முற்பிறவியை ஆய்வு செய்தால், இப்பிறவியின் துன்பங்களுக்கு தீர்வு கிடைத்துவிடும். இப்பிறவியில் கர்மவினை எதனால் ஏற்பட்டது என்பதையும் தனிப்பட்ட குணாதிசயம், உணர்ச்சிகள், நோய்கள், அறிவுத் திறன், ஆன்மிகத்தில் தடை போன்ற பல விஷயங்களுக்கு அடித்தளமாக விளங்கும். நாம் ஒவ்வொருவரும் முற்பிறவி பற்றி தெரிந்துகொள்ள முடியுமா என்று நண்பர் கேட்டிருந்தார். நிச்சயமாக முடியும். நம்முடைய மனதின் ஆழ்நிலைக்குச்சென்று அதைத் தட்டியெழுப்பி முந்தைய பதிவுகளை கேட்டறியலாம். இவ்வாற்றல் தானாக யோக சக்திகள் மூலம் கிடைத்தால் அவரை 'மகான்' என்கிறோம். அவர் தன்முன்னே வரும் ஒவ்வொருவரையும் பார்த்த மாத்திரத்தில் ஸ்கேன் செய்து அவர்களுடைய முற்பிறவிகளைச் சொல்லிடுவார். இந்த சக்தி ஆன்மிக அடித்தளம் கொண்டது.
ஆனால் அப்படியேதும் இல்லாமல் குறிப்பிட்ட கால அளவுக்கு மட்டும் ஒருவரை தன் ஆழ்நிலைக்கு இட்டுச்சென்று மனோதத்துவ ரீதியில் சங்கதிகளைக் கேட்டுப்பெற்றால் அவரை 'ஹிப்னாடிஸ்ட்' என்கிறோம். அப்படிப்பட்ட ஒருவரின் டிவி பேட்டியை பார்த்த ஞாபகம் உள்ளது. இவர் தமிழர்தான். இவருடைய விபரத்தை சேகரித்து இங்கே போட்டுள்ளேன். இவர் மனோதத்துவ பயிற்சியாளர், ஆலோசகர் என்று பேட்டியில் கூறினார். காபி குடிக்கும் நேரத்தில் இவர் உங்களை ஆழ்நிலைக்கு கூட்டிச்சென்று விவரங்களை சேகரித்து விடுகிறாராம். விருப்பம் இருப்போர் தொலைபேசியில் அழைத்து அப்பாயன்ட்மென்ட் பெறவும். கட்டணம் பற்றி எனக்கு எதுவும் தெரியாது.
திரு.C.J.ஜெயச்சந்தர். Hypnotherapist, பெங்களூர்
Contact : 09886420936 / 9176952838 / 9551546565
Contact : 09886420936 / 9176952838 / 9551546565
நாம் வீடுபேறு அடையும்வரை இக்கூட்டுக்குள் பல சுவாரசியமான முன்ஜென்ம கதைகள் அடைபட்டுக் கிடக்கும் என்பது உறுதி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக