் சீனப்பகுதியை விவரிக்கிறார். எழிலான தெற்கு சீனபதியோரம் நதிகளும் ஓடைகளும் நிறைந்த ஒரு தில்லைவனம் உண்டு. ஐராவதம் போன்ற பனிமலைகள் சூழ்ந்த இப்பகுதியில் பல தவசிகள் வாழ்ந்துள்ளார்கள். நம் தேசத்தில் நமக்குத் தெரிந்த ஒரே தில்லைவனம் சிதம்பரம் அருகிலுள்ள பிச்சாவரம் சதுப்பு நிலக்காடு மட்டும்தான்.

ஆனால் போகர் சுட்டிக்காட்டும் அத்தில்லைவன பூகோளப் பகுதி இன்றைய சீனாவின் குவாங்சு பகுதியில் உள்ளது. அங்குதான் ரிஷி முனிகள் திரண்டு நின்று சிவவாக்கிய சித்தருக்கு உபசாரங்கள் செய்து கைகுவித்து நின்றிருந்தார்கள். குவலயத்தை மறந்து மூன்று யுகம் சமாதியிலிருப்பேன் என்று கூறிய சிவவாக்கியர், இரண்டு கோடி ஆண்டுக்காலம் வரை சமாதியிலிருந்து விட்டு மீண்டும் பூமிதனில் எழுந்து வந்தார் என்கிறார் போகர்.

பெரிய அளவில் வர்த்தகங்கள் நடந்துவந்த துறைமுகப் பட்டினம்தான் குவாங்சு. இங்குதான் போகர் தன் முந்தைய ஜெனனங்களில் லாவோசு @ போயாங் என்ற பெயருடன் கிமு12000 - கிமு4 வரை பன்னிரண்டாயிரம் வருடங்கள் வாழ்ந்தார். பிறகு தேசம் பெயர்ந்து இங்கே வந்தார். இந்த குவாங்சு  பட்டினத்திலிருந்து உயர்தரமான பட்டு மற்றும் வாசனாதி திரவியங்கள் ஏற்றுமதியாகி கப்பல் மூலம் நம் மாமல்லபுரம் கடல் முகத்திற்கு வந்தது. இதுதான் silk route பட்டு வர்த்தக வழி என்றானது.

மல்லனின் நீர்ப்பெயற்று துறைமுகத்திலிருந்து பாலாறு வழியே சரக்குகள் படகுமூலம் சிரமமின்றி பல்லவர் தலைநகராம் காஞ்சியைச் சென்றடைந்தது. இதன் காரணமாகவே பண்டைய காலந்தொட்டு இன்றுவரை காஞ்சியில் பட்டு நெசவு பிரசித்தம். பாலாற்றின் கிளை நதிதான் வேகவதி. சீன யாத்திரிகர் யுவான் சுவாங் தன் பயணக் கட்டுரையில் காஞ்சியின் பெருமைகளை உரைத்ததை நாம் அறிவோம். இன்றைக்கு நாம் கேள்விப்படும் பட்டினம் என்று பெயர் தாங்கிய ஊர்கள் எல்லாமே கடலோர துறைமுகங்களாக, அதன் தொடர்புடைய வர்த்தக மையங்களாக ஒரு காலத்தில் இருந்தவை என்பதை மறக்ககூடாது.


வெள்ளி, 18 அக்டோபர், 2019

ஷிலின் பவளக்குன்று

போகர் தன்னுடைய பெருநூலில் சீனாவிலுள்ள சுவாரசியமான ஓர் இடத்தைப்பற்றி விளக்குகிறார். அஷ்டதிசையில் பறக்கும்போது வடக்கு முகத்தில் ஒரு கானகத்தில் கடுவெளி சித்தரைக் கண்டார். காலாங்கியின் சீடன் போகர் என்று கூறி அவர் வணங்கியதும், கானகத்தைக் காணவந்த நோக்கம் என்ன என்று கேட்க, பவளக்காட்டைப் பார்க்க வேண்டுமென்று விண்ணப்பத்தை வைத்தார்.
சித்த நாதாக்கள் யாரும் அறியாத அக்காட்டில் கூறான பாறைகள் நிறையவுண்டு. குதிரையின் சிரசுபோல் பாறையின் முனைகளிருக்க ஆளை விழுங்கிடும் வகையில் நெடும் உயரத்திற்கு வளர்ந்துள்ளது என்கிறார் போகர். கதண்டு மகரிஷியாரிடம் சென்றால் பவள மலையைக் காண்பிப்பார் என்று கடுவெளி சித்தர் கருத்துச் சொல்ல, தன்னை அழைத்துச் சென்று உதவும்படி வேண்டினார். அப்படியே கதண்டு மகரிஷியும் இவருக்குப் பவளக் காட்டின் ரகசியத்தைச் சொல்லலானார்.
சீனாவின் யுனன் மாகாணத்தில் 400sqkm பரப்பளவில் உள்ள 270 மில்லியன் ஆண்டுகள் பழமையான சுண்ணாம்பு மலைகளான Shilin (எ) Stone Forestஐ தான் இங்கே போகர் குறிப்பிட்டார். அவர் குறிப்பிட்ட இன்னும் பல இடங்களை நான் கண்டு ஆய்வு செய்ததை பின்வரும் பதிவுகளில் சொல்கிறேன்.
Image may contain: plant, outdoor and nature

சனி, 12 அக்டோபர், 2019

காஞ்சி போதிதர்ம புத்த விஹாரம்

சீன அதிபர் வருகைக்குப்பின் பல்லவன்- காஞ்சி- போதிதர்மர்- பட்டு- கடல்வழி- வர்த்தகம் என எல்லா அம்சங்களும் தூசி தட்டப்பட்டு உயிர்த்தெழுந்து விட்டன. இதுவரை சாதாரண சுற்றுலா தலமாக விளங்கிய தலம் இன்று உலக அளவில் பார்வையைப் பெற்றுள்ளது.
தொலைக்காட்சியில் நேற்று ஒரு நேர்காணல் பார்த்தேன். அதில் ‘போதி தர்மரை சீனாவில் பௌத்த பிக்குகள் போற்றுகிறார்கள். ஏன் தமிழகத்தில் பல்லவ இளவரசரை நாம் கொண்டாடவில்லை?’ என்று அவர் கேட்டார். புறக்கணித்தது இந்துக்களா பௌத்தர்களா? அதற்குச் சரியான விளக்கத்தை ஆன்மிகம் மற்றும் சித்தவியல் கண்ணோட்டத்தில் அவர் தரவில்லை. போதிதர்மரை ஏதோ இங்கே நாம் புறக்கணித்ததுபோல் சொன்னார். சன்மார்க்க இந்துக்கள் தினமும் காஞ்சி விஹாரத்திற்குப்போய் புத்தரையும் போதிதர்மரையும் போற்றுவதற்கு எந்த அவசியமுமில்லை. சைவமும் வைணவமும் தழைத்த ‘நகரேஷு காஞ்சியில்’ பௌத்தமும் வேரூன்றியது. அவையவை அதனதன் மார்க்கத்தில் போய்க்கொண்டிருந்தது. காஞ்சியில் பல்லாயிரக்கணக்கான பிக்குகள் விஹாரத்தில் தங்கியுள்ளனர் என்று அன்றே யுவான் சுவாங் தன் பயணக் குறிப்பில் எழுதியிருந்தார்.
சீன நாகரிகம் பற்றிய நூலில் நான் படித்தபோது பௌத்த மார்க்கத்தின் உட்பிரிவான தாவோ மதம் நிறுவிய லவோசு மற்றும் குரு கன்பூசியஸ் பற்றி விளக்கம் உள்ளது. அந்த லவோசு @ போயாங் நம் சித்தர் போகர் தான் என்பதை அவர்கள் அறியார். லவோசு இதுவரை பதிமூன்று பிறவிகள் எடுத்ததாகச் சீன வரலாற்றுப் பக்கங்கள் சொல்கின்றன. ‘பரங்கியர் தேசத்தில் பன்னிரெண்டாயிரம் வருடங்கள் வாழ்ந்தேன்’ என்று போகர் சொன்னபோது அது கிமு 5ம் நூற்றாண்டு. பதிமூன்றாம் ஜெனனமாக போகர் அங்கே லாவோசுவாக இருக்கும்போதுதான் நாட்டைவிட்டே வெளியேறி சீனப்பெருஞ்சுவரைத் தாண்டி மேருவிற்கு நிரந்தரமாக வந்தார். இன்றும் அதே சீனராகாவே சமாதியில் உள்ளார். ஆனால் இந்த புத்தவர்ம பல்லவன் @ போதிதர்மர் இங்கிருந்து போனதே கிபி 5-6 நூற்றாண்டில்தான். பின்னாளில் சீனாவில் ஜென் தத்துவ ஞானியானார்.
இத்தனை உண்மைகள் தெரிந்தும் பழனியில் போகரை நாம் கொண்டாடுவதைப்போல் லாவோசுவைக் கொண்டாடுவதில்லை. அதற்கு அவசியமுமில்லை. ஆதிபுத்தரை கண்ட காலாங்கியின் சீடர் போகரை வேறு விதமாக நாம் பார்க்கவில்லை. அவர் தானேதான் நபி இயேசு என்று உரைத்தும் நாம் ஏற்பதற்கில்லை. ஏன்? நம்முடைய கலாச்சாரம் பண்பாடு சிவபக்தி சித்தநெறி அடிப்படையில் என்ன தகுமோ அதன்படிதான் வழிபடுகிறோம். இதில் ஒரு தவறுமில்லை. இங்கே புதிதாய் என் பதிவுகளைப் படிப்போர்க்கு நான் மேலே சொன்னது விளங்குமா என்பது தெரியவில்லை. தேவாரம் பாடியவர்களும் சமண/பௌத்த மதத்தை ஏற்கவில்லை. இதுபற்றிய குறிப்புகள் அதில் நிறைய உள்ளது.
திருமழிசையிலுள்ள மருந்தீஸ்வரர் கோயிலுக்குப் பிரதோஷ வேளையில் முன் எப்போதோ சென்றிருந்தேன். அங்கே பூஜைகள் முடிந்து அலங்காரம் செய்யப்பட்டுக் கொண்டிருக்கும்வரை திரை மூடியிருந்தது. திரை விலகும்வரை அங்கே உத்தரத்திலும் இண்டுயிடுக்கு உயர் தூண்களிலும் என் பார்வையை மேயவிட்டுக் கொண்டிருந்தபோது. அங்கே மேலே பிள்ளையாருக்குப் பக்கத்தில் புத்தர் சிலைகள் இருந்ததைக் கண்டேன். அதற்கு யாரும் பிரத்யேகமாய் மஞ்சள் குங்குமம் பூசி வஸ்திரம் சாற்றி வழிபடவில்லை. புத்தர் சிற்பம் கருவறையில் மூலவராக இல்லாமல் அது அதுவாகவே உள்ளது. அவ்வளவுதான்! படத்தில் நீங்கள் பார்ப்பது காஞ்சியிலுள்ள பழமையான போதிதர்ம புத்த விஹாரம்.



வெள்ளி, 11 அக்டோபர், 2019

பதி சேவை!


நான் காலையில் செய்தித்தாள் வாங்கப்போகும் கடைக்கு 65 வயதான மூதாட்டி வருவர். அவர் தினத்தந்தி பேப்பர், ஒரு பீடி கட்டு, உதிரியாக 3 சிகரெட்டு என எல்லாம் சேர்த்து ரூ.50 க்கு வாங்குவார். அவர் வாங்கும் அரை லிட்டர் பால் விலை ரூ.23தான். ஆனால் அதைவிட இந்த புகைப் பொருட்களின் விலைதான் அதிகம். பீடி கட்டுக்கு ப்ரீ தீப்பெட்டி நேத்து தரலியே... எங்கேனு வூட்ல என்ன கேக்க சொல்ல நியாபம் வந்துச்சுஎன்று கடைக்காரரிடம் சொன்னார். டாஸ்மாக்கில் இதுபோல் எத்தனை மூதாட்டிகள் வந்து வாங்குவார்களோ நமக்குத் தெரியாது. கல்லூரிப் பெண்கள் வாங்கி அங்கேயே சரக்கு அடிக்கும் படத்தைத்தான் பார்த்துள்ளோம்.
இந்த மூதாட்டியின் முகத்தில் எப்போதும் ஒரு சோகம். அது கணவனுக்கா மகனுக்கா மாமனாருக்கா? கணவன் சீக்காளியா அடக்கியாள்பவரா? எதுவும் தெரியாது. இப்படியும் சமூகத்தில் பெண்கள் வாய்மூடிக்கொண்டு தினமும் கடமையைச் செய்கிறார்கள். இவர்களுக்கே மூப்பு வந்தும்கூட கணவன் போடும் சோற்றுக்காக தரும் நிழலுக்காக இதற்கெல்லாம் கட்டுப்படுகிறார்கள். அந்தோ பரிதாபம்!


வியாழன், 10 அக்டோபர், 2019

சம்பவாமி யுகே யுகே!

பகவத்கீதையை முதன் முதலில் உர்துவில் மொழிபெயர்ப்பு செய்தவர் முகம்மது மெஹ்ருல்லாஹ். பிற்பாடு அவர் இந்து மதத்தைத் தழுவினார். அரபு மொழியில் முதல்முறை பெயர்ப்பு செய்தவர் பாலஸ்தீனத்தின் எல் ஃபதே. இவர் இஸ்கான் பக்தி இயக்கத்தில் சேர்ந்தார். ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பு செய்தவர் சார்ல்ஸ் வில்கிநோஸ். அவரும் இந்துவாக மாறினார். உலக மதங்களில் இந்து மதம்தான் உயிரோடு இருக்கும் என்று அறிவித்தவர். ஹீப்ரூ மொழியில் முதலில் மொழியாக்கம் செய்தவர் இஸ்ரேல் நாட்டின் பெஸாசிஷன் ஃபானா. பின்னாளில் அவர் இந்துவாக மாறி இந்தியாவிற்கே வந்து தங்கிவிட்டார். ருஷ்ய மொழியில் மொழிபெயர்ப்பு செய்தவர் நோவிகோவ். அவரும் கிருஷ்ண பக்தர் ஆனார்.
இதுவரை 283 ஆசிரியர்கள் பகவத் கீதையை பல்வேறு மொழிகளில் பெயர்ப்பு செய்துள்ளனர். இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் அல்-குரானை முதன் முதலில் பெங்காலியில் மொழி பெயர்ப்பு செய்த கிரீஷ் சந்திரசென் இஸ்லாமுக்கு மதம் மாறவில்லை. ஏனென்றால் அவர் ஏற்கனவே கீதையைப் படித்துப் பாராயணம் செய்தவர்.
உண்மை இப்படி இருக்க, நம்மூர் மூடர்கள் பாசறையில் மணியும் சுடலியும் சீமானும் டேனியலும் ஜீவனம் செய்ய இன்னும் மறுப்புப் பிரச்சாரம் செய்வது நகைப்புக்குரியது. கிருஷ்ண பரமாத்மா இவர்களிடத்தும் கருணைக் காட்டி வருகிறார் என்பது நிரூபணம்.

புதன், 9 அக்டோபர், 2019

டப்பா கார்

அது 78-79 வருடம் என்று நினைக்கிறன். என்னுடைய பெரிய அத்தை மைலாப்பூர் கச்சேரி சாலையில் வசித்தார்கள். அவருடைய கணவர் திரு.மீனாட்சி சுந்தரம் அப்போது காவல்துறை ஆணையராகப் பதவியில் இருந்தார். ஜூம்மா மசூதி பள்ளிவாசலுக்கு நேர் எதிர் வீடு. முன்பக்கமும் பின்பக்கமும் ஓடு வேய்ந்த பெரிய பங்களா. என் சிறுவயதில் கோடை விடுமுறையில் அங்கு வந்து தங்கியதுண்டு. மழையோ வெயிலோ வீட்டு வாசலில் பூட்டு-குடை ரிப்பேர் செய்யும் ஒரு கிழவனார் சிறிய டிரங்கு பெட்டியுடன் எப்போதும் அமர்ந்திருப்பார்.

ரோல்ஸ் ராய்ஸ் மாடல் வண்டியைப் பார்த்தாலே அதை 'டப்பா' கார் என்றுதான் என் சிறுவயதில் சொல்லி வந்தேன். கருத்த பச்சை நிறத்தில் உப்பலாக பழைய வண்டியாக இருந்ததுதான் அதற்குக் காரணம். அது விலை மதிப்பான வண்டி என்பது அப்போது எனக்குத் தெரியாது. 'இன்னுமா டப்பா கார் வெச்சிருக்கீங்க?' என்று நான் கேட்க, 'டேய், இது நல்ல ரோல்ஸ் ராய்ஸ் வண்டிடா' என்று அத்தை சொல்வார். கார்ஷெட்டில் டப்பா கார் இருக்க அதன் பின்பக்க சீட்டில் நான் கால்நீட்டிப் படுத்துக் கொள்ளும் அளவுக்கு இருக்கைகள் பெரிதாக இருந்தது. இன்று அதுபோன்ற டப்பா கார்கள் வின்டேஜ் கார்ஸ் கண்காட்சியாக வருடா வருடம் ஒரு நாள் சாலையில் அணிவகுத்துச் செல்கின்றன.

நாயைக் குளிப்பாட்ட, தோட்டப்பணி செய்ய, கைத்துப்பாக்கியைத் துடைக்க, கார் சுத்தம் செய்ய, கடைக்குச் சென்றுவர, கார்ப்பரேஷன் தண்ணீரை ரிக்ஷாவில் பிளாஸ்டிக் குடங்களில் கொண்டுவர என்று வீட்டுவேலை உதவிக்கென ஒரு காவலர் ஆர்டர்லி பணியில் இருந்தார்.

அண்மையில் அவ்வழியே போகும்போது ஒலி பெருக்கியில் தொழுகை கேட்கவே, சட்டென திரும்பி எதிர்புறம் அந்த பங்களா இருக்கிறதா என்று பார்த்தேன். அது இருந்த சுவடே இல்லை. அவ்விடத்தில் சுமார் பத்து பிளாக்கு அடுக்குமாடி காவலர் குடியிருப்பு கட்டப்பட்டுள்ளது. அப்போது என் பழைய நினைவுகள் வந்துபோயின.




ஆய்வும் சர்ச்சையும்!

கடந்த சில தினங்களாக சுபாஷினி என்ற பெயர் செய்தியில் அடிபடுகிறது. கீழடி அகழாய்வு முடிவுகள் குறித்து தன் கருத்தைச் சொன்னது முதல் ஜெர்மனியில் பொது நூலகத்தில் சங்ககால தமிழ்ச் சுவடிகளைப் படித்ததுவரை அவர் தெரிவித்தவை மிகுந்த சர்ச்சைக்குள்ளாகி வந்துள்ளது. மேற்கண்ட எந்தவொரு தலைப்பிலும்/துறையிலும் அவருக்கு முன்னனுபவம் இல்லாதபோது அவர் தன்னை எப்படி வரலாற்று ஆய்வாளராக முன்னிறுத்திக் கொண்டு கருத்தைச் சொல்லலாம் என்று முகநூல் முதல் ட்விட்டர் வரை எதிர்ப்பும் விமர்சனமும் பெருகியுள்ளது.

இன்னொரு பக்கம் அவர் தமிழர் அல்ல கழகம் சார்ந்த திராவிட வடுகர் என்றும், இத்துறையில் ஆய்வுப் பட்டம்கூட பெறாதவர் எப்படி அதிகாரபூர்வமான கருத்தைச் சொல்ல முடியும்? என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளது. இவருக்கு ‘ஒலைத்திருடி’ என்ற பட்டப்பெயரும் முகநூலில் சூட்டியுள்ளார்கள்.

ஜெர்மனியில் உள்ள சுவடிக்கட்டுகள் கடந்த 80 ஆண்டுகளாக இங்கிருந்து போயுள்ளது. அதில் தமிழ்/சமஸ்கிருதம் பெரும்பான்மையான எண்ணிக்கையில் உள்ளன. சாமானியர்களால் அது திருடப்பட்டிருக்காது. தமிழ் இலக்கியம் நன்கு படித்தவர்கள் மூலமாகவோ, சித்த வைத்தியர்கள் மூலமாகவோ, பெரும் பணத்திற்கு ஆசைப்பட்டு கொடுத்திருப்பார்கள். இக்காலத்தில் சிலை திருட்டு நடப்பதுபோல் அன்றும் பெரிய வலைப்பின்னலில் இருந்துள்ளது. அகத்தியர்/போகர் மற்றும் மூத்த சித்தர்கள் அருளிய பெருநூல் காவியங்கள் அதில் போயுள்ளன. சங்க இலக்கியம் என்றதுமே வெறும் பத்துபட்டு/எட்டுத்தொகை போன்றது என்று உடனே முடிவு செய்யக்கூடாது. நான் சொல்பவை முன்னேறிய அறிவியல்/ மருத்துவ தொழில்நுட்பம் சார்ந்த சங்கதிகள் நிறைந்த பன்னீராயிரம்/ பதினெண்ணாயிரம் மற்றும் பல. இலங்கை சீனா மலேயா மார்க்கமாகச் சென்றடைந்த மூலமும்/ பிரதியும் ஏராளம் என்று ஒரு சித்தரே என்னிடம் பல்லாண்டுகளுக்குமுன் கூறினார்.

அப்படியே உள்ளூரில் பறிபோகாத சுவடிக்கட்டுகள் இருந்தாலும் அது வடமொழியா? தமிழா? என்ற கேள்வி எழும். அது ஆரியத் திராவிடமா/ திராவிடமா/ குமரித் தமிழர் நாகரிகம் சார்ந்த நூலா? என்று பிரிக்கப்படும். அது ஆன்மிகமா/ இலக்கியமா/ முற்போக்கா என்ற உட்பிரிவும் வரும். இது நம் தமிழர் வரலாறே அல்ல என்று தீர்மானித்து, இது நொட்டை அது நொள்ளை என்று ஏதேனும் குரல் எழுப்புவார்கள். சுவடிப்பாடலில் கூறப்பட்ட கருத்து இப்படி அல்ல அப்படி என்று திருக்குறளுக்குப் பின்னாளில் உரை எழுதியோர் கதைபோல் ஆகிவிடும். அதைப் படித்து முடிக்கும்போது எந்த உரை சரி/ தவறு என்று நம்மால் உணர முடியாத அளவுக்குக் குழப்பம் நீடிக்கும்.

மொத்தத்தில் அவரவர் கட்சி/கழக நிலைப்பாடு நோக்கில் ஆய்வின் முடிவுகள் இருக்கவேண்டும் என்று எதிர்பார்த்துப் பேசுகிறார்கள். ஆய்வுகள் குறித்துப் பேசத் தகுதியானவர்கள் யார்? தொல்லியல் துறைதான். என்னதான் தமிழ் கல்வெட்டியல் படிப்புக்குப் பாடத்திட்டம் வகுத்த மூத்த தொல்லியலாளராகவே இருந்தாலும் அந்த ஆள் வடமொழி தெரிந்த ஆரியர் அதனால் அவன் உண்மை பேசமாட்டான் என்று ஒரு தலைபட்சமாகவே விமர்சனங்கள் இருக்கும். ஆரியனல்ல அவன் திராவிட கூட்டத்தைச் சேர்ந்தவன் என்றால் அவன் தமிழுக்கு எதிரான செய்தியைப் பரப்பி உண்மையை அமுக்கி விடுவான் என்றும் விமர்சனம் எழும்.

ஆக இப்போதைக்கு வெளிநாடுகளில் இருக்கும் எண்ணற்ற ஓலைச்சுவடிகள் அங்கேயே பாதுகாப்பாக இருக்கட்டும். இவர்கள் தோண்டி முடித்து சர்ச்சை தீரும்வரை கீழடியைவிட இன்னும் 2000 வருடம் பழமைவாய்ந்த ஆதிச்சநல்லூர் ஆய்வுகளைப் பற்றி நாம் தேடிக்கண்டுபிடித்துப் படிக்கலாம். கடத்தப்பட்ட சிலைகளை இன்றைக்கு மீட்டுக்கொண்டு வருவதைப்போல் சுவடிகளையும் மீட்கும் நாள் வரும். அதை சித்தர்கள் முடிவு செய்வார்கள்!
Image may contain: 3 people, people smiling, meme and text

திங்கள், 7 அக்டோபர், 2019

உத்தரகோசமங்கை: பதிவும் பொருளும்

முகநூல் வாயிலாக வரும் கட்டுரைகளில் முரணான செய்திகளை சிலர் ஆர்வக்கோளாறில் பதிவிடுவதுண்டு. அப்படியொன்றுதான் அண்மையில் நான் படித்த உத்தரகோசமங்கை பற்றிய செய்தி. 'பல யுகங்களுக்கு முன்பு பூமியில் இலவந்திகைப்பள்ளி (எ) உத்தரகோசமங்கை தலத்தில்தான் முதன்முதலாக இறைவன் சிவபெருமான் மங்களநாதராக மரகதக்கல்லில் வடிக்கப்பெற்ற நடராஜராக, இறைவி மங்களாம்பிகையாக எழுந்தருளினர் என்றும்; உமையவளுக்கு சிவபெருமான் வேத ரகசியங்களை உபதேசித்த தலம் என்றும்; இங்குதான் இராவணன்-மண்டோதரி திருமணம் நடந்ததாகக் கல்வெட்டு உள்ளது என்றும்; நவகிரகங்கள் உருவாகும் முன்பே இத்தலம் தோன்றியதாகும்' என்றும் அப்பதிவில் செய்தி இருந்தது. இப்பிரபஞ்சத்தில் கிரகங்கள் எல்லாமே சூரிய சந்திரர் தோன்றிய காலத்திலிருந்தே இருக்கின்றன. நவகிரகங்கள் ஒன்றையொன்று பார்த்துக் கொள்ளாத வகையில் சன்னதியில் வழிபடுவது வேண்டுமாயின் பிற்காலத்தில் இடைக்காடர் முறைப்படுத்தியதாக இருந்திருக்குமே தவிர, கிரகங்கள் உருவாகும் முன்பே இத்தலம் வந்தது என்ற செய்தி புதிதாக இருக்கிறது. நவகோள்களில் சனீஸ்வரனின் பாதிப்பு இராவணனுக்கு அதிகமாக இருக்கும் என்று ஜோதிட சாஸ்திரம் சொன்னது. இதனை முறியடிக்க நவகோள்களை சிறைப்பிடித்தான். அவர்களை தன் சிம்மாசனத்தின் படிகளாக அமைத்து மிதித்து ஏறிச்சென்றான். பூவுலகில் மனிதர்களின் ஊழ்வினைக்கேற்ப திசாபுக்திப்படி யோகம்/தண்டனை என எதுவும் தரமுடியாமல் கட்டுண்டுக் கிடந்தனர். அங்கு வந்த நாரதர், 'இராவணா! இவர்களைக் குப்புறப் படுக்கவைத்து ஏறுவது உன் வீரத்திற்கு அழகல்ல' என்று கூற, இராவணன் உடனே இவர்களைப் புரட்டிப் போட்டான். போட்டதுதான் தாமதம் சனீஸ்வரனின் பார்வை இவன்மீது விழ உடனே எழரைச்சனி பீடித்தது. அதன் பிறகு இவனுக்கு அவப்பெயர்களும் தோல்விகளும் வந்து இராமன் இவனைப் போரில் வீழ்த்தினான். இதை எதற்குச் சொன்னேன் என்றால், புராண/இதிகாச/வரலாற்றுப் பதிவுகளைப் பலபேர் படித்தும் பகிர்ந்தும் வரும் நிலையில் தல புராணத்தில் குறிப்பிடாத வாய்மொழியாக பரப்பப்படும் சில ஐதீகக் குறிப்புகளை உயர்வு நவிற்சியாகச் சொல்லும்போது முரணான அச்செய்தி தவறாகவே கிரகிக்கப் படுகிறது. “மண் தோன்றியபோதே மங்கை தோன்றியது" என்னும் பழமொழியை உள்ளபடி நேரடியாகவே பொருள் கொள்வோமாக! முகநூல் வாயிலாக வரும் கட்டுரைகளில் முரணான செய்திகளை சிலர் ஆர்வக்கோளாறில் பதிவிடுவதுண்டு. அப்படியொன்றுதான் அண்மையில் நான் படித்த உத்தரகோசமங்கை பற்றிய செய்தி. 'பல யுகங்களுக்கு முன்பு பூமியில் இலவந்திகைப்பள்ளி (எ) உத்தரகோசமங்கை தலத்தில்தான் முதன்முதலாக இறைவன் சிவபெருமான் மங்களநாதராக மரகதக்கல்லில் வடிக்கப்பெற்ற நடராஜராக, இறைவி மங்களாம்பிகையாக எழுந்தருளினர் என்றும்; உமையவளுக்கு சிவபெருமான் வேத ரகசியங்களை உபதேசித்த தலம் என்றும்; இங்குதான் இராவணன்-மண்டோதரி திருமணம் நடந்ததாகக் கல்வெட்டு உள்ளது என்றும்; நவகிரகங்கள் உருவாகும் முன்பே இத்தலம் தோன்றியதாகும்' என்றும் அப்பதிவில் செய்தி இருந்தது. இப்பிரபஞ்சத்தில் கிரகங்கள் எல்லாமே சூரிய சந்திரர் தோன்றிய காலத்திலிருந்தே இருக்கின்றன. நவகிரகங்கள் ஒன்றையொன்று பார்த்துக் கொள்ளாத வகையில் சன்னதியில் வழிபடுவது வேண்டுமாயின் பிற்காலத்தில் இடைக்காடர் முறைப்படுத்தியதாக இருந்திருக்குமே தவிர, கிரகங்கள் உருவாகும் முன்பே இத்தலம் வந்தது என்ற செய்தி புதிதாக இருக்கிறது. நவகோள்களில் சனீஸ்வரனின் பாதிப்பு இராவணனுக்கு அதிகமாக இருக்கும் என்று ஜோதிட சாஸ்திரம் சொன்னது. இதனை முறியடிக்க நவகோள்களை சிறைப்பிடித்தான். அவர்களை தன் சிம்மாசனத்தின் படிகளாக அமைத்து மிதித்து ஏறிச்சென்றான். பூவுலகில் மனிதர்களின் ஊழ்வினைக்கேற்ப திசாபுக்திப்படி யோகம்/தண்டனை என எதுவும் தரமுடியாமல் கட்டுண்டுக் கிடந்தனர். அங்கு வந்த நாரதர், 'இராவணா! இவர்களைக் குப்புறப் படுக்கவைத்து ஏறுவது உன் வீரத்திற்கு அழகல்ல' என்று கூற, இராவணன் உடனே இவர்களைப் புரட்டிப் போட்டான். போட்டதுதான் தாமதம் சனீஸ்வரனின் பார்வை இவன்மீது விழ உடனே எழரைச்சனி பீடித்தது. அதன் பிறகு இவனுக்கு அவப்பெயர்களும் தோல்விகளும் வந்து இராமன் இவனைப் போரில் வீழ்த்தினான். இதை எதற்குச் சொன்னேன் என்றால், புராண/இதிகாச/வரலாற்றுப் பதிவுகளைப் பலபேர் படித்தும் பகிர்ந்தும் வரும் நிலையில் தல புராணத்தில் குறிப்பிடாத வாய்மொழியாக பரப்பப்படும் சில ஐதீகக் குறிப்புகளை உயர்வு நவிற்சியாகச் சொல்லும்போது முரணான அச்செய்தி தவறாகவே கிரகிக்கப் படுகிறது. “மண் தோன்றியபோதே மங்கை தோன்றியது" என்னும் பழமொழியை உள்ளபடி நேரடியாகவே பொருள் கொள்வோமாக!

Image may contain: one or more people, people standing and shoes

சனி, 5 அக்டோபர், 2019

சதிராடும் ஜாதிப் பெயர்கள்!

விடுதலைப் போரட்ட வீரரும் 'ஞானபானு' பத்திரிக்கையாளருமாக விளங்கிய சுப்ரமணிய சிவா அவர்களின் 135 ஆவது பிறந்தநாள் நேற்று ஓசையின்றிக் கடந்தது. போன மாதம் போனால் போகிறது என்று பாரதியார் நினைவு கூறப்பட்டார்.
சுப்ரமணிய சிவா பிறந்த வத்தலகுண்டு ஊரைச் சேர்ந்த ஒருவர் இதுபற்றி நேற்று முகநூலில் தன் வேதனையைப் பதிவிட்டிருந்தார். சுப்ரமணிய சிவா திராவிட கழகத்தைச் சேர்ந்தவராக இருந்திருந்தால் கிடைக்கும் மரியாதையே வேறு. அதிலும் இவர் பிராமணராகப் போனதால் இவரை நினைவு கூறுவார் யாருமில்லை என்றும் போட்டிருந்தார். அப்பதிவில் கமெண்ட்ஸ் போட்ட கழகத்தின் அன்பர் இருவர் 'ஏன் ஜாதியைக் குறிப்பிடுகிறீர்கள்? எல்லோரும்தான் விடுதலைக்குப் போராடினார்கள். ஜாதி இல்லாமல் பொதுவாகப் பெயரைச் சொல்லுங்கள்' என்று விமர்சனம் செய்திருந்தார். அதாவது ஜாதிப் பெயரைச் சொன்னால் தேசத் தியாகிகளுக்கு அவமானம் போலவும், ஜாதிப் பெயரால் அவர்கள் வேற்றுமை பாராட்டியது போலும் அல்லவா இந்த ஆளுடைய பேச்சில் தெரிகிறது?
சிதம்பரனார், பாரதியார், சுப்ரமணிய சிவா ஆகிய மூவரும் ஒருவர் மீது ஒருவர் பிரிக்க முடியாத பாசமும் மரியாதையும் கொண்டவர்கள். தங்கள் ஜாதிகளைத் தூக்கிவைத்துப்பேசி அதையே பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்ததாகத் தெரியவில்லை. சிறைச்சாலையில் ஆங்கிலேயர்கள் சுப்ரமணிய சிவாவுக்குத் தொழுநோய் ஊசிபோட்டு சித்ரவதை செய்ததை வ.உ.சி அறிந்து அழுது விட்டார்.
வெவ்வேறு ஜாதிகளைச் சேர்ந்த இவர்கள் எல்லோரும் ஒன்றுபட்டது எப்படி? சிதம்பரம் பிள்ளை, சுப்ரமணிய பாரதி, முத்துராமலிங்கத் தேவர், ராமசாமி ரெட்டியார், காமராஜ் நாடார், வரதராஜூலு நாயுடு, ஸ்ரீனிவாச ஐயங்கார், திரு.வி. கல்யாணசுந்தர முதலியார், என எத்தனையோ நபர்களை ஜாதிப் பெயருடன் இணைத்து அடையாளம் காட்டமுடியும். அப்பெயரால் அவர்கள் எவ்விதத்தில் அசிங்கப் பட்டார்கள்? இக்கால சமுதாய மக்கள் அவர்களாகவே கற்பனை செய்துகொண்டு கோணங்கித்தனமான புத்தியுடன் தலைவர்களின் பெயர்களில் ஜாதியே வரக்கூடாது என்று கோஷம் போடுகிறார்கள்.
ஜாதிப் பெயரை நீக்கவேண்டுமென்றால் முதல் வேலையாக தேசப்பிதாவின் பெயரைத்தான் கையில் எடுக்கவேண்டும். வைசிய குலத்தின் ஜாதிப்பெயரைக் கொண்டு 'காந்திஜி' என்று அழைப்பதை நிறுத்த வேண்டும். 'மோஹன்ஜி, தாஸ்ஜி' என்று மாற்றவேண்டும். Hey, who is that Mohanji? No idea.

வெள்ளி, 27 செப்டம்பர், 2019

இதுதான் நல்ல தருணம்!





"பொறியியல் கல்லூரியில் பகவத் கீதை விருப்பப் பாடமாக இருக்கக்கூடாது" என்று கருப்புக் கழகத்தினர் முழங்குகிறார்கள். ஆம், இக்கூற்று மிகவும் சரி. அதை விருப்பப் பாடமாக வைக்காமல் கட்டாயப் பாடமாக வைக்க வேண்டும். பகவத் கீதையின் சில அத்தியாயங்களில் ஆழமான பொறியியல் சங்கதிகள் மறைந்துள்ளன. இதை ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து போன்ற நாடுகள் அலசி ஆராய்ந்து அதை சொந்தம் கொண்டாட தயாராக உள்ளது. பிறகு அக்கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமையும் வைத்துக் கொண்டு உலகையே ஆட்டிப் படைப்பார்கள்.
கடந்த அரை நூற்றாண்டாக அது கூடாது இது திணிப்பு என்று சொல்லியே எதையும் இங்கே மேற்கொள்ள விடாமல் தடுத்தனர். இன்று அதைப் படிக்கும் வசதி வாய்ப்பும் தேடல்களும் அருமையாக உள்ளபோது இவர்கள் முட்டுக்கட்டைப் போடுகின்றனர். மகாபாரதம் முழுக்க என்ன இல்லை?
கட்டுமானவியல், பொறியியல், அரசியல், போர் வியூகம், அஸ்திரங்கள், கதிர் வீச்சு, அணு ஆயுதங்கள், க்ளோனிங், காலப் பயணம், பரிமாணவியல், விமான சூத்திரம், தானியங்கி புரவிகள், போர் தற்காப்புப் பதுமைகள், ஸ்படிக கணினி, ஆளில்லா பறக்கும் வான் ரதம், மின்காந்த ஒலி அலைகள், தகவல் தொழில்நுட்பம், சப்த சூத்திரம், மின்னியியல், நீரியல், காற்றியில், வெப்பவியல் என எண்ணிலடங்கா பல நுட்பங்களைப் பற்றி நான் சொல்லிக்கொண்டே போகலாம். வேதத்தில் சொல்லப்பட்ட விஞ்ஞான சங்கதிகளை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்த ஏனைய தலைப்புகளையும் ஒவ்வொரு ஆண்டு படிப்பிலும் கட்டாயமாக்க வேண்டும்.
இத்துடன் நின்று விடாமல் அகத்தியர் பன்னீராயிரம், போகர் பன்னீராயிரம் ஆகிய நூல்கள் மீதுள்ள தடையை நீக்கி, போகர் எழாயிரம் போல் அறிவியல் மற்றும் ஆராய்ச்சி கோணத்தில் அறிமுகம் செய்ய வேண்டும். தகுதியானவர்களை வைத்து உலோக/ மூலிகை ஜாலங்கள், ரசவாதம், கனிமவியல், மருந்தியல், செயற்கை இரத்தினக்கல், முன்னேறிய பொறியியல் சூத்திரங்கள், என பலதரப்பட்ட தலைப்புகளை ஆழமாக நடத்தலாம். இப்போது விட்டால் பின் எப்போதும் இவற்றைக் கற்க சமயம் வாய்க்காது. இப்போதே இன்ஜினியரிங் பிரிவுகளுக்கு என்ன பாட திட்டம் என்பதை பல்கலைக் குழு கூடி திட்டமிட வேண்டும். நான் இதை வரவேற்கிறேன்!
அயல்நாட்டிலிருந்து எனக்கு வரும் சில மின்னஞ்சல்களில் இது குறித்த சந்தேகங்களைக் கேட்டும், நான் ஆய்வு செய்தவரை பெருநூல் காண்டங்களில் அவர்களுக்குத் தேவையான ஆராய்ச்சி சங்கதிகள் எதில் உள்ளன போன்ற கேள்விகள் வருவதுண்டு. கல்லூரி புராஜக்ட் செய்வோர், முதுகலை பட்டப்படிப்பு மாணவர்கள், மற்றும் உதவி பேராசிரியர்களும் இப்பட்டியலில் அடக்கம். ஆனால் இங்கோ அதைப்பற்றிய எந்த பேச்சும் கூடாது என்ற நிலைதான் உள்ளது.
எல்லோருக்கும் மகாபாரதம் என்றதுமே சூதாட்டம், இசை, காதல், தியாகம், அர்ப்பணிப்பு, காம சூத்திரம், கற்பழிப்பு, குரோதம், பழி, என்பதைத் தாண்டி வேறு எதையும் சிந்திப்பதில்லை.

செவ்வாய், 24 செப்டம்பர், 2019

கீழடி: 5ம் கட்ட ஆய்வு

கீழடி அகழாய்வில் வெளிப்பட்டவை சுமார் கிமு.6 என்று ஒருவழியாக அறியப்பட்டுள்ளது. அதாவது இன்றைக்கு 2500 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று உலகிற்கு தெரிய வந்துள்ளது. இப்போதைக்கு கார்பன் டேடிங் முறையில் அவ்வளவுதான் தெரிந்துள்ளது. ஆனால் இந்த கணக்கும் தவறு என்பேன். ஏன்? இன்னும் தென்கிழக்கு நோக்கி முன்னோக்கிப் போகவேயில்லை. அதற்குள் ஊரே இரண்டுபட்டால் எப்படி? இப்போது வரை தோண்டியது வெறும் ஒரு தெருவைச் சுற்றியுள்ள சிறு குடியிருப்பு. அவ்வளவுதான்!
என்னுடைய தனிப்பட்ட சித்தநூல் ஆய்வில் நான் கண்டுகொண்டதை இங்கே சொல்கிறேன். உள்ளே போகப்போக இன்னும் பல அதிசயப் பொருட்கள் இவ்வாய்வில் பரவசமூட்டும். ஒவ்வொரு கடல் கோளுக்கும் பிறகு ஊர் எல்லை பின்னோக்கி வந்துள்ளது. சுமார் பத்து காதம் உள்ளே சென்றால் நிறைய கட்டுமானங்கள் வெளிப்படும். அங்காடிகள், கூத்துப் பட்டறைகள், கோயில்கள், மண்டபங்கள் என இன்னும் பட்டியல் நீளும். ஊர் மையப் பகுதி இதுவரை ஆய்வில் வரவில்லை.
ஊர் கட்டுமானத்தின் சூத்திரதாரிகளான மயன் வம்சத்தாரின் பிரம்மபுரி இன்னும் வெளிப்படவில்லை. அக்குடியிருப்பு அறியபட்டால் கீழடியின் ஜாதகமே வெளிப்படும். அதன்பிறகு தோண்டிக் கொண்டுபோக எந்தவொரு அவசியமுமிருக்காது. குடிமக்கள் வாழத் தேவையான குடில்கள்; மேட்டுக் குடியினர் வாழ மச்சு வீடுகள் /நிலவறைகள், அடுக்குமாடி குடியிருப்புகள்; உரை கிணறு, குழாய் நீர் வசதியுடன் கழிவறை/குளியலறையுடன் பொருளாதார அடிப்படையில் Housing units வெளிப்படும். வீட்டில் புழங்க அத்தியாவசியப் பாத்திரங்கள், இரும்புச் சாமான்கள், வெல்டிங் பட்டறைகள், சகஸ்ரகும்ப மின்சார மின்கலன்கள்; தங்கம் வெள்ளி ஆபரணங்கள் மற்றும் நாணயச் சாலைகள்; வீடுகளுக்குத் தேவையான மரச்சாமான்கள் சாளரங்கள், கதவுகள் செய்யும் தச்சுக்கூடங்கள்; கொல்லர் பட்டறைகளுக்கு அடுத்தபடியாக அதிக அளவில் கிடைக்கக் கூடியது ஸ்தபதிகளின் சிற்பக்கூடங்கள். ஆக இந்த ஐந்தொழில்களே பிரதானம்.
இது போக குயவர்மேடு, களத்துமேடு, உவர்புறம், பண்டக பறைச்சாலை, பாணர்கூடம், நர்த்தன களம், குடைவறைகள், பௌத்த விஹாரங்கள், வேள்விச் சேரிகள், வைத்திய சாலைகள், நாவாய் ஒடப்பகுதி, சுங்கச்சாவடி என இன்னும் பலவற்றை அடுக்கிக்கொண்டே போகலாம். இவை எல்லாம் என் கண்முன்னே தெரிகின்றன. அநேகமாய் கீழடி மக்களின் கல்வியறிவு நம்மைவிட மிக நன்றாகவே இருந்துள்ளது. எழுதப் படிக்க வடிக்க அடிப்படை பிரம்மி கல்வியறிவு பெற்றிருந்தனர். பச்சை மண்பானை செய்து முடித்தபின் குயவன் அல்லாத வேறொருவன் வாசக எழுத்துக்களை வடித்தால் அதன் நேர்த்தி தெரிந்துவிடும். குயவனே அதை குச்சியில் எழுதி அதன்மீது களிமண் குழைத்த நீரைப்பூசி மிருதுவாக்கியதும் தெரிகிறது. தூண்கள் /அரண்மனைகள் /கோயில் இங்கெல்லாம் கல்வெட்டு வடித்த கல்தச்சரும், செப்புப்பட்டயம் வடித்த கன்னாரும் நிச்சயம் கை நாட்டாக இருக்கவே முடியாது. கல்வி கணிதம் திரிகோண சூத்திரம், கல்லில் உயிரோட்டம் காணும் சாஸ்திரம் எல்லாம் அறிந்தவராகத்தான் இருக்க முடியும். ஆக, நாம் நினைத்ததைவிட ஊர் மக்கள் அடிப்படை கல்வியறிவுடன்தான் இருந்திருப்பார்கள்.
ஒரே நேரத்தில் பல பகுதிகளில் முன்னோக்கி ஆய்வு செய்தால், இன்னும் பல தடயங்கள் கிடைக்கப்பெறும். என்னுடைய கணிப்பில், எதிர்காலத்தில் நடக்கும் ஆய்வுகளில் கிடைக்கக்கூடிய பொருட்களின் பழமை சுமார் 7000 வருடங்கள் வரை போகும். இனி நடப்பதை வேடிக்கைப் பார்ப்போம்!

Image may contain: one or more people and food

திங்கள், 23 செப்டம்பர், 2019

அமானுஷ்ய கதிரியக்க விஞ்ஞானி

அது 2007 பிற்பகுதி. டாக்டர். M.A. பத்மநாப ராவ் (82) என்பவருடன் நீண்ட உரையாடல் செய்ய அரிய வாய்ப்புக் கிடைத்தது. புதுடில்லியில் எய்ம்ஸ் மருத்துவமனையில் கதிர்வீச்சு மருத்துவத் துறையின் தலைவராக இருந்து ஓய்வு பெற்ற விஞ்ஞானி. இவர் தியானம் செய்யும்போது அநேக இறை வடிவங்கள் இவர் கண்முன்னே வந்து நிற்பார்கள். இராமன், இராவணன், சூரியன், அனுமன், ஆதிசங்கரர், என்று பட்டியல் நீளும். இவர் மாலை வழிபாட்டுக்குப்பின் அமரும்போது இவருக்கு முன் மேஜையில் விரிக்கப்பட்ட டிராயிங் ஷீட் இருக்கும். தியானத்தில் இவருடைய மனத்தில் வந்து நிற்கும் சக்தியானது இவர்மூலம் படங்களை பென்சில் கொண்டு வரைந்திடும். எப்போதேனும் அரிதாக வண்ணத்தில் வரும்.
சூரிய தேவனே தன்னுடைய வெப்ப மண்டலத்தில் நடக்கும் பல நுட்பங்களைக் காட்டி உணர்த்திய தருணங்கள் ஏராளம். இதைக் கண்டறிந்து உலகிற்கு ஆய்வுக் கட்டுரையாக வெளியிட்டார். Bharat Radiation என்ற தலைப்பில் பின்னாளில் 2015 ல் ஆய்வுக் கட்டுரையை சமர்ப்பித்தார். ஆனால் எட்டு ஆண்டுகள் முன்னமே என்னிடம் தன் ஆய்வு குறித்த கருத்தை விளக்கி என்னையும் கேள்வி கேட்டு பதில் சொல்ல வைத்தார். Particle Physics சம்பந்தப்பட்ட நுட்பமான கேள்விகளைக் கேட்டார். ஓரளவுக்கு பதில் சொன்னேன். சூரியனில் எப்படியான அணுவியல் இயக்க நிலைப்பாடு உள்ளது என்றார்? நான் நியூக்ளியர் ஃபியூஷன் என்று சொன்னேன். உடனே அவர், அதுதான் நடக்கிறது என்பதற்கு என்ன ஆதாரம்? என்றார். முதுகலை பட்டப்படிப்பில் அப்படித்தான் படித்தோம். ஆனால் என்னுடைய தனிப்பட்ட யூகத்தின்படி சூரியனில் அணுவுலைக்கான எல்லா அம்சங்களும் இருப்பதாகவே கருதுகிறேன். அங்கு கதிரியக்க யுரேனியமும் அபரிமிதமாகவேகூட இருக்கலாம். தொடர் எரிபொருள் இருந்துகொண்டே இருக்கவும், எரிபொருள் குறையாமல் யுகங்களாக நீடித்து வந்திருக்கலாம் என்றேன். Plasma Physics சம்பந்தப்பட்ட சில உதாரணங்களைச் சொல்லி அது ஃபிஷன் அல்ல ஃபியூஷன் தான் என்று சொல்லவும் சாத்தியம். ஆனால் மேல்நாட்டு விஞ்ஞானிகள் இதை ஏற்கமாட்டார்கள் என்றேன்.
Good. You got my point young man என்று சொல்லிவிட்டு மேலும் விளக்கினார். அகச்சிவப்பைவிட புறவூதா கதிர்கள்தான் உச்ச பட்ச வேகத்துடன் பூமியை நோக்கி பயணிக்கிறது. அதில் பீடா/காமா/எக்ஸ்ரே கதிர்கள் பரவி வரும். ஆனால் நமக்குக் கிடைக்கும் சூரிய ஒளி எல்லாமே சூரியனிலிருந்துதான் வருகிறதா என்றால் இல்லை. நடுவே வெவ்வேறு மண்டலங்களில் சிதறல் ஏற்பட்டு வெப்பம் கூட்டியோ குறைந்தோ வந்து சேரும். சரியாகச் சொல்ல வேண்டுமானால் பூமிக்கு 10கிமீ மேலேயிருந்துதான் சூரிய ஒளியே நமக்கு வந்து சேர்கிறது என்றார். இதற்கான நோபல் பரிசே அவருக்குக் கிடைத்திருக்க வேண்டும். ஆனால் இல்லை. இதுபோல் தன்னுடைய பதினொன்று ஆய்வுகளை பற்றி மேலோட்டமாகக் கூறினார்.
சரி. நம் விஷயத்திற்கு வருவோம். உங்களுக்குள் அமானுஷ்யமாக இறை சக்திகள் வந்துபோவதும், நீங்கள் Auto writing மூலம் பல காரியங்களை சாதிப்பது எப்படி என்றேன். இராமனின் சேனைகள் சரியாக எங்கிருந்து சேதுவைக் கட்டினார்கள் என்பதை உங்களால் எப்படி மனக்கண்ணில் பார்க்க முடிந்தது? ஒவ்வொரு சர்கத்தையும் இராவணனுடன் நடக்கும் போரையும் நேரடி வர்ணனையாக நீங்கள் சொல்வது எப்படி? என்று கேட்டேன்.
அதற்கு அவர், “இராமன் ஒரு கற்பனை கதாபாத்திரம் என்று தென்னகத்தில் சில திராவிட முட்டாள்கள் (Dravidian Party Fools) உளறுவதைப் பார்த்து வட இந்தியாவிலும் உளற ஆரம்பித்துள்ளனர். இராமன் வாழ்ந்தது திரேதா யுகத்தில் என்பது என்னுடைய காதுகளில் ஒலிக்கிறது. அந்த யுகத்தில் மானுட வாழ்நாள் என்பது பல்லாயிரம் வருடங்களைத் தாண்டியது. அதோடு தெய்வ அவதாரமும் கூடுவதால் ‘தசவர்ஷ சஹஸ்ரானி’ என்பது உண்மையே. வால்மீகி சரியாகத்தான் எழுதினார். ஆங்கிலேயர்கள் எதைத்தான் ஒப்புக் கொண்டனர்? Adams Bridge பற்றியும் அப்படித்தான் அவதூறு சொன்னார்கள். .
“சார், அந்த இறை வரைபடங்களைப் பற்றி..?” என்று நினைவூட்டினேன்.
“நான் தியானத்தில் இருக்கும்போது சப்தரிஷி மண்டலத்தின் ஆற்றலை உள்வாங்கிக் கொள்வேன். அப்போது சூரியன்,ராகு, கேது, செவ்வேள், குரு என கிரக தெய்வங்களும் வந்து நிற்பார்கள். ஆனால் சில சமயம் அசுரர் கூடமும் போலியாக இவர்களைப்போல் அந்நேரம் வந்து குறுக்கீடு செய்வதும் உண்டு. அதை இறை அனுகிரகத்தால் முறியடித்து என்னுடைய உடலை/ மனத்தை ஒத்துழைக்க அனுமதியாமல் இருந்து விடுவேன் என்றார். Surya helped me with colourful thermal image sketches that helped me to submit thesis broad என்றார்.
“சார், நீங்கள் இந்த சக்தியை எப்படி வளர்த்துக் கொள்கிறீர்கள்?” என்றேன்.
“நீ தினமும் வழிபாட்டில் என்னென்ன மந்திரங்கள் ஜெபிக்கிறாய்? எத்தனை முறை?” என்றார்.
“இதெல்லாம் போதாது. மந்திர வீரியம் பெருக தினமும் சஹஸ்ர முறை உரு போடவேண்டும். கடும் காய்ச்சலுக்கு கால் மாத்திரை தின்பது போல் உள்ளது நீ சொல்வது. எப்படி சித்திக்கும்?” என்றார்.
இதுபோல் எனக்குப் பல அறிவுரைகள் சொல்லிக்கொண்டிருந்தார். அதற்குள் இரவுப் பொழுது வரவே. “My body pulls me to sit for auto writing. Before that I have to chant Gayathri. God bless you” என்றார். அதாவது, என்னுடைய உடல் பரவெளி ஆக்கர்ஷணத்தைப் பெறுகிறது. அதற்குள் நான் காயத்ரி மந்திரத்தை ஜெபித்து முடிக்கவேண்டும் என்றார். நானும் விடை பெற்றேன். அவருடைய ஓவியங்களை இன்னொரு சமயம் பதிவிடுகிறேன். இப்படிப்பட்டவர்களுடன் விட்டகுறை இருந்தபடியால் ஒரு மணிநேரம் ஆக்கபூர்வமாக உரையாட முடிந்தது.
Image may contain: 2 people, eyeglasses and closeup

திங்கள், 16 செப்டம்பர், 2019

திராவிடம் சாதித்தது என்ன?

திமுக நிறுவப்பட்டு இன்றுடன் எழுபது ஆண்டுகள் ஆகிறதாம். சந்தோஷம்! அதனால் சமுதாயத்திற்கு விளைந்த நம்மைகள் என்ன? தேடிக்கண்டுபிடித்துச் சொல்லவேண்டும். முன்னேற்றத்தைவிட அழிவுகளே அதிகம். அன்றைக்குப் படிப்பறிவு குறைவு என்பதனால் பாமரர்களை மூளைச்சலவை செய்து தங்களுடைய கருத்து வட்டத்தினுள் இழுத்துக்கொள்ள தோதான காலமாக இருந்தது. மொழிப்போர் இனப்போர் திராவிடப்போர் அறப்போர் என்று எல்லா அக்கப்போர்களும் நடந்து முடிந்தன. பகுத்தறிவு ஆரிய/வடமொழி எதிர்ப்பு எல்லாமே உச்சத்தில் வெளிப்பட்ட காலம். வாசுகி முதல் கண்ணகி வரை, சித்தர் முதல் புத்தர் வரை, எல்லாவற்றையும் விமர்சித்த காலம். சமுதாயத்தில் கீழ்நிலை பொருளாதாரத்தில் இருப்போரை கிளர்ச்சி செய்யவைத்து அதன்மூலம் தங்களுடைய சுயவளர்ச்சிக்கு உறமூட்டினர் அதன் நிறுவனர்கள்.
தமிழை ஆயுதமாகக் கொண்டு மக்களைக் கவரும் சாதுர்யம் அக்குழுவினரிடம் இருந்ததால் நாடகம் பத்திரிகை சினிமா மூலம் பரப்புரை செய்ய அக்காலகட்டம் பெரிதும் உதவியது. தென்னாடு போற்றும் சிவத்தலமான இந்நிலத்தில் காலங்காலமாகப் பிறந்து வளர்ந்த பல ஜாதி தமிழ்க்குடிகளை 'இனி நீங்கள் திராவிடர்கள் என்று அழைக்கப்படுவீர்கள்' என்று புதிய அடையாளத்தைத் தந்து 'இனி நீங்கள் இப்படித்தான் வாழ வேண்டும், எதிர்க்க வேண்டும்' என்று அவர்களுக்கு தவறான வழிகாட்டிச் சீரழித்தார்கள். அடிக்கடி முப்பெரும்விழா நடத்தி தொண்டர்களை ஞானம் பெறவிடாமல் களிப்பில் வைத்திருந்து வெற்றியும் கண்டது.
அதன் நிறுவனர்கள் அன்று சொன்னதை எல்லாம் நம்பிக்கொண்டு வாய்மூடி கேட்டுக்கொண்ட மக்கள் அவர்களுடைய தலைமையை ஏற்றுக்கொண்டனர். உலையில் வெதுவெதுப்பான நீர் இதமாக உள்ளது எனக்கருதி மகிழ்ச்சியாய் நீந்தும் ஆமைகளாய், அடியில் தணல் எரிந்துகொண்டிருக்கிறது என்ற ஆபத்தை உணராத தவளைகளாய் தொண்டர்கள் வாழ்ந்து மடிந்தனர். தொண்டர்கள் எல்லோருமே வெற்றிப்படியை ஏறவில்லை. ஜாதிகளைப் பொறுத்து பொருளாதார செல்வாக்கைப் பொறுத்து சிலர் மட்டும் நைச்சியமாக தலைமையிடம் அணுகி காரியம் சாதித்துக் கொண்டனர். மற்றவர்கள் முகம்தெரியாத வேலையாட்களாகப் பணிசெய்து, கால்மிதிக்கும் கல்லாகவே இருந்து தேய்ந்து போனார்கள். நிறுவனர்கள் எல்லோருமே தெலுங்கு நாயுடு, நாயக்கர், செட்டி, ரெட்டி, யாதவா, என வடுகநாட்டு கூட்டணி சேர்ந்தது அனுகூலமானது. மனோன்மணியம் சுந்தரம் பிள்ளையின் பாடலை வெட்டி/ஒட்டி மாற்றியமைத்து இனி கடவுள் வாழ்த்தாக இதையே வைத்துகொள்ள பரிந்துரை செய்தது நாத்திக நிறுவனம்.
ஆனால் இரண்டு தலைமுறைகளைக் கடந்துவிட்ட பல முன்னாள் தொண்டர்களின் சந்ததிகள் அன்று இருந்ததுபோல் இன்று அணுகுமுறையில் இல்லை. எது உண்மை என்று துலாமிட்டு மெய்ஞானப் பகுத்தறிந்து தெளிவடைந்தனர். திமுக கடந்துவந்த பாதையில் காலச்சுவடாகப் பதித்தது என்ன? அக்கட்சியின் தொண்டர்களைத்தவிர பொதுமக்கள் பீற்றிக்கொள்ளும்படி எதுவுமில்லை. நடத்தைகெட்டு, ஊழல் செய்து, வாரிசு அரசியலை உருவாக்கி, ரௌடிகளைப் பெருக்கி, இச்சமுதாயச் சீர்கேட்டினை ஊக்குவித்து இன்புற்று வாழ்ந்ததுதான் மிச்சம். திமுகவிலிருந்து பிரிந்துபோய் தனியாகக் கம்பனி தொடங்கிய இன்னொன்று மட்டும் யோக்கியமா? எல்லாமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்!

பூமழை தூவி...

மாநகராட்சி குப்பை வண்டி பிரதான சாலையோரக் குப்பைத் தொட்டிகளிலிருந்த கழிவுகளைத் துப்புரவாக அள்ளி போட்டுக்கொண்டு நகர்ந்து போனது. அப்போது இறுதி ஊர்வலம் ஒன்று வந்து கொண்டிருந்தது. சவத்தின் மீதுள்ள மலர்களைப் பிய்த்து தெருவில் வீசியடிக்க அது பாதசாரிகள் மீது, வாகன ஓட்டிகள் மீது, பேருந்து ஜன்னலோரப் பயணிகள் தலையிலும் போய் விழுந்தது. எல்லோரும் ஆசிர்வதிக்கப்பட்டு தன்னியனானார்கள். 😎

குரங்கின் கைப்பூமாலையாய்  அதை பிய்த்துப் போட்டு சவத்தைக் கேவலப்படுத்துவது தமிழ்க்குடி கலாச்சாரமாம். சுத்தமாகப் பெருக்கிய சாலையில் திடீரென பட்டாசு வெடித்த காகிதமும் வெற்றிலை ஊதுபத்தி கட்டு மற்றும் பிய்த்துப்போட்ட பூக்களுமாகக் குப்பைகள் சிதறிக் கிடந்தது. மயானம் போய்ச் சேரும்முன் பாடையே காலியாகிவிடும் போலிருந்தது.

குவார்ட்டர் அடித்த நடன கோஷ்டி கைலியைத் தொடைக்கு மேலே தூக்கிக் கட்டியும் நுனியை வாயில் கவ்வியபடி தாளம் தப்பாமல் தம்போக்கில் அபிநயம் முத்திரை அடவு எல்லாம் காட்டியபடி குத்தாட்டம் போட்டு ஆடிக்கொண்டிருந்தனர்.

சமுதாய கலாச்சாரம் மாறிவரும் போக்கைப் பார்த்தால் சவத்தின் அங்கங்களை வழிநெடுகப் பிய்த்து வீசினாலும் ஆச்சரியமில்லை. 😂



பதப்படுத்திய பால்

"ஆவின் பால் பாலே இல்ல. கெமிக்கல் கலந்தது. அதைப் போய் எல்லாரும் குடிச்சுகிட்டு..." என்று தெருவில் இருவர் எனக்கு முன்னே பேசிக்கொண்டு நடை போனார்கள். நான் செய்தித்தாள் வாங்கும் கடையின் எதிரேயுள்ள டீ கடையில் இந்த இருவரும் நின்று டீ குடித்துக் கொண்டிருந்தனர். பார்த்ததும் சிரிப்புதான் வந்தது. அந்த டீ கடை ஆள் காலையில் பெரிய ஒரு லிட்டர் பச்சை பாக்கெட் ஆவினில் 10 வாங்கிக் கொண்டு போவதைப் பார்த்துள்ளேன்.

இப்படி விமர்சித்த அவர்களால் 100% தூய்மையான பாலை விநியோகம் செய்ய முடியுமா? இதற்கு என்ன மாற்று? ஆவின் பாலை நம்பித்தான் குடிக்கணும். கறந்த பாலை வீட்டுக்குக் கொண்டுவந்து ஊற்றுவோர் உண்டு. முன்பு வீட்டு வாசலில் மாடு கட்டி கண்ணெதிரில் கறந்து தந்தனர். இப்போது எங்கேயோ கறந்து வீடுவீடாக வந்து சப்ளை செய்கிறார்கள். கொண்டுவந்து ஊற்றும் ஆள் அதில் ஆவின் பால் கலந்தாலும் தண்ணீர் ஊற்றினாலும் நாம் என்ன கண்டோம்?

ஆவின் பாலில் Blue Nice, Green Magic, Magenta Premium என கொழுப்பு % நிலைக்கேற்ப உள்ளது. ஆக Fat மற்றும் Solid Non-Fat ஏற்றியும் குறைத்தும் சமன்பாட்டில் வைக்கிறார்கள். அந்த விவரமும் பாக்கெட்டில் அச்சிடப்பட்டுள்ளது. அது ஊறு விளைவித்ததாக இதுவரை எங்கும் புகார் வரவில்லை.

பட்டணத்தில் சொந்தமாக மாடு இருந்தால் ஆவின் தயவு வேண்டாம். அது முடியுமா? பால்காரர் தன் மாட்டை ஓட்டிவந்து கறந்தாலும் ஊசி போட்டு போட்டு அந்த கெமிக்கலும் கறந்த பாலில் இறங்கி விடுகிறது. சுரப்புப் பிடிக்க அதன் அருகே கம்பத்தில் சாய்த்து வைக்கும் வைக்கோல் அடைத்த கன்றுக்குட்டிகே 5 வயது ஆகியிருக்கும். கன்று ஏன் வாலாட்டவில்லை துள்ளவில்லை மடியை முட்டவில்லை என்று ஒருபோதும் சந்தேகப்படாத தாய் மாடு இக்கன்றை நக்கி நக்கி தோல் பொம்மையின் அடிபக்கம் தையல் பிய்ந்து ஆங்காங்கே வைக்கோல் வெளியே தொங்கிக் கொண்டிருக்கும். இப்படி எல்லாம் செய்பவர் யோக்கியமான பால்காரரா? விற்கும் பால்தான் தூய்மையாக இருக்குமா?

கூட்டுறவு பால் கொள்முதல் மையத்திற்கு வந்து கறந்த பாலை ஊற்றிவிட்டுப் போவோர் ஊசி போட்டு பால் கறக்காமலா இருப்பார்கள்? அங்கே பாலின் அடர்த்திதான் அந்நேரம் அளக்கப்படும். இனி காலம் போகிற போக்கில் ரசாயன வாழ்க்கை என்று ஆனபிறகு எல்லாவற்றையும் பூதக் கண்ணாடி வைத்துப் பார்த்தால் நாம் எதையும் வாங்கிக் குடிக்கவோ உண்ணவோ முடியாது. சர்வம் கிருஷ்ணார்ப்பணம்!




ஞாயிறு, 15 செப்டம்பர், 2019

கஜ-லக்ஷ்மி

என்னுடன் வேலை பார்த்த இராஜபாளையத்துக்காரர் ஒருவர் தங்களுடைய 15 கிரவுண்ட் நிலம் பல வருடங்களாய் விற்காமல் இருந்தது என்றும் அதில் எந்தவொரு செயலை மேற்கொள்ளலாம் என்று முயற்சி செய்தாலும் அது நடவாது போகும் என்று கூறினார். நிறுவனம்/பில்டர்/தனிநபர் என்று யார் வந்து பேசி முடித்தாலும் அது அடுத்த நிலைக்கு முன்னேறாமல் முடங்கிப் போகும் என்றார்.

அவர் தங்களுடைய கிராமத்துக் கோயிலில் குறி கேட்கப்போக வேண்டும் என்று ஒரு பெரியவர் அறிவுரைக் கூறினாராம். ஆனால் அவருடைய தந்தைக்கோ/ பங்காளிக்கோ/ இவருக்கோ அக்கோயில் எங்குள்ளது என்று தெரியாது. ஒரு வழியாக தெய்வம் எங்குள்ளது என்பதைத் தேடிப்பிடித்து அறிந்தனர். ஆனால் அதற்குக் கோயில் என்று எங்கும் கண்ணில் படவில்லை. அப்போது ஒரு விவசாய முதியவர் ஒருவர் அவ்வழியே போக, அவரை விசாரித்தனர். அவர் அதுபற்றிய தடயம் சொல்ல இவர்கள் போனது மலையடிவாரத்தில் புதர் மண்டயிருந்த ஒரு சிதிலமடைந்த சிறிய அம்மன் கோயில். உடனே உள்ளூர் ஆட்களை வைத்து சுத்தம் செய்து ஆடைச்சாற்றி தீபம் ஏற்றி வழிபட்டனர். அப்போது அவ்வூரில் ஒரு மருளாளி இருப்பதை அறிந்து அவரிடம் இவர்கள் பிரச்னையை சொல்லியுள்ளனர். அதற்கு அவர் 'உங்க நிலத்தில் ஒரு பசுவும் கன்றையும், யானையையும் ஒரு மண்டலம் வரைக்கும் வைத்து பராமரித்து வரவும். அது காலாட நிலத்தில் நடந்து வந்தால் பிரச்சனைத் தீரும்' என்றாராம்.

அதன்படி உள்ளூர் கோனாரிடம் பேசி அங்கே ஒரு கொட்டகை அமைத்துத் தந்து அவரை இருக்க வைத்தனர். ஒரு யானைப்பாகனை தொடர்பு கொள்ள ஐந்து வயது யானையை அங்கேயுள்ள மரத்தின் கீழே சங்கிலியிட்டு தீனிபோட்டு பராமரித்தார். சரியாக ஒரு மண்டலம் கழிந்தது. அதுவரை விற்காத நிலத்தில் இவர்களே ஒரு சிறிய ஷாப்பிங் காம்பிளக்ஸ் கட்ட வங்கியில் நிதி கிடைத்து இரண்டு ஆண்டுகளில் கட்டி முடித்தனர். எஞ்சிய காலி நிலத்தை வாகன பார்கிங்காக வாடகைக்கு விட்டனர். மாதாமாதம் நல்ல வருவாயும் வர ஆரம்பித்தது, கடனையும் அடைத்தனர் என்றார். 'அந்த யானையை விட்டுப்போக எனக்கு மனசில்ல சந்துரு. அது என்கிட்டே ஒட்டிக்கிடுச்சு. ஆனா யானைகட்டித் தீனிபோடுறது செலவுதான்னாலும் நல்ல பலன் தந்தது' என்றார்.

பசுவைத் தொட்டு வணங்கினாலும் உண்ண அகத்திகீரை தந்தாலும் நம் எல்லா தோஷங்கள் நீங்கும். யானையைத் தொட்டாலும், லத்தி விழுந்தாலும், துதிக்கை அபிஷேக நீர் பட்டாலும் சகல விதமான கண்திருஷ்டி ஏவல் செயவினைகளும் நீங்கும் என்பது சாஸ்திரம். அவர் யானைமுடி மோதிரமும் வலக்கையில் செப்பு வளையமும் அணிய ஆரம்பித்தார், வீட்டில் ஒவ்வொரு வெள்ளிக் கிழமையிலும் கோமியம் தெளிப்பதை வழக்கமாக்கிக் கொண்டார்களாம்.


Image may contain: one or more people, outdoor and nature