காலக்ஞானம் ஒரு தீர்க்கதரிசன நூல். அதன் துளிகள் சில:
"வருங்காலத்தில் பாதரக்ஷை அணிந்துகொண்டு மக்கள் போஜனம் செய்வார்கள்" (ஆம். வீட்டைத்தவிர இன்றைக்கு நாம் ஓட்டலில், விழாக்களில் அப்படித்தான் உண்கிறோம்.)
"வாய்மை நேர்மை சத்தியத்தின்மீது நம்பிகை இல்லாமல் காகிதத்தை நம்பி வாழும் காலம்தான் இனி வரும்" (எல்லாவற்றுக்கும் கையெழுத்திட்ட ஸ்டாம்ப் பேப்பர், அக்ரிமென்ட்தான் பேசுகிறது.)
"தூரவாணியில்தான் இனி மக்கள் பார்த்து பேசிக்கொள்வார்கள்" (ஃபோன், ஸ்கைப் கைகண்ட மார்க்கமாக இருந்து வருகிறது.)
"மலம் மூத்திரம்கூட பொட்டலம் கட்டிவைத்தாலும் விற்றுப்போகும். (இன்று எல்லாவித குப்பை கூளங்களை காசு கொடுத்து வாங்கி உண்கிறோம், பயன்படுத்துகிறோமே!)
"தந்தை-மகன் சொத்துத் தகராறு நடக்கும், கணவன்-மனைவி நம்பிக்கை குறையும், கள்ள உறவுகள் அதிகமாகும் " (அத்தனையும் இன்று கண்கூடாக நடப்பதுவே.)
"காந்தி என்ற வைசிய குல சத்தியவான் தோன்றி நாட்டை வழி நடத்துவார். குடியாட்சி மலரும். (மோகன்தாஸ் காந்தி வந்தார், சத்தியாகிரகம் செய்தார், விடுதலைக்குப் போராடினார். மன்னர் ஆட்சி போய் மக்களாட்சியும் வந்தது.)
"திரை பிம்பங்கள்தான் அரசாட்சி செய்வார்கள்" (எம்ஜிஆர், என்.டிஆர், ஜெயலலிதா, போன்ற நடிகர்கள் அரசியலில் வந்துட அவர்கள் பிடியில் மக்கள் விழுந்தார்கள்.)
"ஏக காலத்தில் 'ராம் ராம் ராம்' என்ற ராம ராஜ்ஜியம் தென்னகத்தில் நடக்கும்.. விதவை பதினாறு ஆண்டுகள் தேசத்தை ஆட்சி செய்வாள்." (1980களில் எம்.ஜி.ராமச்சந்திரன் (தமிழ்நாடு), ராமகிருஷ்ண ஹெக்டே (கர்நாடகா), என்.டி.ராமாராவ் (ஆந்திரா) சமகாலத்தில் முதலமைச்சராக இருந்தனர். மத்தியில் பிரதமாராக இந்திராகாந்தி இருந்தார்.)
"ஆந்திரத்தில் ஏழு கிராமங்கள் பிரிந்துபோய் தனி நாடாகும்" (ஆந்திர பிரதேசத்திலிருந்து பிரிந்துபோய் தெலங்கானா மாநிலம் அப்படித்தான் உருவானது.)
"கோயில் சிலைகளை கொள்ளையடிப்பது, நிலத்தை அபகரிப்பது, கோயிலில் லிங்கத்தை அடித்து நொறுக்குவது எல்லாமே நடக்கும்" (சர்வதேச சிலை கடத்தல்பற்றி செய்திகளில் படிக்கிறோம், அதோடு ஆங்காங்கே திராவிட கண்மணிகள் கைவேலையும் தெரிகிறது.)
MGR - Hegde - NTR |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக