சிவபெருமான் பல நூறு ஓலைகளில் தன் கைப்பட எழுதிய திருவாசகம் எப்படி இருக்கும் என்று நாம் நினைப்போம். தில்லையில் சிவத்தொண்டு புரிந்து கொண்டு வாழ்ந்தார் திருவாதவூரார் (எ) மாணிக்கவாசகர். அங்கே தினமும் சொற்பொழிவு கேட்கவரும் முதியவர் ஒருவர் கேட்டுக்கொள்ள திருக்கோவைப்பதிகம் பாடினார். அதையெல்லாம் முதியவராக வந்த ஈசனே எதிரில் அமர்ந்து எழுதியது என்பது மறுநாள் கருவறைமுன் படியில் இருந்த ஓலைகட்டைப் பிரிக்கும்போது தான் தெரிந்தது. அதில் 'திருவாதவூரார் சொல்ல சிற்றம்பலமுடையோன் எழுதியது' என்று ஈசனே கையொப்பமிட்டதை அனைவரும் படித்தனர்.
மணிவாசகரைப் பாடச்சொல்லி அத்தனையையும் எழுதியது சிவன். எழுதி அம்பலத்தின் படியில் வைத்துவிட்டுப போய்விட்டார். மணிவாசகர் வெவ்வேறு தலங்களில் திருவாசகப் பாடல்களை இயற்றினார். தினசரி பிரசங்கம் தில்லையில் நடக்க அங்கே எல்லாவற்றையும் பாட அதை சிவன் நூல் திரட்டாக தொகுத்து எழுதினார். இது பன்னிரு திருமுறைகளில் எட்டாம் திருமுறையாக உள்ளது. 'நரியைப் பரியாக்கி' திருவிளையாடல் புரிந்த திருபெருந்துறை நிகழ்வை உரைக்கும் அந்த பாடல் ஓலையைத்தான் இங்கு படத்தில் போட்டேன்.
திருக்கோவையாரை அவர் எழுதவில்லை நம்பியாண்டார் நம்பி இயற்றியது என்றும் சொல்வோர் உண்டு. நாம் அறியோம்!
நன்றி:- அருள்மிகு ஆத்மனாதசுவாமி திருக்கோயில், ஆவுடையார் கோயில், திருப்பெருந்துறை & தமிழ்நாடு இந்துசமய அறநிலையத் துறை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக