About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

திங்கள், 30 ஏப்ரல், 2018

இது போதும்

பணம் ஈட்ட வேண்டும் என்ற குறிக்கோள் எல்லோர்க்கும் உண்டு. அதன் அளவு என்ன, எத்தனைக் காலத்திற்குள் ஈட்ட என்பது மட்டுமே மாறுபடும். என் நண்பர் ஒருவர் மாதம் ரூபாய் 1.50 லட்சம் வாங்குகிறார், ஆனால் எப்போதும் ஏதோ வேதனையிலேயே இருப்பார். இன்னொருவர் ஒருவர் 9000 வாங்குகிறார் பரம சந்தோஷமாக உள்ளார். இது எதை வைத்து முடிவாகிறது?
வாழும் பாங்கு! குடும்ப பொறுப்புகள், அத்தியாவசிய செலவுகள், வட்டி கட்டுதல், கேளிக்கை, ஆடம்பரம், மற்றும் ஊதாரிச் செலவுகளைப் பொறுத்தே இதன் அளவீடு மாறுகிறது. எது அதிகமாக எது குறைவாக இருக்கவேண்டும் என்பது தனிநபர் விருப்பத்தையும் சூழலையும் சார்ந்தது. அதற்காக எல்லோராலும் வயிற்றையும் வாயையும் கட்டமுடியுமா? குடும்பப் பொறுப்புகளைத் தட்டிக்கழிக்க முடியுமா? ஊரார் மெச்சவேண்டும் என்பதற்காக பகட்டு வாழ்க்கை வாழ முடியுமா? நான் நடுத்தரமா/பணக்காரனா என்பதை சமூகத்திற்குக் காட்டி எனக்கு என்ன ஆக வேண்டும்?  "சார், தேவையான பணம் சம்பாதிச்சிட்டீங்களே இனி எதுக்கு பிசினெஸ் செய்யறீங்க?" என்று கேட்டால் "இனி பணம் வந்து எனக்கு ஒன்றும் ஆகப்போவதில்லை. ஆனால் பிசினெஸ் பிடிச்சிருக்கு, நாலு பேருக்கு வேலை கொடுக்கிறேன்" என்று சொல்லுவதும் உண்டு.. ருசிகண்ட பூனை உருட்டுமாம் பானை!
பணம் ஒன்றே குறிக்கோளாக இருக்கும்போது நம் புத்தியும் இயல்பும் மாறிவிடுகிறது. 'அவன் முன்ன மாதிரி இல்ல... எப்போ பார்த்தாலும் பணம்பணம்னு அலையறான்' என்று சிலர் சொல்வதை நாம் பார்த்துள்ளோம். இந்த போக்கில் தான/தர்மம் செய்வது சந்தேகம்தான். சிலர் நன்கொடை அளிப்பதற்காக பகுதிநேர வேலைகள் செய்வதும் பார்த்துள்ளேன். சரி, தனக்கென வாழ்வது எப்போது? குடும்பத்தின் மீதும் சமூகத்தின் மீதும் அக்கறை வேண்டியதுதான், ஆனால் எப்போதும் அதே சிந்தனையாகவே இருந்தால், நம் இலட்சியம் சிதறும். பணம் வேண்டியதுதான், அதுவே எல்லாம் ஆகாது. ஒருபக்கம் ஆன்மிகம்/தர்மநெறி பாடாய் படுத்தும். இன்னொருபக்கம் எப்படியேனும் பொருளீட்டி செல்வந்தனாக வேண்டும் என்ற எண்ணமும் வரும். இதில் ஏதேனும் ஒன்றில் முழுதுமாக அல்லது இரண்டிலுமே மத்திம நிலையோதான் சரிப்படும். எளிமையாக வாழப் பழகிக்கொள்வோம். சுமை குறைவு!
No automatic alt text available.

என்னை பாதித்த தென்னை

பக்கத்து வீட்டில் இருக்கும் 45 வருட பழமையான தென்னை மரங்கள் எல்லாம் பூச்சி தாக்கியுள்ளதால் குருத்து விடுவதில்லை என்ற காரணத்திற்காக 45 நிமிடங்களில் வேகமாக வெட்டிக் கூறு போட்டனர். வேடிக்கைப் பார்த்த நான் தென்னையின் குரலாக மாறினேன்.
தென்னம்பிள்ளையாக இங்கே வந்தேன்
கைப்பிள்ளையாக மெல்லச் சிரித்தேன்
பெரியபிள்ளையாக நான் வளர்ந்தேன்
கணக்குப்பிள்ளையாக பணம் தந்தேன்
மூத்தபிள்ளையாக நிலைத்து நின்றேன்
நெடும்பிள்ளையாக வளைந்து ஆடினேன்
நோய்ப்பிள்ளையாக படுத்து விட்டேன்
பச்சைக்கிளி காக்கை குயில் அணிலும்
வெட்டுக்கிளி பருந்து மைனா குருவியும்
வெயில் இடிமின்னல் பேய்மழையிலும்
பனி சூறைக்காற்று உதிர் காலத்திலும்
என்னை நேசித்து இளைப்பாறி வந்தவை
இனி எங்கே போகும் எப்படி வாழும்?
So sad to see the axing and falling of mighty trees in no time.😪

மதுரையில் திருக்கல்யாணம்


Image result for மீனாட்சி திருக்கல்யாணம்

சொக்கநாதர் கைபிடிக்க மீனாளும் வாராளே 
சங்கம்தந்த மண்ணுல வாக்கப்பட வாராளே
வைகை நதியோரமாக கள்ளழகர் வாராரே 
வாக்குத்தந்தபடியே தாரைவாத்து தந்தாரே
பரிமேல வந்தாரே அழகர் பைய வந்தாரே
பரமனை ஏற்றுக்கொள்ள பெருமாளும் வந்தாரே
பாரோர் புகழவே மீனா கல்யாணம் நடந்ததே
காஞ்சனை பெத்தமக உலகாளப் போறாளே
ஏழுகடல் கொண்டார புருசனைக் கேட்டாளே
மாமியார் மெச்சும்வண்ணம் சப்தநதி தந்தாரே
மலையனும் கைகூப்பி மருமவனை தொழுதானே
கயிலாய மருமவனும் சொல்படியே செய்தானே
விண்ணதிர வான்புகழ வைபோகம் நடந்ததே
விருந்துண்டு வந்தேனே களிப்போடு வந்தேனே!
அடடே! என்ன விருந்து என்ன விருந்து! தடபுடல்தான் போங்கள்.. அங்கே பார்த்து பார்த்து பரிமாறினார்கள்.. பூத கணங்கள் பம்பரமாய் வேலை செய்தார்கள்... பார் சிறுத்ததோ மதுரை பெருத்ததோ என்று ஆகிவிட்டது... சித்திரை தேரோடும் வீதியெல்லாம் திருவிழாக்கோலம்தான்...  எப்படியோ இனிதே வந்து சேர்ந்தேன்! மாலையில் மாப்பிள்ளை சுந்தரேஸ்வரர் யானை வாகனத்திலும் புதுப்பெண் மீனாட்சி புஷ்ப பல்லக்கிலும் 'ரிசெப்ஷன்' தர வீதி உலா வருவாங்க. நானும் போவேன்! 🙏🙏😆 சித்திரை 

ஞாயிறு, 29 ஏப்ரல், 2018

எல்லாம் நேரம்தான்!

'உன் வெற்றி உன் கையில்'... முன்னேறத் துடிக்கும் இளைஞர்களுக்கு ஊக்கம் தர இதைத்தான் சொல்வார்கள். நாமும் சில சமயங்களில் சொல்வோம். ஆனால் அது உண்மையல்ல என்பதை நாம் அனுபவத்தில்தான் தெரிந்து கொள்கிறோம். 'பாத்து பாத்து ஆய்வு செய்தபின் திட்டமிட்டு ஆரம்பித்த தொழில்தான், இப்படி அடிவாங்கும்னு நினைக்கலை...பெருத்த நஷ்டம்... எல்லாம் நேரம்தான்' என்று புலம்புவார் சிலர். 'ஏதும் தெரியாமலே ஃபுளுக்ல ஆரம்பிச்சேன்... இப்போ பிசினஸ் பட்டய கிளப்புது... இதை எதிர்பார்கவே இல்லை.. எல்லாம் நேரம்தான்' என்று சொல்லி மகிழ்வோரும் உண்டு.
நாம் செய்யும் முயற்சிகள் எல்லாமே வெற்றி அடைகிறதா? இல்லை. வெறும் அதிர்ஷ்டம் மட்டும் கைகொடுத்தால் போதுமா? போதாது. அப்போது உழைப்பு, தன்னம்பிக்கை, போராடும் சக்தி, விவேகம், புத்தி திறமை எல்லாமே போதிய விகிதாசாரத்தில் இருந்தால் எல்லாமே வெற்றிதான். ஆனால் இதெல்லாம் சரியாக இருந்தால் தோல்வி என்பது வரக்கூடாதே? மேலே உரையாடலில் 'எல்லாம் நேரம்தான்' என்பது எதைக் குறிக்கும்? விதி, ஊழ்வினைப்பயன், கிரக சஞ்சாரம், அதிர்ஷ்டம், என்று பல பெயர்களில் சொல்லலாம்.
ஆக, என்னதான் திட்டமிட்டு புத்திசாலித்தனமாக செயல் பட்டாலும், ஒரு செயலில் நாம் வெற்றி பெறுவோமா இல்லையா என்பதை காலம்தான் தீர்மானிக்கிறது. 'நாட்டாமை, தீர்ப்ப மாத்தி எழுது' என்று அவன்மீது கோபப் படலாம். அதைத்தாண்டி ஏதும் செய்ய இயலாது. அதற்காக தினமும் டிவியில்/செய்தித்தாளில் ராசிபலன் பார்த்துவிட்டு அதன்படி வேலைசெய்வது முட்டாள்தனம். உழைப்பதில் கடினம் / எளிமை என்றெல்லாம் ஏதுமில்லை. மூளையும் உடலும் இசையும்வரை நன்கு உழையுங்கள். நாம் எவ்வளவு நேரம் உழைத்தோம் என்பது பெரிதல்ல, அது ஆக்கபூர்வமாக இருந்ததா என்பதுதான் முக்கியம். மற்றவரோடு அளவீடு வைத்துக்கொண்டு ஒப்பிட முடியாது.. யானையின் தீனியையும் போடும் லத்தியையும் பார்த்துவிட்டு பூனையும் ஆசைபட்டால் எப்படி? பூனையின் வேகத்தையும் துடிப்பையும் பார்த்துவிட்டு யானையும் அப்படியே செய்ய எண்ணினால் ஆபத்துதான். நாம் எல்லோருமே ஒரு தனித்துவத்தோடுதான் இருக்கிறோம் என்பதை புரிந்து கொள்ளவேண்டும்.
யதார்த்தமான கேள்வியைக் கேட்கிறேன்... மகாத்மா காந்தியைவிட சிறந்த அஹிம்சாவாதியும் வாய்மை போற்றுவோரும் இல்லையா? கர்நாடக சங்கீத இசையில் எம்.எஸ்.சுப்புலட்சுமியைவிட சிறந்த பாடகி இல்லையா? நடிப்பில் சிவாஜி கணேசனைவிட வேறு சிறந்த நடிகர்களே இல்லையா? புகழ்பெற்ற விஞ்ஞானி எடிசனைவிட வேறு சிறந்த கண்டுபிடிப்பாளர்களே இல்லையா?
நிச்சயம் உண்டு! உண்டு! அவர்களின் விதிப்பயன் அவர்களை வெளியுலகிற்கு அறிமுகம் செய்யாமல் இருந்து விட்டது. அப்படியே தெரிந்தாலும் பெரிய அளவில் வரவேற்பு கிட்டவில்லை. வரவேற்பு இருந்தாலும் ஏதோவொரு தலையீட்டில் தொடர் ஆதரவு இல்லை. இவர்கள் பட்டை தீட்டாத வைரங்கள். அப்படியே பட்டை தீட்டியிருந்தாலும் அதன்மீது வெளிச்சம் பட்டால்தானே ஒளிர முடியும்? இவர்கள் வாங்கிவந்த வரம் அப்படி.. யாரை நொந்துக்கொள்ள? எல்லாம் நேரம்தான்!

Image may contain: text

சமாதியைவிட்டு வெளிவரும்.

இப்பதிவை நான் எழுதத் தூண்டியது எது? முகநூல் நண்பர் ஒருவரின் கமென்ட் "எங்கள் வீட்டில் மழை காலத்தில் தானாய் உருவாகும் தவளைகள்... ஆச்சரியம் தான்."
நம் சித்தர்கள் எல்லோரும் கற்பம் உண்டபின் வாசியில் நிலைத்து பூமிக்கடியில் சமாதியில் இருந்ததை நாம் அறிவோம். சமாதிவிட்டு வரும்வரை அவர்கள் பலகாலங்கள் அப்படியே நிலைத்திருப்பார்கள். அவர்களைப்போலவே சில வகையான தவளைகள், மீன்கள் இப்படிச் செய்கிறது.
அதிக வெப்பம் அல்லது உறைபனி காலங்களில் பூமிக்கு அடியில் பதுங்கு குழி அமைத்து தவளைகள் தங்கிடும். அதிக நீரை உறிஞ்சிக் கொண்டபின் அங்கேபோய் பதுங்கும். தன் உடலிலுள்ள மேல்தோல் மற்றும் கொழுப்பை அது உணவாகக் கொண்டு உயிர்வாழும். நடமாட்டம் இல்லாததால் சக்தி வீணாகாது.. எப்போது பருவமழை பொழிகிறதோ, பூமிக்குள் நீர் ஊடுருவத் தொடங்குமோ அப்போது அதை உணர்ந்துகொண்டு பூமிக்கு மேலே வந்து இயல்பு வாழ்க்கை மேற்கொள்ளும். நாம் எதைச் செய்ய சித்த நிலையில் பிரயத்தனப் படவேண்டுமோ அதை இவை சாதாரண இயல்பாகச் செய்கிறது. சில மாதங்கள் சமாதியில் இருந்துவிட்டு (Hibernation) வருவது எத்தகைய பேறு!
அதுவரை தவளைகள் இல்லாத நிலத்தில், மழை பெய்ததும் இரண்டு சாமத்தில் திடீரென தவளைகள் எப்படி கபகபவென வந்தது என்று ஆச்சரியப் படுவோம். அதுபோல் மீன்களும் குளம் வற்றும்போது கனமாக சேறு பூசிக்கொண்டு உள்ளேபோய் பதுங்கும். அதன் நுரையீரலில் அதிகப்படியான பிராண வாயுவை தேக்கிக்கொண்டு தவளையைப் போலவே செயல்படும். இயற்கையின் சிருஷ்டி அலாதிதான்!
அதுவரை மீனாய் /தவளையாய் இருந்த மச்சமுனி/ மண்டூக ரிஷியார் கூட்டம் சமாதியில் இருந்துவிட்டு பூமிக்கு மேலே வருகிறார்களோ என்னவோ... யார் அறிவார்? பூமிக்குள்ளிருந்து வெளிவரும்போது அதைக் காண்பது சாப-பாவ விமோச்சனமே! 
No automatic alt text available.

சார்.... போஸ்ட்!

தபால்காரரின் 'க்ளிங்...க்ளிங்' சைக்கில் பெல் சப்தம் வீட்டு கேட் அருகே அழுத்தமாகக் கேட்டால் சற்று எட்டிப் பார்ப்போம். 'சார், போஸ்ட்' என்றதுமே நாம் துள்ளி குதித்து ஓடிப்போய் வாங்கியது நினைவிருக்கும்.
போஸ்ட்கார்டு 15 பைசா விலையில் விற்றபோது நாம் எல்லோருமே கடிதம் எழுதியிருப்போம். அது மேலே தொடங்கி பக்கவாதத்தில் கோணிக்கொண்டு எப்படியோ ஒரு தினுசாக எழுதி முடித்திருப்போம். சிலர் சுவாரஸ்யமாக எழுதியெழுதி மேற்கொண்டு இடம் போதாமல் விலாசத்தின் மீது 'புலி' முத்திரைஅருகேயும் கொசுறு எழுதுவது உண்டு. அதெல்லாம் ஒரு தமாஷ் தான்! கோடை விடுமுறையில் நமக்கு பள்ளிக்கூடத்திலிருந்து 'Promotion' கார்டு வரும்.
என் நியாயவாதி சிவில் எஞ்சினியர் தாத்தா எழுதினால் தபால் கார்டின் முன்புறம் கார்டின் மஞ்சள் நிறம் தெரியாத அளவிற்கு அதில் நீல எறும்புகள் ஊருவதுபோல் மேலிருந்து பின்பக்க அடிபாகம்வரை வீணாக்காமல் எழுதி முடிப்பார். அதையே சாதாரணமாக எழுதினால் அது ஒரு இன்லண்டு கவர் அளவுக்கு சங்கதி கொள்ளும். இதையெல்லாம் பொறுமையுடன் அவ்வளவு நிதானமாக எழுத நேரம் ஒதுக்கிக் கொண்டார்கள். அதை ஒரு கலையாகவே பாவித்தனர். நான் கல்லூரி முடித்தபின்னும் நிறைய தபால் கடிதங்கள் எழுதியதுண்டு.
முன்பெல்லாம் அரசு உயர் அதிகாரிகள் வீடுகளில் landline தொலைபேசி இருந்தது, பிறகு நம் எல்லார் வீடுகளிலும் அது நுழைய மெல்ல தபால்களும் குறைந்தது. பிறகு 2003 காலகட்டத்தில் செல்போன் விலையும் ரீசார்ஜ் விலையும் குறைந்ததும் நம் எல்லோர் கைகளிலும் புழங்கியது. இது SMS காலம் என்பதால் தந்தி telegraph சேவை நிறுத்தப்பட்டது. இப்போது நாம் தபால் கடிதம் எழுதுவது அடியோடு நின்றது. வேறு வழியின்றி பதிவுத்தபால் /ஸ்பீட் போஸ்ட் /பார்ஸல்/ சஞ்சிகைகள் மட்டும் உள்ளது.. பொங்கல் வாழ்த்து SMS போய்விடுகிறது.
ஈமெயில் அனுப்புவது வசதிதான். மின்னஞ்சல் வந்தாலும் வந்தது முறையாக கடிதம் எழுதும் முறையும் ஒழிந்தது. இன்று அநேகமாக நாம் எல்லோரும் எழுதும் மின்னஞ்சல் கடித முறை தவறான முறைதான். மேலேதான் Sub இருக்கே அது என்ன உள்ளே டியர் சார், கீழே ஒரு Sub, Ref என்று தெரியாதோர் கேட்பதுண்டு. எழுதி முடிக்கும்போது எல்லோருமே பொத்தம் பொதுவாக Regards என்று போடுவதால், யாருக்கு எப்படிப்பட்ட sign off / farewell phrase சொற்றொடர் போடவேண்டும் என்பதே மறந்துவிட்டது.
'தபால்காரரே, தபால் வந்திருக்கா?' என்ற குரல் கேட்கப்போவதில்லை.

இயற்கையின் பாடம்

சூன்யத்திலிருந்துதான் இந்த பிரபஞ்சமும் ஏனைய ஜீவராசிகளும் சிருஷ்டிக்கபட்டது என்பது உண்மை. ஆனால் சிறு பசுஞ்சாண உருண்டையை பொந்தில் வெறுமனே போட்டுவைத்தாலோ, அதன் மீது கோணி போட்டு மூடி வைத்தாலோ பத்தே நாளில் அதிலிருந்து 'மொயமொய'வென தேள் குடும்பம் வெளிவருவது எனக்கு மிகுந்த ஆச்சரியமாக இருக்கும். சாணம் / உளுத்துப்போன கட்டை, இதிலிருந்தும் புழு நெளியும் என்பது சரி ஆனால் ஊர்வன பிரசவித்ததுபோல் எப்படி வெளிவரும்? ஈறு பேனாகி பேன் பெருமாள் ஆன கதைதான்.
எங்கள் வீட்டிற்குப் பின்னே ஒரு தரிசு நிலம் உள்ளது. அதில் போன வருடம் சொந்தக்காரர் வந்து சுத்தம் செய்துவிட்டுப் போனதோடு சரி. இப்போது அதில் என் கண்ணுக்குத் தெரிந்து தூங்குமூஞ்சி மரம், அசோகம், தூதுவளை, துளசி, காட்டாமணக்கு, வேம்பு, தேள் கொடுக்கு செடி, சீந்தில் கொடி, குப்பைமேனி, கீழாநெல்லி, அருகம்புல் மற்றும் ஏதேதோ புதர் செடிகள் உள்ளன. இதெல்லாம் வித்தில்லாமல் பதியனில்லாமல் நம் கண்முன் எப்படி முளைத்தது? காற்றில் கண்ணுக்குத்தெரியாத விதைகள் பறந்து இங்கு விழுந்து வளர்ந்ததா? இயற்கையாகவே மண்ணில் இதெல்லாம் பொதித்துப் படைக்கப்பட்டதா? சில வித்துகள் பறவைகள் மூலமும், நாம் சாப்பிட்டு எறிவது மூலமும் வளரும். மற்றவை எல்லாம் எப்படி? ஆச்சரியந்தான்!
The living entities are already injected into the material nature by god, and they develop in proper climatic condition என்பதை எப்போதுமே சூட்சுமமாய் உணர்ந்து பரவசப்படுவேன். இதெல்லாம் பரபிரம்மத்தின் எத்தனைப்பெரிய லீலைகள்! நாமும் அப்படித்தான். தொடக்கத்தில் சூட்சும ஆன்மாவாக சிருஷ்டியாகி, தக்கதொரு ஸ்தூல தேகத்தில் விழுந்து, உருவாகி, வளர்ந்து, பிறகு அதை துறந்துவிட்டு சூட்சுமமாக போவதுபோல்தான். ஆனால் எப்போதுமே நாம் எங்கோ ஏதோவொரு தேகத்தோடு இருக்கிறோம் என்பதை இதுதான் எனக்கு உணர்த்தியது. மற்ற செடிகள் ஏன் இன்னும் அங்கே முளைக்கவில்லை? அங்கே முளைப்பதற்கான அவசியம் எழவில்லை. பிறவிதோறும் நமக்கு (காரண ஊழ்வினை தேகம்) அமைய அவசியம் உள்ளது.
Image may contain: tree, plant, outdoor and nature

சனி, 28 ஏப்ரல், 2018

மணி-மந்திரம்-மருந்து

நான் சிறுபிள்ளையாய் இருந்தபோது கோடை விடுமுறையில் ஊருக்குப் போவோம். மிகவும் வயதான எங்கள் கொள்ளுபாட்டி உடல் முடியாமல் இருந்தார். ஆங்கில மருந்து பழக்கமில்லை என்பதால் அப்போது முசிறியைச் சேர்ந்த வயதான வைத்தியர் ஒருவர் வருவார். நான் அவர் பின்னாடியே சென்று அவர் கைப்பெட்டியில் என்ன வைத்துள்ளார் என்று மோப்பம் பிடித்து விடுவேன்.
உள்ளே வந்து உட்கார்ந்து பெட்டியைத் திறப்பார். கோலிகுண்டு போல் கருநீலம்/வெள்ளை நிறத்தில் ரசமணிகள், சிறு வைரக்கற்கள் போல் ஏதோ இருந்தது. அதுபோக சூரணங்கள், மருந்து குளிகைகள் இருந்தது. அதோடு ருத்திராட்ச மாலை, மந்திரிக்க மஞ்சள் துணி, தகடுபோல் ஏதோ இருந்தது.
முதலில் நாடி பரீட்சை செய்துவிட்டு ரசமணி கொண்டு சிகிச்சை தந்தார். பிறகு நாடி பார்த்தார். கொஞ்சம் பொறுத்து மந்திரம் சொல்லிக்கொண்டு துணியில் 'டப்டப்' என்று போட்டு மந்திரித்தார். அதன் பிறகு நாடி பார்த்தார். கடைசியில் ஒரு முடிவுக்குவந்து குளிகை மருந்தும்-சூரணமும் தந்தார். மணி-மருந்து, மந்திரம்-மருந்து, அல்லது ஏதேனும் ஒன்று கூட சிகிச்சையாக இருக்கும்.
இதை எதற்குச் சொல்கிறேன் என்றால், ஒவ்வொரு உபாயத்தையும் பிரயோகம் செய்து முடிவில்தான் மருந்து அவசியபட்டால் தந்தார். இன்று ஒருவனுக்கு மன நோய் உள்ளதா, பேய் பிடித்ததா என்று ஆங்கில மருத்துவரால் கண்டுபிடிக்க முடியாத நிலை. அது காத்துதான் என்று தெரியாமல் மருந்து மாத்திரையை விழுங்குச் சொல்வோர் உண்டு. ஆகவே, பழைய முறைதான் சிறந்தது. உண்மையாகவே இது ஒரு நல்ல holistic approach என்பேன்.
Image may contain: flower, plant and nature
No automatic alt text available.









நான் பள்ளிக்கூடம் படிக்கும்போது, தேள்கடி, காணாகடி போன்றவற்றுக்கு என் தாத்தா சில மந்திரங்கள் எனக்குச் சொல்லிக்கொடுத்தார். அப்போது நான் கேட்பேன் "தாத்தா, மந்திரம் போதும்னா அப்போ எதுக்கு மருந்து?" என்றேன். அதற்கு அவர், 'டேய், விஷக்கடிக்கு முதல்ல எது கடிச்சது என்று பார்க்கணும், அதுக்கு மூலிகை முறிவு மருந்து தரணும், அது வேலைசெய்யும்போது மந்திரம் சொல்லணும்' என்பார். முதலில் கடிவாயில் உப்பு, வெங்காயம், நவச்சாரம் போன்றதை வைத்து தேய்க்க சற்று எரிச்சல் வேதனை குறையும். இதுபோல் இன்னும் எவ்வளவோ கை மருந்துகள். விபூதி செய்யும் போது வில்வம் மற்றும் சில மூலிகைகள் கலந்தே செய்வார்கள். திருநீறும் மருந்துதான்! இன்றைக்கு வாசனை கலந்த சாம்பலும் ரசாயன பொடியுமே உள்ளது. நான் விபூதியை வாயில் போட்டுக்கொண்டு பல வருடங்கள் ஆகிறது.

அந்த மந்திரம், "பட்டையில் கிடக்கும் தேள், பரமசிவனைத் தீண்டும் தேள், கொட்டும் தேள், கருந்தேள் செந்தேள்; உடும்பும் தேளுமாய் ஒருபனை ஏற, உடும்பேறிப்போக குருவே நீ சுவாஹா'. அந்த மருந்து எது? வெள்ளாட்டு சிறுநீரில் ஊறவைத்த வெள்ளெருக்கு வேரை காயவைத்தபின் இடித்து வஸ்திரகாயம் செய்து சூரணமாக்குவது. அதை மூன்று வேளை தேனில் குழைத்து நாக்கில் தடவவேண்டும். அதுவே விஷப்பாம்பு கடித்தால் சிரியாநங்கை இலை சூர்ணம் தருவார்கள். கசப்பு சுவை தெரிந்தால் அது விஷப்பாம்பு இல்லை என்று தீர்மானம். கசப்பு சுவை தெரியாதிருந்தால் பாம்புதான். கசப்பு சுவை வரும் வரை மருந்து தரவேண்டும். நான் இன்றுவரை இதை பிரயோகம் செய்ததில்லை.
ஆக, என்னை அறியாமலே என்னுள் சித்தவைத்திய அணுகுமுறைகளில் ஈடுபாடு சிறுவயதிலேயே வந்தது. எல்லாம் அந்த வைத்திய சித்தரின் சித்தம்!

திராவிடம் என்ற விடம்

ஊருக்கு ஊர் பகுத்தறிவு நாத்திகம் குறையாது என்பது மகான்களின் தீர்க்கதரிசனம். நாமும் இதன் ஆதிக்கத்தை தொன்றுதொட்டு பார்த்து வருகிறோம். இங்கே தமிழகத்தில் ஒரு கி.வீரமணி போலவே ஆந்திரத்தில் பாபு கொக்கிநேனி என்பவர் கருப்பு சட்டை கட்சியை சேர்ந்தவர். நாத்திக பிரச்சாரகர், மனித உரிமைக்குழு உறுப்பினர், சமூக ஆர்வலர் என்ற அடையாளங்களைப் பெற்றவர்.
மெய்யாக மகான்கள் யாரும் மகான்கள் இல்லை. சராசரி மனிதனே. கற்பனையில் நினைத்ததை எல்லாம் தீர்க்கதரிசன நூல் என்று எழுதிட அதையே ஊர் உலகம் நம்புகிறது. இதை என்னவென்று சொல்ல? அவர் எதிர்கால நிகழ்வுகளை படம்பிடித்து சொன்னாராம். என்ன அபத்தம்! அப்படிஎன்றால் Nostradamus ஏன் வணங்கப்படும் மகானாகவில்லை? இறைவனையும் இறையருள்பெற்ற மகான்களின் மூளையையும் ஆய்வு செய்ய வேண்டும். ஆதிசங்கரர், ராமானுஜர், வீரப்பிரம்மம், ராகவேந்திரர் எல்லோருமே சராசரி மனிதர்கள். ஏதோ சமூகப்பணி செய்தார்கள் என்று சொல்லலாம். மற்றபடி அவர்கள் போற்றத்தக்க வகையில் ஏதும் செய்யவில்லை. சித்த புருஷர்கள், மகான்கள் என்றெல்லாம் சொல்வது கற்பனையே! இந்த ரீதியில் அங்கே இந்த ஆள் கோஷம் போட்டுக் கொண்டிருக்கிறார்.
ஸ்ரீ வீரப்பிரம்மேந்திரர் என்ற ஆந்திர மாநில மகானைப்பற்றி அவர் அவதூறு பேசுவது சற்றும் அடுக்காது. இதுவே இந்த லட்சணம் என்றால் நம் சித்தர்களைப் பற்றி அவர் ஏதும் அறிந்திருக்க வாய்ப்பில்லை என்றுதான் நான் நினைக்கிறேன். இப்படியெல்லாம் ஒரு கான்சப்ட் உள்ளதா என்று ஆய்வு செய்யவேண்டும் என்கிறார்.
இவர்களுடைய சக்திகள், மகிமைகள் யாவையும் அறிந்த சாட்சிகள் என்னைப்போல் பலருண்டு என்பது கொக்கிநேனி அறியவில்லை. அவ்வப்போது ஆங்கிலம் பேசி தன் நிலையை ஸ்திரப்படுத்தி அதை அறிவியல்தனமாக சித்தரிக்க முயல்கிறார். திராவிட கழகம் தொடங்கிய இயக்கம் ஈவேரா என்ற ஜாபாலி பெரியார்களால் ஆசிர்வதிக்கப்பட்டு இன்று அது விஷமாகப் பரவியுள்ளது. ஆக, பகுத்தறிவு பேசி நாத்திகம் பரப்பியது இன்றுவரை தமிழர்கள் அல்ல என்பதைச் சொல்லவே இப்பதிவு. தெய்வீகத் தமிழை பேசுபவன் நாத்திகனாக இருக்க வாய்ப்பில்லை. ஏதோவொரு மதத்தின்பால் தெய்வத்தின் மேல் நம்பிக்கை கொள்வான்.
என் நண்பர் ஒருவர் "நாத்திகம் தவறான மூட பழக்கங்கள் களைய உதவியது.  உதாரணம்: உடன் கட்டை ஏறும் வழக்கம், தேவ தாசி முறை ஒழிப்பு, பெண் அடிமை ஒழிப்பு... என்னைப் பொறுத்த வரை 50:50 நாத்திகம்:ஆத்திகம் வேணும்" என்றார்.
அதற்கு நான் " உடன்கட்டை, பால விவாகம் ஆகியதை ஒழித்த  ராஜாராம் மோகன் ராய், நாத்திகர் அல்ல. பிரம்ம சமாஜ் நிறுவியவர். ஓமந்தூரார் காலத்தில் தேவதாசி முறையை ஒழிக்க வித்திட்டது முத்துலட்சுமி ரெட்டி என்ற ஆத்திக மருத்துவர். Reforms என்ற அளவில் செய்யப்படும் எல்லாவற்றையும் நாத்திகத்தோடு இணைக்கக்கூடாது. பகுத்தறிவு என்பது மெய்ஞானம். இன்றைக்கு அது நாத்திகம் என்ற பொருள்படுகிறது." என்றேன்.
"தென்னகத்தில் நாத்திகம் பெருகும்" என்று காலக்ஞான நூலில் அன்றே மகான் சொன்னார்.
Image may contain: 2 people, people sitting and eyeglasses

வெள்ளி, 27 ஏப்ரல், 2018

தீர்க்கதரிசனம் கேளு!

காலக்ஞானம் ஒரு தீர்க்கதரிசன நூல். அதன் துளிகள் சில:
"வருங்காலத்தில் பாதரக்ஷை அணிந்துகொண்டு மக்கள் போஜனம் செய்வார்கள்" (ஆம். வீட்டைத்தவிர இன்றைக்கு நாம் ஓட்டலில், விழாக்களில் அப்படித்தான் உண்கிறோம்.)
"வாய்மை நேர்மை சத்தியத்தின்மீது நம்பிகை இல்லாமல் காகிதத்தை நம்பி வாழும் காலம்தான் இனி வரும்" (எல்லாவற்றுக்கும் கையெழுத்திட்ட ஸ்டாம்ப் பேப்பர், அக்ரிமென்ட்தான் பேசுகிறது.)
"தூரவாணியில்தான் இனி மக்கள் பார்த்து பேசிக்கொள்வார்கள்" (ஃபோன், ஸ்கைப் கைகண்ட மார்க்கமாக இருந்து வருகிறது.)
"மலம் மூத்திரம்கூட பொட்டலம் கட்டிவைத்தாலும் விற்றுப்போகும். (இன்று எல்லாவித குப்பை கூளங்களை காசு கொடுத்து வாங்கி உண்கிறோம், பயன்படுத்துகிறோமே!)
"தந்தை-மகன் சொத்துத் தகராறு நடக்கும், கணவன்-மனைவி நம்பிக்கை குறையும், கள்ள உறவுகள் அதிகமாகும் " (அத்தனையும் இன்று கண்கூடாக நடப்பதுவே.)
"காந்தி என்ற வைசிய குல சத்தியவான் தோன்றி நாட்டை வழி நடத்துவார். குடியாட்சி மலரும். (மோகன்தாஸ் காந்தி வந்தார், சத்தியாகிரகம் செய்தார், விடுதலைக்குப் போராடினார். மன்னர் ஆட்சி போய் மக்களாட்சியும் வந்தது.)
"திரை பிம்பங்கள்தான் அரசாட்சி செய்வார்கள்" (எம்ஜிஆர், என்.டிஆர், ஜெயலலிதா, போன்ற நடிகர்கள் அரசியலில் வந்துட அவர்கள் பிடியில் மக்கள் விழுந்தார்கள்.)
"ஏக காலத்தில் 'ராம் ராம் ராம்' என்ற ராம ராஜ்ஜியம் தென்னகத்தில் நடக்கும்.. விதவை பதினாறு ஆண்டுகள் தேசத்தை ஆட்சி செய்வாள்." (1980களில் எம்.ஜி.ராமச்சந்திரன் (தமிழ்நாடு), ராமகிருஷ்ண ஹெக்டே (கர்நாடகா), என்.டி.ராமாராவ் (ஆந்திரா)  சமகாலத்தில் முதலமைச்சராக இருந்தனர். மத்தியில் பிரதமாராக இந்திராகாந்தி இருந்தார்.)
"ஆந்திரத்தில் ஏழு கிராமங்கள் பிரிந்துபோய் தனி நாடாகும்" (ஆந்திர பிரதேசத்திலிருந்து பிரிந்துபோய் தெலங்கானா மாநிலம் அப்படித்தான் உருவானது.)
"கோயில் சிலைகளை கொள்ளையடிப்பது, நிலத்தை அபகரிப்பது, கோயிலில் லிங்கத்தை அடித்து நொறுக்குவது எல்லாமே நடக்கும்" (சர்வதேச சிலை கடத்தல்பற்றி செய்திகளில் படிக்கிறோம், அதோடு ஆங்காங்கே திராவிட கண்மணிகள் கைவேலையும் தெரிகிறது.)
Image may contain: 3 people, people smiling, sunglasses, beard and closeup
MGR  - Hegde - NTR 











Tintin

Do you remember this? The unforgettable characters in 'The Adventures of Tintin' comic series that we enjoyed in childhood. A pleasure to read, again and again, to turn over the big size pages filled with excellent colours of the Belgian cartoonist Herge... really nostalgic. 
Tintin and Snowy, Thomson and Thompson, Prof. Calculus, Captain Haddock, Bianca Castafiore
Image may contain: one or more people
It was an era when we were surrounded by all sorts of Tamil and English comic books.The book price of Tintin was unaffordably costly and it was always in circulation among friends. The final rounds of the book made its turn with cello tapes here and there. The comic had a power to transport us to the adventure world instantaneously. JK Rowling's Harry Potter series made its entry decades later. Though I did not read Potter, I can say Tintin was apt to capture kids during school vacation. It did not have lengthy prose narration or running story in high language. The storyboard was very impressively laid with small dialogues. Tintin is a treasure for all times.

எழுத்தும் வாசிப்பும்

ஒரு சமயம் பிரபல எழுத்தாளர் திரு. இந்திரா சௌந்தர்ராஜன் அவர்களுடன் பேசும்போது, "நீங்கள் விகடனில் தொடர்கள் எழுதியது எனக்கு நினைவுள்ளது. ஏறக்குறைய 50 புத்தகங்களுக்குமேல் எழுதியிருந்தாலும், 90களின் பிற்பகுதியில்தான் உங்கள் பெயர் பிரபலமானது. எதனால் இப்படி?" என்று கேட்டேன்.
அதற்கு அவர் "டிவி சீரியல் வந்தபிறகுதான் நான் வெளியுலகிற்கு அதிக அளவில் பிரபலமானேன். 80-90களில் எழுத்தாளர்களை விரல்விட்டு எண்ணிடலாம். இன்றைக்கு அவர்களுக்கு வயதாகி விட்டது. பலர் எழுதுவதையே நிறுத்திவிட்டனர். அதை இன்று ஒப்பிடும்போது பல புதிய எழுத்தாளர்கள் களமிறங்கி விட்டனர். ஆனால் வாசகர்களைவிட எழுத்தாளர்கள் எண்ணிக்கை அதிகமாகி விட்டது. நல்ல எழுத்தாளர்களின் படைப்புகள் வருவது மகிழ்ச்சியே.. அதேசமயம் வாசிப்பு முன்புபோல் இல்லாமல் குறைந்து போனது வேதனையே. மின்னூல், வலைதள நூல் என்று போவதால் பாரம்பரிய புத்தக வாசிப்பு என்பதை பலரால் உணர்வு பூர்வமாக அனுபவிக்க முடியாமல் போகிறது" என்றார்.
"ஆமாம் சார். ஒவ்வொரு முறையும் புத்தக் காட்சியில் இடம்பெறும் பதிப்பாளர் அரங்குகளின் எண்ணிக்கை அதிகமாவது இதற்குச் சான்று.. டிஜிட்டல் மின்னூல் வந்ததால் சில சமயம் நல்ல புத்தகம்கூட சோபிக்காமல் போவதுண்டு" என்றேன்.
"ஆமாம். சாதகம்-பாதகம் இரண்டும் உள்ளது" என்றார்.
No automatic alt text available.

வியாழன், 26 ஏப்ரல், 2018

அவனா, அவரா?

மனிதன் வாழும்போது அவன் எப்படி வாழ்ந்தான், என்ன சாதித்தான், சமூகத்திற்கு பயனுள்ள பணிகள் செய்தானா, என்ற கண்ணோட்டத்தில்தான் அவன் இறக்கும்போது பேச்சுக்கள் அமையும்.
'அவனா? அய்யே. தற்பெருமை பேசி கொல்லுவான், பகட்டு மனுஷங்களைத் தேடிப்போவான், குடும்பத்தை தவிக்கவிட்டான், கஞ்சிக்கு வழியில்லாம இருந்தான், ஆனா தினமும் ஜரிகை பட்டு கட்டிய பரம்பரைபோல் பேசுவான், கால்காசுக்கு பயனத்த புழுத்தப்பய, பூமிக்கு பாரமா இருந்துட்டு போனான்... ஹூம்.'
'அவரா? அச்சச்சோ! நல்ல மனுஷன். தங்கமான குணம், தவறான வழில போனதில்லை, உபகாரம்னா முதல்ல வந்து நிப்பாரு, நடுத்தர குடும்பமானாலும் தன்னாலான உதவிகளை சத்தம் இல்லாம செய்வாரு, நேத்து காலையிலகூட வாக்கிங் போனாரே... அடடா.'
இந்த இருவித வர்ணனைகளில் நம்மில் யார் எதில் சேர்த்தி என்பதை காலம்தான் முடிவுசெய்யும். வாழும் காலத்தில் கிடைக்கும் வாய்ப்புகளைப் பொறுத்து ஒருவன் நல்லவனாவதும் தீயவனாவதும் அமையும். யாரும் பிறப்பால் நல்லவனுமில்லை கெட்டவனுமில்லை. பிறந்த சிசுவின் தேகமானது எந்த குணங்களும் நிரப்பப்படாத காற்றடைத்த தோல் பாவையாக தாதுக்கள் நிறைந்த ஒரு பண்டமாகத்தான் வருகிறது. அதை முதலில் கெடுப்பது தாய், பிறகு சுற்றமும் நட்பும், பிறகு தானே விருப்பப்பட்டு கெடுவான்.
ஊழ்வினையால் ஒவ்வொருவனின் ஆன்மாவும் பாவம் செய்வதிலிருந்து அதிக எதிர்ப்பினை காட்ட முடியாமல் போகிறது என்பதே உண்மை. இதை வாழ்க்கையில் காட்டிப் புரியவைப்பது சனீஸ்வர பகவான், முப்பது வருடத்தில் அவனின் ஆன்மாவை புடம்போட்டு அவனை உயர்த்தவோ இறக்கவோ ஆற்றல்பெற்ற நீதிபதி. சிறுவயது முதலே பஞ்சாட்சரம் ஓதி வந்தால் இப்பிறவியை அழுக்கின்றி கடந்திடலாம்.
Image may contain: text

காஞ்சிக் கடிகை to நாலந்தா

புராண காலங்கள்தொட்டே நம் பாரத தேசத்தில் நினைத்துப் பார்க்க முடியாத அளவில் பல அறிவியல் உபகரணங்களும் அதீத கண்டுபிடிப்புகளும் பயன்பாட்டில் இருந்தன. எல்லாமே சித்தரிஷிகளின் எண்ணத்தில் உதித்தவையே. அதன் அடுத்த கட்டமாக கிபி.4 முதல் 14ம் நூற்றாண்டுவரை பல துறைகளில் முக்கிய முன்னேற்றங்கள் நடந்தன. இதைப்பொறுத்தே உலகின் மற்ற தேசங்களிலும் மனிதகுலம் ஆக்கபூர்வ செயல்களை செய்யத் தொடங்கியது. நம் தேசத்தில் இவையெல்லாம் ஆங்காங்கே தனி குழுவாகவும் பல்கலைக் கழகங்கள் வாயிலாகவும் உண்டானது.
தக்ஷஷீலம், நாலந்தா, காஞ்சிபுரம், வைஷாலி, போன்ற பல்கலைக் கழகங்களில் ஆயிரக்கணக்கில் பலதுறை மாணவர்கள் படித்தது தெரிகிறது. ஒவ்வொரு கலாசாலையில் என்னென்ன நூல்கள், புதிய ஆய்வுகள் செய்யப்பட்டது என்ற பட்டியலும் அவ்வப்போது பரிமாரிக் கொள்ளப்பட்டது. இங்கிருந்து அங்கும், அங்கிருந்து இங்கும் students exchange முறை இருந்ததும் உண்டு. ஒரு ராஜ்ஜியத்தின் /தேசத்தின் முன்னேற்றமும் கல்வியறிவும் அங்குள்ள நூலகங்களின் அளவை வைத்தே கணித்திடலாம். அதனால்தான் படையெடுப்பின்போது முதல் வேலையாக நூலகத்தை/ கலாசாலையை தீயிட்டு அழிப்பது வழக்கமாக இருந்தது. கல்வி இல்லாமல், வரலாற்று சுவடுகள் ஏதும் இல்லாமல் செய்தனர்.
சில சமயங்களில் உயர்கல்விக்கு சிறப்பு ஆச்சாரியர்கள் நாலந்தா-காஞ்சி-தக்ஷஷீலம் பல்கலைக் கழகங்களில் வகுப்பெடுக்க போய்வந்ததுண்டு. கடம்ப, பல்லவ மன்னர்களும் இங்கேதான் கல்வி கற்றனர்.. மத்சயம், மலையாள தேசம், ஸ்ரீசைலம், கோல்கொண்டா, ஷிமோகா பகுதிகளிலிருந்து கிபி.2-3 நூற்றாண்டுகளில் நிறைய பேர் கல்விகற்றனர். தாய்லாந்து, பாலி, கம்போஜியம், சீனா, சுமத்திரை, இலங்கை போன்ற நாடுகளிலிருந்து இங்கே காஞ்சியில் படிக்க மாணவர்கள் சேர்க்கை நடந்தது என்று சீன பயணியும், மதகுருவும், கல்வியாளரும், பன்மொழியாளருமான யுவான் சுவாங் தன் டைரியில் குறிப்பிட்டுள்ளார். தமிழும் சமஸ்கிருதமும் பல்லவ ஆட்சியில் கட்டாய போதனா மொழியாக இருந்ததாம். மாதவியின் மகள் மணிமேகலை காஞ்சி நகரத்துக்குவந்து புத்தபீடிகை அமைத்து, அமுதசுரபியைக் கொண்டு எல்லார்க்கும் பசியைப் போக்கினாளாம். அடேங்கப்பா!
போர் என்றாலே ஒற்றர்கள் மூலம் செய்தியறிந்து முடிந்தவரை ஏடுகளை/புத்தகங்களை, அரசு கஜானாவை மூட்டைக்கட்டி அப்புறப்படுத்தி யானை ஒட்டகம் மீது வைத்து ரிஷிகளின் அத்வானக் காட்டிலோ, மலை குகைகளிலோ, சுரங்கத்திலோ சேர்ப்பித்தனர். இதில் அழிந்துபோனதும் பலவுண்டு. இதையெல்லாம் தாண்டி இன்றளவும் சில ஓலைகள் நகல் எடுக்கும் அளவில் சுமாராக இருப்பதும் இறை செயல்தான். காலப்போக்கில் வேண்டாத நூல்களை அவனே அப்புறப்படுத்தி விடுவான். அதற்கு எதிராளிகள் ஒரு கருவி. தில்லையில் பூட்டிக்கிடந்த ஓர் அறையில் வேண்டாதவை செல்லரித்ததுபோக, எஞ்சிய ஒலைகளே நம்பியாண்டார் தொகுக்க உகந்தது என்பதை ஈசனே உணர்த்தியது போல்தான் எங்கும் நடக்கும். அந்த காலக்கட்டம்தான் தென்னாட்டில் பக்தி இலக்கியங்களுக்கும், அறிவியல் தொழில் நுட்பங்களுக்கும் பொற்காலமாகத் திகழ்ந்தது
Image may contain: outdoor

புதன், 25 ஏப்ரல், 2018

சபாபதி அளித்த திருவாசகம் நூற்திரட்டு

சிவபெருமான் பல நூறு ஓலைகளில் தன் கைப்பட எழுதிய திருவாசகம் எப்படி இருக்கும் என்று நாம் நினைப்போம். தில்லையில் சிவத்தொண்டு புரிந்து கொண்டு வாழ்ந்தார் திருவாதவூரார் (எ) மாணிக்கவாசகர். அங்கே தினமும் சொற்பொழிவு கேட்கவரும் முதியவர் ஒருவர் கேட்டுக்கொள்ள திருக்கோவைப்பதிகம் பாடினார். அதையெல்லாம் முதியவராக வந்த ஈசனே எதிரில் அமர்ந்து எழுதியது என்பது மறுநாள் கருவறைமுன் படியில் இருந்த ஓலைகட்டைப் பிரிக்கும்போது தான் தெரிந்தது. அதில் 'திருவாதவூரார் சொல்ல சிற்றம்பலமுடையோன் எழுதியது' என்று ஈசனே கையொப்பமிட்டதை அனைவரும் படித்தனர். மணிவாசகரைப் பாடச்சொல்லி அத்தனையையும் எழுதியது சிவன். எழுதி அம்பலத்தின் படியில் வைத்துவிட்டுப போய்விட்டார். மணிவாசகர் வெவ்வேறு தலங்களில் திருவாசகப் பாடல்களை இயற்றினார். தினசரி பிரசங்கம் தில்லையில் நடக்க அங்கே எல்லாவற்றையும் பாட அதை சிவன் நூல் திரட்டாக தொகுத்து எழுதினார். இது பன்னிரு திருமுறைகளில் எட்டாம் திருமுறையாக உள்ளது. 'நரியைப் பரியாக்கி' திருவிளையாடல் புரிந்த திருபெருந்துறை நிகழ்வை உரைக்கும் அந்த பாடல் ஓலையைத்தான் இங்கு படத்தில் போட்டேன். திருக்கோவையாரை அவர் எழுதவில்லை நம்பியாண்டார் நம்பி இயற்றியது என்றும் சொல்வோர் உண்டு. நாம் அறியோம்!
நன்றி:- அருள்மிகு ஆத்மனாதசுவாமி திருக்கோயில், ஆவுடையார் கோயில், திருப்பெருந்துறை & தமிழ்நாடு இந்துசமய அறநிலையத் துறை
No automatic alt text available.

சரித்திர குளறுபடி

திருமாலின் அம்சமும் போகரின் அவதாரமுமான ஸ்ரீமத்விராட் போதுலூரி வீரப்பிரம்மேந்திர சுவாமியின் ஆராதனை விழா இன்று முதல் நான்கு தினங்கள் அவரது கந்திமல்லையப்பள்ளி (கடப்பா) ஜீவ சமாதியில் நடைபெறுகிறது. April 25 - 28.
அவர் வாழ்ந்த காலம் கிபி.1608-1693 (17ம் நூற்றாண்டு ) என்று இணையத்திலும் சில தெலுங்கு புத்தகங்களிலும் போட்டுள்ளனர். அவருடைய பாடல் கிரந்தங்களை துல்லியமாகப் படித்தால் சொல்லப்பட்ட ஆண்டுக் கணக்கு தவறு என்பது புரியும். அவர் 10ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் என்பது என் கருத்து. என் கூற்றுப்படி அவர் கிபி.817 பிறந்து கிபி.992 சமாதிக்குப் போனார். சமாதியின்போது வயது 175 என்று சொல்லியுள்ளார். அவர் இன்னும் உயிருடன் உள்ளே தபஸ் செய்து கொண்டிருக்கிறார்.
அவர் சமாதியான ஒரு வருடத்திற்குள் அவருடைய இளைய மகன் போட்லூரையா, தன் தந்தை உயிருடன் இருப்பாரா என்ற சந்தேகத்தில் சமாதி கல்லை இடித்துப்பார்க்க, அப்போது கோபம் பொங்கும் கண்களுடன் 'ஏனடா திறந்தாய் மூடனே, சமாதியை மூடு... நான் என்றும் இறப்பதில்லை' என்று தன் பிள்ளையை கோபத்தோடு பார்த்து உறுமினார். அவர் திறந்ததற்கு சாபமும் கொடுத்தார்.
அவர் தன்னுடைய காலக்ஞான நூலில் தான் வாழ்ந்த காலம்பற்றி பல ஆதாரங்களைக் கொடுத்துள்ளார்.
1. நான் சமாதிக்குப் போனதும் 16 வருட சுற்றுகள் (960 வருடங்கள்) முடிந்தபின்னர் வரும் விஷ்வாவசு ஆண்டில் மீண்டும் பிறப்பேன்.
2. நான் வரும் காலத்தில் கந்திமல்லையப்பள்ளி பெரிய ஊராக ஏற்றம் பெற்றிருக்கும். அங்கு பூலோக கைலாசம்போல் பஞ்சபிரம்மத்திற்கு ஒரு 'நவரத்ன மண்டபம்' எழுப்பபட்டிருக்கும். (இது 2004ல் தான் கட்டப்பட்டது.)
3. சோழர்களின் ஆட்சி விரைவில் வீழ்ச்சி அடையும். (கிபி.1279ல் மூன்றாம் ராஜேந்திர சோழனுடன் சாம்ராஜ்ஜியம் முடிந்தது. இந்த விஷயத்தை 4 நூற்றாண்டுகள் கழித்து சொல்வதில் என்ன பயன்?)
4.வைணவ குலத்தில் ஸ்ரீ ராமானுஜர் என்ற பெருந்தகை வருவார். (கிபி.1017 ஆம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூரில் பிறந்தார்.)
5.எதிர்காலத்தில் பரங்கியர்கள் நம் தேசத்தை ஆட்சி செய்வார்கள். (ஒருவேளை 17ம் நூற்றாண்டு கணக்குப்படி பார்த்தால், அவர் இதைச் சொன்னபோது ஆங்கிலேய East India Company காலூன்றி 90 ஆண்டுகள் ஆயிற்று. நாட்டு நடப்பு சங்கதியை தீர்க்க தரிசனம் என்று சொன்னால் ஜனங்கள் ஏற்பார்களோ?)
6. வீரபோக வசந்தராயராக தான் சக்தி பெற்று வரும் காலத்தில் பிரளயம் உண்டாகும் (2004 சுனாமி), இந்திர கீலாத்ரியில் கிபி.2011ல் பக்தர்களுக்கு தரிசனம் தருவேன் (இதன்படி பார்த்தால் 17ம் நூற்றாண்டு கதை சரிபடாது. அவர் பதினாறு சுற்று (960 வருடங்கள்) முடிந்து இன்னும் பிறந்திருக்க வாய்ப்பே இல்லையே! அப்போது இந்த நிகழ்வுகள் எப்படி முடியும்?)
7. நான் வரும்போது ஏழு கிராமங்கள் பிரிந்துபோய் தனிமாநிலமாகி இருக்கும். (அண்மையில் தெலங்கான மாநிலம் அப்படித்தான் உருவானது.)
ஸ்ரீ வீரப்பிரம்மத்தின் காலம் 17ம் நூற்றாண்டு என்றால் ஸ்ரீ ராகவேந்திரர், நெரூர் சதாசிவ பிரம்மேந்திரர், போதேந்திரர், மற்றும் பலர் இவருக்கு சற்று முன்பின்னோ சமகாலத்திலோ இருந்தவர்கள் ஆவார்கள். முதலாம் சரபோஜி மன்னரின் காலத்தில் வாழ்ந்த இவர்கள் யாருமே அப்படியொரு மகானைப் பற்றி ஏன் எங்குமே குறிப்பிடவில்லை? என்பதை கருத்தில் கொள்ளவேண்டும்.
கலி 4094 + (16*60) வருடங்கள் = கலியாண்டு 5054. இது 1965-66 வருடத்தைக் குறிக்கிறது.
ஆகவே, அவர் பாடல் வசனத்தை ஆய்ந்து பார்த்தவரை, கலியாண்டு 4094, வைசாக மாதம், சுக்லபட்ச, சுத்த தசமி, மதியம் 2.30 அளவில் அவர் சமாதியில் போய் அமர்ந்தார். தெலுங்கு பஞ்சாங்கம்படி அவர் சமாதி பிரவேசம் செய்த அத்தருணம் இன்று இந்த பிற்பகல் வேளையில். 'ஓம் ஹ்ரீம் க்லீம் ஸ்ரீம் சிவாய பிரம்மனே நமஹ'... குருநாதர் திருவடிகளுக்குப் போற்றி.

சாம கானம்

சாம வேதமான இசை வேதம்தான் நம் ஆதாரப் பண். பிற்பாடு அதில் சுவர மாற்றங்கள் காலப்போக்கில் வந்தது என்பதும் அறிகிறோம்.
திருவாசகத்தில் மாணிக்கவாசகர் சிவனை இப்படிப் போற்றுகிறார்.
'சங்கரனைச் சந்தோக சாம மோதும் வாயானை
சாமத்தின் இசைவீணை தடவிக் கொண்டார்
ஊடலை ஒழிக்க வேண்டிப் பாடினார் சாம வேதம்
சாமுண்டி சாம வேதங் கூத்தொடும் பாட வைத்தார்
சாமத்து வேத மாகி நின்றதோர் சயம்பு தன்னை'
சாமத்தை சந்தத்தோடு பாடி சிவனை (சாம வேதம் பாடுவோனை) துதிக்கவேண்டும் என்கிறார். நாம் இற்றைக்கு சொல்வதுபோல் 'தமிழ் மறை' என்று அவர் பாடலில் ஏதும் குறிப்பிடவில்லை. அதுபோல் 'மறை' என்றால் குரான், 'வேதம்' என்றால் பைபிள் என்று பல காலமாக சொல்லிவருகின்றனர். அப்படியெனில் தொழுகையில்/தோத்திரத்தில் சாம கானம் உண்டு என்று பொருள்படுகிறது. பௌத்த மதத்திலும் திரிபிடகம் சந்தத்தோடு பாடப்படுகிறது. நம் சாமவேதம் எப்படிப் பாடி இசைக்கபடுகிறது என்பதை இங்கே கேளுங்கள்.
https://www.youtube.com/watch?v=DX11bBpuKlU
இதெல்லாம் வெட்டவெளிச்சமாக உள்ளதால், இது எப்படி மறைக்கப்படும் 'மறை' ஆகும்? எது மறைக்கப்பட்டது? எதுவிமில்லை? பரப்பிரம்மம் பற்றி அறிய விரும்பாத ஏனையோர்க்கு இவை புலப்படத் தேவையில்லை என்று இருந்தபடியால் அதை 'மறை' என்று சொன்னார்கள். இன்று எல்லா மறைகளும் அச்சு நூலாக மின்னூலாக திறந்துதான் கிடக்கிறது. ஆங்கங்கே வகுப்புகள் நடக்கிறது. இன்று இதைக் கற்க எந்தத் தடையுமில்லை.
வேள்விகள் வளர்ப்போர், அர்ச்சனை செய்வோர்; மாந்த்ரீகம், எட்சிணி, செய்வோர்; விஞ்ஞான பூர்வ தொழில்கள் செய்வோர்; மருத்துவம் யோகம்; இசை நாட்டியம் பயில்வோர் என்று ஒவ்வொரு பிரிவிற்கும் ஏற்ற நூல்களான இவற்றை அன்றாடம் படித்து அறிய ஆர்வம் இருக்கா? அது இருந்தாலும் கண்களுக்கு மறைவாகவே உள்ளது.
என் கொள்ளு தாத்தா காலத்தில் எங்கள் ஊரில் ரயில்வே பணியில் இருந்து ஓய்வு பெற்ற ஒருவர் அதர்வ வேதம் படித்தபின் சாமக்கோடாங்கியாகி அதிகாலையில் வீடுகளுக்கு வருவாராம். யார் எப்போது எந்த வேதம் படிக்கவேண்டும் என்பது அவன்தான் தீர்மானிக்கிறான்.

தமிழா இருந்தா ஏத்துப்போம்!

தமிழ் சித்தர்கள் மிகப்பெரிய அளவில் அறிவியல் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் செய்து மனிதகுலத்திற்கு பங்களித்ததால், அவர்களை எல்லோரும் 'தமிழன்டா சித்தன்டா' என்று சொல்லி மகிழ்கிறார்கள்.
அதுவே ஒரு இராமன் தன் வானர சேனையோடு இராமேஸ்வரம் முதல் இலங்கைவரை கற்பாலம் அமைத்தான் எனும்போது 'அஹ்.. அது கப்சா... இராமன் என்ற ஓர் ஆரிய என்ஜினியர் ஒரு பாலம் கட்டினானாம், அது இன்னிக்கும் அடில அப்படியே நிக்கிதாம்... அப்போ நம்மூர்ல பிரிட்ஜ் கட்ட அவனையே கூப்பிடலாமே' என்ற ரீதியில் பேசும் தமிழர்களைப் பார்த்தால் இப்படி அடிமட்ட மக்காக இருக்கிறார்களே என்று தோன்றும்.
சாமவேதம் இசைக்கும் ஆரியன் என்ற வடமொழியன் ஈசன் தன் முகத்திலிருந்து உருவாக்கிய கடவுளர்களில் விஷ்ணுவும் ஒன்று. திருமாலின் அவதாரமான தமிழ் சித்தன் போகர் எண்ணிலடங்கா கருவிகளைப் படைத்தார். பாரச்சூட், ஹாட் ஏர் பலூன், நீராவிக் கப்பல், விமானம், காகிதம், காகித உற்பத்தி ஆலை, தானியங்கி அச்சு எந்திரம், கிளாஸ், ஸ்கியுபா, டேலஸ்கோப், பீங்கான், மின்- காந்தவியல் /மின்சார உற்பத்தி கலன்கள், நவபாஷாண மருந்து, சிந்தாமணி ரடார், எலெக்ட்ரோ பளேடிங் தங்கமுலாம் பூச்சு, ரசவாத தைலங்கள், முப்பு குரு மருந்துகள், மூலிகை குளிகைகள், சோப், ரசாயன சுத்தி முறைகள், செயற்கை வைரங்கள், ஸ்கேனர், டை-எலெக்ட்ரிக் செயல்பாடுகள், இயற்பியல் செயல்வடிவங்கள், மாயாஜால வினோதங்கள் என்று எவ்வளவோ சொல்லிக்கொண்டு போகலாம். இதை சீன ஜனங்களுக்கும் சொல்லிக்கொடுத்து பிரபலப் படுத்தினார். அகத்தியர் மெச்சிய சித்தனானார்!
போகரே இராமனாய் இருந்து செய்த அஷ்ட சித்திகளையும், கிருஷ்ணனாய் இருந்து செய்த பல ஜாலங்களையும், அணுப்பிளவு அஸ்திர சோதனைகளையும், இங்கே வடமொழியைத் தூற்றும் நம் தமிழர்களால் ஏற்க முடியவில்லை. ஆனால் 'தமிழ் மரபு' சித்தர் என்றதும் கண்ணை மூடிக்கொண்டு போற்றுகிறார்கள். கடவுளாய் சித்தனாய் இருந்தாலும் அறிவியல் தொழில்நுட்ப ரகசியங்களை எங்கும் வெளிக்காட்டாமல் அவரால் இருக்க முடியவில்லை என்பது சத்தியம். அவரே சிவபாலன் முருகனாய் ஆதிகுடி நிலத்தவனாக வந்ததால் இங்கே சிவனைவிட ஒருபடி ஒஸ்தியாக மரியாதை பெற்றுள்ளார். 'அகத்தியர் சௌமிய சாகரம்', 'சுப்பிரமணியர் ஞானம்' ஆகிய நூல்களைப் படித்தால் விளங்கும். முன்னது ஈசன் இயற்றி அகத்தியர்க்குத் தந்தது, பின்னது முருகனே இயற்றி அகத்தியர்க்கு உபதேசித்தது.. தமிழ் மாயையில் குழம்பிப்போய் எதையும் புரிந்துகொள்ள முடியாதோரை என்னவென்று சொல்வது?
தோடா... ஒரே ஆளு ஆரியனா தமிழனா டபிளாக்டு குடுத்துகிறாரு. சூபரு பா!
Image may contain: one or more people and night

செவ்வாய், 24 ஏப்ரல், 2018

சாம வேதம்

கீதோபதேசத்தில் கிருஷ்ணர் 'மாதங்களில் நான் மார்கழி, வேதங்களில் நான் சாமவேதம்' என்று சொல்கிறார். ஈசனை துதிக்க சாம கானமே சிறந்தது என்று ரிஷிகள் சொல்லியுள்ளனர். இறைவனை இசையால் துதித்தால் அமைதியைத் தரும். இந்த தொகுப்பு கீதத்தை 'ஸாமன்' என்கின்றனர். வியாசர் தொகுத்த வேத நூல்களை ஒவ்வொரு ரிஷியிடமும் கொடுத்து அதைக் கற்று மற்றவர்களுக்கு கற்பிக்கும்படி செய்தார். அப்படியாக சாமவேதத்தை ஜைமினி ரிஷியிடம் தந்தார். இயல் இசை நாட்டியம் போன்ற நுண்கலைகள் இந்த வேதத்தின் கீழ் வருகிறது.
1875 பாடல்கள் கொண்ட திரட்டுதான் சாம வேதம். இதில் 75 ரிக் வேதத்திலிருந்து கையாளப்பட்டுள்ளது. சப்த சுவரங்களுக்கு இதுவே ஆதாரமாக உள்ளது, அதில் அதன் அளவும் காலப் பிரமாணமும் துல்லியமாக சொல்லப்பட்டுள்ளது. மேற்கத்திய இசையும் ஏறக்குறைய நம் கோயிலில் சாமவேதம் பாடுவது போலவே உள்ளது. சாமவேதம் பற்றிய ஒரு சுவாரிசயமான செய்திதான் இந்த படத்தில் போட்டுள்ளேன். தோண்டத் தோண்ட பொக்கிஷங்கள் வெளிவருகிறது. இந்த சாமன் சங்கீதம்தான் psalm, song என்று ஆங்கிலத்தில் ஆனது.
ஒருமுறை அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி, ராஜராஜ சோழனின் ஆயிரமாவது அரியணை விழாவுக்கு வந்த சமயம், பெரிய கோயிலில் வேத விற்பன்னர்கள் சாமவேதம் இசைத்தனர். அதை ரசித்துக் கேட்டவர், 'வடக்கே இதுபோல் கனத்தோடு யாரும் பாடி நான் கேட்டதில்லை, வெரி மெலோடியஸ்' என்று கூறினாராம். சோழன் தன்னுடைய காலத்தில் வேதங்களை காக்கவேண்டி அதில் கற்றுத்தேர்ந்த விற்பன்னர்களை அழைத்து வந்து தன் நாட்டில் குடியமர்த்தி 'சதுர்வேதி மங்கலம்' என்று பெயரிட்டான் என்ற செய்தியையும் கேட்டறிந்தாராம்.
Image may contain: text

திங்கள், 23 ஏப்ரல், 2018

'மறை' வேதங்கள்

'ரிக், யஜூர், சாம, அதர்வ' என்ற நான்கு வேதங்கள் பற்றி கேள்வி பட்டுள்ளோம். ஆனால் அதில் என்ன சங்கதிகள் உள்ளது என்பது நாம் பல காலமாக படிக்காமலே உள்ளோம். அதன் சாரத்தை நால்வரும், வள்ளுவரும் தங்கள் நூல்களில் தந்ததால் சற்று புரிந்தது. ஆனால் அத்தனையையும் எளிமையாக ஆழமாகப் படித்து சிந்திக்க எல்லோருக்குமே ஆர்வம் இருக்கும். அல்லவா? அண்மையில் நான்கு வேதங்கள் பற்றி அலசிக் கொண்டிருக்கும்போது கீழ்கண்ட நூல்கள் கண்ணில்பட்டது. காலஞ்சென்ற பண்டிதர் எம்.ஆர்.ஜம்புநாதன் அவர்களின் தமிழ் மொழிபெயர்ப்பு அருமை. ஒவ்வொரு வேதத்திலும் மண்டலம்-சூக்தம்-மந்திரம்-பொருள் என்று விலாவாரியாக கொடுத்துள்ளார். அடிப்படை ஆன்மிக அறிவுள்ள எவருமே எளிதாகப் படிக்கும்படி உள்ளது. அதை வெளிட்டோர்: T.N.A.Iyer, Flat No.8, Second Floor, 'Rag Mayur', 19th Road, Khar Road, Mumbai 400052.
ஐந்தாம் வேதமான 'பிரணவ' வேதத்தை காலஞ்சென்ற சில்பகுரு V.கணபதி ஸ்தபதி தமிழில் தொகுத்தார். Panchama Vedham ஐந்து வேதங்களும் விஸ்வகர்ம ஈசனின் பஞ்ச முகத்திலிருந்து வடமொழியில் வெளிப்பட்டவை. யஜூர் வேதமானது கிருஷ்ண/சுக்ல என்று இரு பிரிவுகள் கொண்டுள்ளது. கிருஷ்ண பிரிவில் விஸ்வக்ரம சூக்தம் பற்றி அதிகம் சொல்கிறது. இதன் உபவேதங்களும் அச்சில் கிடைக்கிறது.
விஸ்வகர்மரின் ஐந்து முகத்திலிருந்து படைக்கப்பட்ட எல்லா நூல்களும் இன்றுவரை அப்படியேதான் உள்ளன. இக்கால மனித தேடலுக்கு அவை கிட்டாதபோது ஆங்கிலேயரும் ஆரியர்களும் சேர்ந்து நூல்களை அழித்தனர் என்று கதை திரிப்பது வழக்கம். ஈசனைத் தவிர யாராலும் அழிக்க முடியாது. ஆனால் உண்மையில் அவை எங்குள்ளது? எங்கோ உள்ளது. எல்லோரும் புழங்கும் இடத்திலேயே இருக்கும் ஆனால் எல்லோர் கண்களுக்கும் தெரியாது. அப்படியே தெரிந்தாலும் மற்றவர்களுக்குப் படிக்க ஆர்வமின்றி இருக்கும். ஏன்? யார் கையில் எப்போது எந்த நூல் கிடைக்கப் பெறவேண்டுமோ அப்போதுதான் அது வெளிப்படும். அதுவரை அது மறைப்பாக இருக்கும் என்பது சித்தர் வாக்கு. அப்படித்தான் ஐந்தாம் வேதமான 'பிரணவ வேதம்' நூல் அழிந்துபோனது என்று குற்றம் சாட்டப்பட்டு பின்னர் மறைப்புடன் இருந்தும், ஒருவர் அதன் ஆயரக்கணக்கான சுலோகங்களை தன் வாழ்நாள் முழுதும் மனனம் செய்தபின் அந்த மூலநூல் மீண்டும் மறைந்து போனது. இதைப்பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம்.
No automatic alt text available.



ஞாயிறு, 22 ஏப்ரல், 2018

பொன் ஏர்

'பொன் விளையும் பூமி' என்பதற்கேற்ப முன்பெல்லாம் சித்திரை முதல்நாள் ஈசானப் பகுதியில் பூசை செய்தபின் மெய்யாகவே பொன்னில் செய்த சிறிய (சாக்பீஸ் அளவு - 3 பவுன் இருந்தால் அதிகம்) ஏர்கொண்டு பூமியைக் கீறிவிட்டு உழுதார்கள். இதனால்தான் பொன்னேர் என்ற பெயர் வந்தது. பிற்பாடு எல்லோர் குடும்பத்திலும் செல்வம் குன்ற, ஏரில் ஒரு குந்துமணி தங்கம் கட்டி உழுதனர், இக்காலத்தில் மஞ்சள்-குங்குமம் பூசிய வெறும் ஏர் வைத்து உழுகிறார்கள். நிலம் எதுவும் இல்லாதோர் கற்பனையில் ஏரோட்டலாம்.
முதலில் உழுத மண்ணை சாஸ்திரத்திற்கு ஒரு கூடையில் வைத்து அதை கிரமப்படி உள்ளூர் கோயில் திருப்பணிக்கு கொடுத்தனர். அந்த நிலப்பகுதியில் பிள்ளையார்/வாஸ்து பூசை செய்வதுபோலவே இருக்கும். நிலச்சுவான்கள் முதல் உழவு நாளில் கொழுக்கட்டை, கொத்துகடலை சுண்டல், வெல்ல அவல்/பிட்டு, மோர், வெள்ளரிக்காய் கோசுமல்லி செய்து அங்கு பண்ணை ஆட்களுக்கு விநியோகம் செய்வார்கள். அதன்பின் ஆடிப்பட்டம் விதைக்க நிலம் தயாராகும். (வேலி போட்ட) மிகச்சிறய அளவு நிலத்தில் முதலில் விளைந்த பயிரை கோயில் காளையை விட்டு மேய விடுவார்கள். என் கொள்ளுத்தாத்தா தன் நிலத்தில் அப்படித்தான் செய்தார் என்று கேள்விப்பட்டுள்ளேன். இப்போதும் எல்லா ஊர்களிலும் இப்படித்தான் செய்கிறார்களா என்று தெரியவில்லை.

பொன்னாலான கலப்பையைக் கொண்டு ஏர் உழுதனர் என்பதை மதுரைத்தாலாட்டு சொல்கிறது.

மதுரைக்கும் நேர்கிழக்கே மழைபெய்யாக்கானலிலே
வெள்ளிக்கலப்பைகொண்டு சொக்கர் விடியக்காலம் ஏர்பூட்டி
தங்கக்கலப்பைகொண்டு சொக்கர் தரிசுழுகப்போனாராம்
வாரி விதைபாவ வைகைநதித்தீர்த்தம் வந்து
அள்ளி விதைபாவ அழகர்மலை தீர்த்தம்வந்து
பிடித்து விதைபாவ பெருங்கடல் தீர்த்தம்வந்து
எங்கும் விதைபாவ ஏழ்கடல் தீர்த்தம்வந்து 
முத்து விதைபாவ மிளகுச்சம்பா நாத்துநட்டு 
பவளக்குடைபிடித்து சொக்கர் பயிர்பார்க்கப் போகையிலே
வங்காளச்சிட்டு வயலிறங்கி மேய்துன்னு
சிங்காரவில்லெடுத்து தெறித்தாராம் அம்பினிலே
ஊசிபோல் நெல்விளையும் ஒருபுறமாய் போறேரும் 
பாசிபோல்நெல்விளையும் பட்டணம்போல் போறேரும்
சரஞ்சரமாய் நெல்விளையும் சன்னதிபோல் போறேரும் 
கொத்துகொத்தாய் நெல்விளையும் கோபுரம்போல் போறேரும் 


No automatic alt text available.

நீங்களும் கல்கியே!

இக்கலியுகத்தில் சித்தர்கள் எண்ணற்ற பல அவதாரங்கள் எடுத்து பாவிகளை அழித்து தர்மத்தை நிலைநாட்டி வருகின்றனர். என்னதான் அவர்கள் நிலைநாட்டினாலும் கிருத, த்ரேதா, துவாபர யுகங்களில் நிலவிய தர்மம் இன்றில்லை.. தள்ளினாலும் போகாத அளவில் இருக்கும் பாவங்களை இந்த யுகத்தில் அவ்வப்போது அகற்றி தர்மபூமியை செப்பனிட்டு வருகிறார்கள்.
கடந்த பதிவுகளில் நாம் இதுகாறும் அறிந்தபடி திருமாலின் வடிவாகிய சித்தர் போகர்தான் இறுதியாக வரப்போகும் கல்கி அவதாரம். எப்போது வரும்? இன்னும் நாலு லட்சத்து இருபத்தேழாயிரம் வருடங்கள் போகவேண்டும். அதற்குள் எத்தனையோ மகான்களாக போகர் சுழற்சியில் வந்து அதர்மத்தை அழிப்பார். இறுதியான கல்கி வரும்முன் இவர் பல அவதாரங்கள் எடுத்து முன்னோட்டம் காண்கிறார்.
ஆனால் இக்காலத்தில் பலபேர் 'நானே கல்கி' என்று சொல்லி வருவது நமக்கு குழப்பத்தைத் தரும். அல்லவா? கல்கியின் முன்னோடிகளாக வருவோர் ரிஷி குலத்தைச் சேர்ந்தவராக இருக்கவேண்டிய அவசியமில்லை. கல்கியின் பிரதிநிதியின் வலைப்பின்னலில் வரும் பலபேர் சிறுசிறு அளவில் கல்கியாகவே தனித்து செயல்படுவர். இவர்களை கல்கி என்று நாம் சொல்லிட முடியாது. ஆனால் அந்த ஆளுகைக்குட்பட்டு தர்மம் காக்க விழைபவர்கள்.
எப்படி கான்ஸ்டபிளையும் / ஐஜியையும் பொதுவாக 'போலீஸ்காரர்' என்று சொல்வோமோ அதுபோல்தான் இதுவும். இங்கே நம்முடைய நட்பு வட்டத்தில் ஒத்த சிந்தனையும் ஆன்மிக தாக்கமும் கொண்ட பலபேர் இருக்கிறோம். நம்மில் யாரோ ஒருவர் கல்கியின் நேரடி பிரதிநிதியாக இருக்கலாம், நமக்கே தெரியாது. மற்றவர்கள் இந்த வலைப்பின்னலில் வரும்போது ஒவ்வொருவருமே கல்கி என்ற நிலையில்தான் செயல்படுவோம். ஆனால் உண்மையில் நாம் கல்கி அவதாரம் இல்லை என்றாலும், தர்மத்தைக் காக்க எடுக்கும் முயற்சியும் விடுக்கும் செய்தியும் நம்மை கல்கியாகவே எண்ணச் செய்யும். 'அந்நியன்' அம்பி போல்தான்.
போலியான கல்கிகள் பலபேர் வந்தாலும் நாம் அவர்கள் பின்னே போனதில்லையே.. ஏன்? மெய்யான கல்கி நம்மை வழிதவற விடுவதில்லை. அப்படியேபோய் ஏமாறினால் அது கர்மவினை பயன்தான். பல போலி கல்கிகள் வந்து போவார்கள். பல உண்மை கல்கிகள் ஒசையின்றி செயல்படுவார்கள். அப்படிப் பார்த்தால் நீங்களும் கல்கி அவதாரமே! அது உங்களுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. சித்தரின் அருள் எல்லோருள்ளும் உள்ளது. தக்க சமயம் வரும்போது இருள் விலகும் அருள் வெளிப்படுத்திக் கொள்ளும்.
Image may contain: one or more people

அவதார ஒற்றுமைகள்

மகாவிஷ்ணுவின் அவதாரமான இராமனும்-கிருஷ்ணனும் தானே என்று சித்தர் போகர் தன் நூலில் தெளிவாகக் கூறியுள்ளார். அதுபோல் பாவங்கள் மிகுந்த கலியுகத்தில் அவ்வப்போது தானே பல ஜனன அவதாரங்களை மேற்கொள்கிறார். அவற்றில் நமக்குத் தெரிந்தது சில, தெரியாதது பல. ஸ்ரீகிருஷ்ணர்- ஸ்ரீவீரப்பிரம்மேந்திரர் இடையே நிறைய ஒற்றுமைகளைக் காணலாம். அதை இங்கே தந்துள்ளேன்.
Image may contain: text

செவ்வாய், 17 ஏப்ரல், 2018

அட்சய திரிதியை

டிவியில் நொடிக்கு ஒருதரம் அட்சய திரிதியைக்கு இங்கே வாங்க, அங்கே போங்க என்று தங்கநகை மாளிகைகள் விளம்பரம் கொடுக்கிறார்கள். தங்கம் வாங்க மூன்று தளங்கள், பிளாட்டினம் வாங்க நான்காவது தளமாம். என்றுமே எனக்கு ஏனோ தங்கம் வெள்ளி நகைகள் அணிவதில் ஆசை இல்லை. தெரிந்தவர் ஒருவர் 15 ஆண்டுகளுக்கு முன் ராசிக்கல் தங்க மோதிரம் அணிந்துகொள் என்று நச்சரித்தார். 3 கிராமில் ஓபன்கட் செய்து கொடுத்தார்.
அதை அணிந்தபின் எல்லாமே எதிர்மறையாக நடக்கத் தொடங்கியது. வடக்குபட்டி ராமசாமி ஐயாயிரம் தரவில்லை, என்னுடைய அமெரிக்க நிறுவனம் சென்னை கிளையை மூடியது, என் கேனன் கேமிரா நீரில் நனைந்து பழுதானது, உடல் எடை இறங்கியது, இப்படிப் பல நடந்தன. அதன் பின் இது நமக்கு சேராது என்று உள்மனம் எச்சரித்ததால், அடுத்த மாதமே, தங்க மோதிரத்தை வேண்டாமென விற்றேன். வைடூர்யம்-கோமேதகம் கற்களை பிரித்தெடுத்து அம்மன் கோயில் உண்டியலில் போட்டேன். பிற்பாடு நல்ல மாற்றங்கள் நடந்தது.
ராசிக்கல் சமாச்சாரம் எனக்கு ஏற்புடையதல்ல என்பதை ஈசன் உணர்த்தினான். அதுபோல் இது எனக்கு நஷ்டம் ஏற்படுத்தக்கூடாது என்ற வகையில் இதற்கு இணையாக ஒரு தொகை என் பழைய நிறுவனத்திலிருந்து அதிகப்படியான போனஸ்சாக வந்தது. நான் இதை எதிர்பார்க்கவில்லை. இதை எதற்குச் சொல்கிறேன் என்றால், ஒன்றில் நமக்கு ஆசை இல்லாதபோது யாரேனும் கட்டாயப்படுத்தி கொடுத்தாலும் அதை முழுதும் ஒதுக்கிடவேண்டும்.
அது நடந்த அடுத்தமாதம் வேலூரில் என் நண்பர் வீட்டு திருமண விழாவில் கலந்துகொண்டேன். அப்போது அவருடைய உறவினர் யாரோ ஒரு கிராமத்து பெரியவர் திடீரென என்னருகில் வந்து அமர்ந்து கொண்டு, 'ஏம்போ... செருப்பு கழட்டுபோ..' என்று கூறினார், உடனே அவர் என் வலது மோதிரவிரலை தொட்டுக்கொண்டு ஏதோ மந்திரம் சொன்னார். கண்ணை மூடியபடி, 'ஏ சாமி... வைரம் வைடூர்ய ரத்னங்களில்ல உன்னுள்ள ஓடிகிட்டு இருக்கு...' என்று சொல்லிவிட்டு முருகன்மீது ஒரு பாட்டு எழுதிகொடு என்று கேட்டு வாங்கிக்கொண்டார். ராசிக்கல் எனக்கு ஒவ்வாது என்பதை இவர் இப்படி அறிவுறுத்தினாரோ என்று நினைத்தேன். பிற்பாடு என் நண்பரிடம் 'அந்த பெரியவர் யாரு, என்கிட்ட வந்து திடீர்னு இப்படிச் சொன்னாரு' என்றேன். அதற்கு அவர் 'சந்துரு, அவர் என் அம்மாவோட தாய்மாமன். ஊர்ல அருள்வாக்கு சொல்றவரு' என்றார். எது எப்படியோ நமக்குப் படிப்பினை தந்தது.
சரி. நம் குருநாதர் ஸ்ரீவீரப்பிரம்மம் அவர்கள் தங்கம் பற்றி என்ன சொல்லியுள்ளார்?
"வருங்காலத்தில் தங்கம் காணக்கிடைக்காது. அதன் இடத்தை பித்தளை எட்டிப்பிடிக்கும். பித்தளையே தங்கத்தின் விலைக்கு விற்கும். கொள்ளையடிக்க ஒரு கூட்டமே இருக்கும்."
"அரிசி விலை ஏறும். ரூபாய்க்கு விரல்நுனி கொள்ளளவு நொய்யரிசி கிடைத்தாலே பெரிது."
அடித்துப்பிடித்து குந்துமணி உலோகம் வாங்கிவிட்டு, அது பயன்படாமல் போவதைவிட திருப்தியாக பேரீச்சம்பழம் வாங்கிச் சாப்பிடலாம்.

Image may contain: food

ஸ்டெர்லைட் மட்டும் கண்ணுக்குத் தெரியும்

அக்காலத்தில் உடுத்தும் உடைகளில் மூலிகைச்சாறு கொண்டு அடிப்படை நிறங்களில் பல வண்ணங்கள் தோய்த்து எடுத்தனர். வேம்பாளம்பட்டை, மருதாணி, மஞ்சள், நீலி அவுரி, பவளமல்லி, ஆடாதொடை, மற்றும் பாஷாணங்கள் கொண்டு சாயங்களைப் பெற்றனர். இதன் விகிதாசாரத்தை மாற்றியமைத்து பல நிறங்களைக் கொண்டுவந்தனர். அக்காலத்தில் அடிப்படை ஆடை பருத்தி & பட்டு. வேறு ஏதும் இருக்கவில்லை. ஆக, நூற்பது நெய்வது சாயம் ஏற்றுவது இயற்கையோடு ஒன்றியே இருந்தது. எந்தத் தொல்லையும் இருக்கவில்லை.
ஆனால் இன்று நாம் செயற்கையாக வண்ணம் ஏற்றப்பட்ட ஆடைகளைத்தான் அணிகிறோம். பருத்தி, சிந்தடிக், தோல், ரெக்சின் என்று எல்லா ஆடைகளை அணிகிறோம். நம்மைவிட சக்திவாய்ந்த மனிதவளம் மிக்க அமெரிக்காவில், சீனாவில் பல உற்பத்திகள் நடக்கிறது ஆனால் நிலத்தடிநீர் மற்றும் சுற்றுச்சூழல் மாசுபடுவதால் அங்கெல்லாம் விசைத்தறி போட்டு பருத்தி துணியில் சாயம் தோய்ப்பது அடியோடு ஒழிக்கப்பட்டது. அதனால் உபரியான வேலை ஆர்டர்கள் திருப்பூர் நோக்கி வந்துவிட்டது. வேலைவாய்ப்பும், இறக்குமதி/ ஏற்றுமதி வர்த்தகமும் அதிகமானது. விண்ணில் தொலைநோக்கியையும், கடலடியில் ஆய்வுக்கூடமும் வைக்கத் தெரிந்த அவர்களுக்கு பனியன் ஜட்டி டீ-ஷர்ட் தயாரிப்பதில் என்ன சிரமம் இருக்கப்போகிறது?
திடீரென ஸ்டெர்லைட் ஆலை விவகாரம்தான் கண்முன் தெரிகிறதாம், மென்மையான வண்ணமய பருத்தி படுத்தும்பாடு யார் கண்களுக்கும் தெரியவில்லை. நம்மூரில் நதியைக் காணோம், பெப்சிகாரன் குடித்தான், கர்நாடகா மறித்தான், என்றெல்லாம் பேசுகிறோம். சாயம் தோய்க்க ஆகும் நீரின் அளவுக்கு நம்மிடம் எத்தனை நதிகள் இருந்தாலும் போதாது. ஆனால் கொங்கு மண்டலத்தைப்போல் தமிழகம் முழுதும் வேலைவாய்ப்பு என்ற பெயரில் நடக்கும் பலசெயல்களுக்கு நாமும்தானே உடந்தை? இதில் செந்நிற செப்பு என்ன? ஐயோடின் உப்பு என்ன? பருத்தியின் சாயம் ஓசையின்றி ஆபத்தை உண்டாக்கி விட்டது. 'நீர் இல்லாத சாயம்' என்ற தத்துவம் வந்தாலும், பருத்தியிலேயே மரபணு மாற்றி பலவித வண்ணங்கள் கொண்டுவந்தால் ஒரு தவறுமில்லை.
Image may contain: flower, plant and nature

ஞாயிறு, 15 ஏப்ரல், 2018

எது வேண்டும்?

நாம் பேசும்போது இறைவன்/கடவுள்/தெய்வம் என்பதை சொல்லி வருகிறோம். மேலோட்டமாக இவை அனைத்தையுமே வேறுபாடின்றி ஒரேமாதிரி பொருளில்தான் நாம் பயன்படுத்துகிறோம். ஆனால் இவை வேறுபடும். எப்படி?
இறைவன் - சுயம்புவான பேராற்றல் படைத்த உருவமற்ற பிரபஞ்ச சக்தி (பரம்பொருள்)
கடவுள் - புருஷா/பிரக்ருதி வெளிப்பாடுகளாகத் தோன்றி அன்பு, கருணை, தர்மம் என்பதன் வடிவாக திகழும் மறைபொருள் நிலை. உணர்ந்தவர்களுக்கு உணர்ந்த வடிவத்தில் காட்சி கொடுப்பது.
தெய்வம் - கடவுளின் உருவம் என்று நம்மால் ஏற்றுக்கொள்ளப்படும் ஒர் ஆத்மா. (தாய்/தந்தை, உயிர் காத்தவர், மூதாதையர், மகான்கள்,.. என்று பலரைச் சொல்லலாம்
இது எதுவாக இருந்தாலும், நம் இலக்கு என்ன? தெய்வ சக்தியின் வழிகாட்டுதலுடன் கடவுளை உணர்ந்து அந்த இறைவனோடு கலப்பதுதான். அது சூறாவளியா, சுழன்றடிக்கும் சூறாவளியா, புயலா, பலத்த காற்றா, தென்றலா என்று 'வாயு' சக்தியின் நிலைகளை நாம் குழம்பியபடி ஆராய்ச்சி செய்யத் தேவையில்லை. மொத்தத்தில் இவற்றை உணர்கிறோம். அவ்வளவே!

விஷுக்கனி கண்டோ?

தமிழ் புத்தாண்டுக்கு இங்கே சாமி கும்பிட்டு, மணியடித்து தீபம் காட்டி, விருந்துண்டு, டிவி பார்த்தபின் உறங்குவதோடு முடிந்துவிடும். சாத்திர சம்பிரதாயங்கள் இருந்தாலும்கூட பெரிதாக வேறு ஏதும் செய்வதில்லை.
ஆனால் தென்கோடி தமிழகம் மற்றும் கேரளா பக்கம், இலந்தம்பழம் கொடுக்காபுளி அரைநெல்லி, திராட்சை முதலியதை கையில் அள்ளி குழந்தைகள் தலையில் கொட்டுவார்கள். பிறகு வெற்றிலை, பழம், வேப்பம்/ கொன்றைப்பூ, 25,50 பைசா என்று பரிசு வைத்துக் கொடுப்பார்கள்.
நான் சிறுவயதாக இருக்கும்போது எங்கள் பக்கத்து வீட்டில் ஒரு கால்நடை மருத்துவர் இருந்தார். அவருடைய தந்தை 'ஏ... வேகம் வரணம்... விஷுக்கனி மதுரமாயிட்டு பழங்கள் உண்டு.. இந்தாடா ஒரு கதலி... நன்னாயிட்டு இருக்கும்' என்று சொல்லிவிட்டு மேலேசொன்னபடி செய்வார். காலில் விழுந்துவிட்டு ஆசிர்வாதம் பெற்று, தலையில் பெய்த பழங்களை பொறுக்கி ஜோபியில் நிரப்பிக்கொண்டு, 50 காசுக்கு பன்னீர் சோடா வாங்கிக்குடித்த நினைவு இருக்கு. அவர் கொடுத்த கதலி (வாழைப்பழம்) சூம்பிப்போன கருத்த எலிகுஞ்சு போன்று இருக்கும். அதை உரிப்பதற்குள் பாடுபட வேண்டும். அதுபோக, 'தாத்தா, பலாபழம் எவ்வடே? அது பாக்கியல்லோ?' என்று கேட்பேன். அப்படியும் கேட்டுவாங்கித் தின்ன கூட்டம் நாங்கள்! ஹிஹிஹி... 
No automatic alt text available.  No automatic alt text available.

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை

முகநூல் முழுக்க ஆசிஃபாவுக்கு நிகழ்ந்த கோரமான கொலை பற்றிய கண்டன பதிவுகள்தான் அதிகம் இருந்தது. கற்பழிப்பு-கொலைக்கு காரணமான குற்றவாளியை உடனடியாக தூக்கில்போட கடுமையான சட்டம் வரவேண்டும் என்ற ரீதியில் அவை இருந்தன.
காஷ்மீரத்து ஆசிஃபாவைப்போல் தினந்தோறும் நூற்றுக்கணக்கான சிறுமிகள் தேசம் முழுதும் அல்லல்பட்டு உயிர் துறந்துகொண்டுதான் இருக்கிறார்கள். பல சம்பவங்கள் வெளியுலகிற்கு தெரியாமலே போகிறது என்பதுதான் உண்மை.
கடுமையான சட்டம் இயற்றுவது கடினம்தான். கடந்த வருடங்களில் நடந்த எத்தனையோ கோரமான குற்றங்களுக்கு அளித்த தீர்ப்பு இன்னும் முற்றுப் பெறாமல் தொங்கிக் கொண்டுள்ளது. ராஜீவ் காந்தி கொலை வழக்கு, டெல்லி நிர்பயா கொலை வழக்கு, தஷ்வந்த் கற்பழித்துக் கொன்று எரித்த சிறுமி ஹாசினி கொலைவழக்கு, காதலியை வெட்டிக்கொன்ற காதலன் வழக்குகள், உடுமலை சங்கர் ஆணவக் கொலை வழக்கு, இப்படி இன்னும் எத்தனயோ உள்ளது. எல்லாவற்றிலுமே அப்பீல் மனு போட்டு காலந்தாழ்த்தி தீர்ப்பை ஒத்திப்போட்டு சாதகமாக்கிக் கொள்வது வாடிக்கையாகிவிட்டது. ஒரு குற்றமோ/வழக்கோ பிரபலமாவதும், ஒன்றுமில்லாது போவதும் அரசியல் கட்சிகளின் கைகளில்தான் உள்ளது.
ஒன்றுக்கு நீதி கேட்டால் மற்றொன்றுக்கு சலுகை கேட்கும் தேசம் இது. போதும் போதும், இத்தனை ஆண்டுகள் சிறையில் இருந்தாகிவிட்டது, மரண தண்டனை தேவையில்லை என எல்லாவற்றிலுமே அரசியல் தலைவர்கள் மூக்கை நுழைத்து சட்டத்தை வளைக்க திருத்தம் கொண்டுவரும் காலமாகி விட்டது. ஜனாதிபதி என்ன சொல்வது, ஆளுநர் என்ன சொல்வது, நாங்களே தீர்மானம் இயற்றி விடுதலை செய்வோம் என்ற அளவில் எல்லாமே உள்ளது.
இதில் நம் முன்னாள் ஜனாதிபதி APJ அப்துல்கலாம் அவர்கள் 'மரண தண்டனையே நம் நாட்டில் இருக்கக்கூடாது, அடியோடு ஒழிக்க வேண்டும். குற்றவாளிகள் திருந்திவாழ வாய்ப்பு தரவேண்டும்' என்றார். இதற்கு என்ன சொல்வீர்கள்? ஒரு செயல் குற்றமாகுமா, அக்குற்றம் வழக்காக பதிவுபெறுமா, அது விசாரிக்க உகந்ததா, அது நீதிமன்றம்வரை எடுத்துச் செல்லத்தக்கதா, அது பலவருடங்கள் இழுத்தடிக்கப்படுமா என்று ஒவ்வொரு நிலையிலும் கவனமாக வடிகட்டிக்கொண்டு வந்தால் பலகோடி ரூபாய் ஆண்டுதோறும் மிச்சமாகும். இதுபோன்ற செலவுகளைத் தவிர்க்க, சிறை மற்றும் நீதித் துறைகளை தனியாரிடம் கொடுத்திடலாமே!
No automatic alt text available.

செவ்வாய், 10 ஏப்ரல், 2018

கட்டுகோப்பான நம் சாதிகள்

ஆன்மிகம் என்று எடுத்துக்கொண்டால் அது சமயத்தைக் குறிக்கும். அது பக்தியை வளர்க்கும். அது கணபதி, முருகன், சிவன், சக்தி, திருமால், சூரியன் என்று ஷண்மதம் பின்பற்ற வழிவகுக்கும்.

சமயம் என்பது சாதிகளுக்கு வழிவகுக்கும். நம்முடைய கட்டமைப்பில் அனைவருமே பங்கேற்கும் உரிமை உள்ளது. காலங்காலமாக யாரும் இன்னொருவர் ஜீவனத்தொழிலில் நுழைவதில்லை. சமயம் உண்டாக்கும் தொழில்கள் என்ன? அடிப்படையில் ஐந்து தொழில்கள். மர தச்சர், கொல்லர், கன்னார், கல் சிற்பி, தட்டார். இவர்கள் படைப்பாளிகள். இதன் அடுத்த நிலையில் சமயம் சார்ந்த மற்ற சாதிகள் வருகிறது.

கோயிலைச் சார்ந்து பூசாரி, பாணர், மேளக்காரர், பர்சாரகர், போன்றோரும், பின்னணிப் பணிகளான கணக்கு பார்க்க, தீவட்டி பிடிக்க, குங்கிலியம் போட, கோசாலை காக்க, பால்கறக்க, நந்தவனம் பராமரிக்க, தினசரி பூமாலைகள் கட்ட, விளக்கிட, மண்பாண்டங்கள் செய்ய, தேவவஸ்திரம் நூற்க, நடனம் ஆட, பல்லக்கு தூக்க, இப்படி இன்னும் எத்தனையோ சொல்லிக்கொண்டு போகலாம். பொது வாழ்விற்கு வைத்தியர், விவசாயி, ஆசிரியர், வணிகர், வண்ணார், நாவிதர், என்று பலபேர் இருந்தனர். வாழ்வாதாரத்திற்கு ஒருவரை ஒருவர் சார்ந்துதான் வாழ்ந்தனர். இவற்றைப்பற்றி பெரியாழ்வார் வைணவப் பிரபதங்களில் அருமையாகப் பாடியிருப்பார். அவரவர் தங்கள் சாதிப்பெயரை சொல்லிக் கொள்வதில் ஒரு வெட்கமும் இல்லை. எல்லோருமே பெருமைக்குரிய வகையில் பங்களித்து வருகின்றனர்.

அப்போதெல்லாம் இல்லாத சாதிச் சண்டைகள் ஆங்கிலேயர் வந்ததுமே வந்துவிட்டதுதான் கொடுமை. இதுதான் பிரிவினைக்கு சாக்கு என்று திராவிடத்தில் சந்தடி சாக்கில் முற்போக்கு நாத்திக இயக்கம் திண்ணையில் இடம் பிடித்துக்கொண்டது. இன்று வீட்டிற்குள்ளேயே நுழைந்து படுத்துக்கொண்டது, சமையற்கட்டில் தீயை ஊதியூதி எழுப்புகிறது. இதெல்லாம்தான் கலியுகம் சீர்கெடும்போக்கு.

அன்றைய சாதிவாரியான பலதொழில்கள் இன்று பிரத்தேயக தொழிற்கல்வி சான்றிதழ் படிப்பாக வந்துவிட்டது. சாதி கூடாது என்று என்னதான் எதிர்ப்புகள் வந்தாலும், உலகில் பாரதத்தைப்போல் கட்டுக்கோப்புடன் எந்த சமூகமும் இயங்குவதில்லை. சமயத்தை தகர்த்துவிட்டால் அதைச் சார்ந்த சமூகங்கள் மெள்ள காணாது போய்விடும் என்ற நோக்கில் புரட்சியாளர்கள் செயல்பட்டனர்.
Image may contain: text

வெள்ளி, 6 ஏப்ரல், 2018

திக்கு தெரியாத நாட்டில்...

இத்தனை ஆண்டுகளில் பல தமிழறிஞர்கள் வந்து போயினர். இங்கே தமிழ் வளர்ந்திருக்க வேண்டுமே, அது வளர்ந்ததா தேய்ந்ததா? நால்வர் பேணி வளர்த்த பக்தி மண்ணில் எல்லோரும் இறைவனை ஏற்றார்களா?
ஒருபக்கம் எல்லோரும் போடும் 'தமிழ் வாழ்க' கோஷத்தைப் பார்த்தால் வளர்ந்துள்ளது. ஆனால் அதோடு வெறுப்பும் வளர்ந்துள்ளது. ஏன் அப்படி? திராவிட கட்சியினரால் அன்றைக்கு பல ஆவணங்கள் திருத்தம் செய்யப்பட்டதால், அதன் உண்மை வடிவம் என்னவென்பதையே நாம் அறியாத காலத்தில் உள்ளோம். மொழி நிந்தனை, அண்டை மாநிலத்தோடு சமரசமின்மை, திராவிடம் என்ற ஏகபோக உரிமை, வடக்கு-தெற்கு பிரிவினை, என்று எல்லா பக்கமும் திகிலோடு வாழ்ந்து வருகிறோம். இது இப்படியே நீடித்தால் நமக்கு பெரும் ஆபத்துதான்.
இத்தனை ஆண்டுகளாக இங்கே நடந்து வரும் அம்ர்க்களத்தைப் பார்க்கும் நடுவண் அரசுகள், 'தமிழத்தை யார் நாசம் செய்தாலும் அவர்களால் கேள்வி கேட்க முடியாது என்ற நிலைதான் உள்ளது' என்ற அசாத்திய நம்பிக்கையப் பெற்றுள்ளது. இனி, மீத்தேன் எடுக்கிறேன், மலைத்தேன் பிடிக்கிறேன், நியூட்ரினோ சோதிக்கிறேன், நடராஜனோ பூசிக்கிறேன் என்று யார் வந்து என்ன செய்தாலும் மக்கள் நிம்மதி இழந்து காலநேரத்தை வீணடித்து தெருவில் போராட வேண்டிய அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இங்கே மன்னனும் கெட்டு மக்களும் கெட்டு சமுதாயம் முச்சூடும் கெட்டுப்போயுள்ளது. ஐம்பூதத்தையும் விற்றுப் பிழைக்கும் கஷ்ட ஜீவனத்தில் இன்று அரசியலாளர்கள் உள்ளனர்.
இறைவன் தன் ஐந்தொழிலை செய்யத் தவறினால் பிரபஞ்சம் என்னாகும்? தமிழ்நாடு (எ) திராவிடத்தில் இறையாண்மை ஐம்பது ஆண்டுகளில் தன் கடமையைச் செய்யவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக கல்வியில் சிந்தனையில் பக்தியில் செயலில் நஞ்சூட்டி வந்த வினையால் தர்மநெறி தவறி இன்று எதிர்ப்பு சக்தியின்றி உள்ளோம். திராவிட அரசியல் நோக்கிலேயே நாம் வளர்ந்துவிட்டோம் என்பதால் நம் சிந்தனைகளும் மாறிப்போனது. Vox populi என்னும் பிரஜைகளின் குரல் மன்னனையே அச்சப்படுத்த வேண்டும். ஆனால் இங்கே அதற்கு எந்தவொரு மதிப்பும் இல்லாமல் போனது.
சிவன்-ஆரியன், முருகன்-திராவிடன்; உலகம் என்றால் தமிழ்நாடு, மொழி என்றால் அது தமிழ் மட்டுமே என்ற நிலைப்பாடோடு வளர்ந்து வரும் சமுதாயத்தின் எதிர்காலம் ... ஈசன் விட்ட வழி!
என் பள்ளியில் ஒரு சர்தார்ஜி ஆசிரியர் இருந்தார். அங்கேயே ஆசிரியர் விடுதியில் தங்கி இருந்தார். படு ஆச்சாரமானவர். பள்ளியில் குருத்வாரா சாஹிப் கோயிலுக்குச் சென்று தினம் காலையில் வழிபடுவார். அவருக்கு நாத்திக பகுத்தறிவு/ திராவிடம் பற்றி சற்றும் புரிந்ததில்லை. "சாமி இல்லேவா... அதூ எப்டியா இருக்கும்.. நான் டெய்லி குர்பானி சொல்றேன்னே. நானும் தமிள் பேசறேன்.. அப்பு நானும் திராவிட் தானே? என்று அப்பாவியாகச் சொல்வார். அதற்கு இன்னொரு ஆசிரியர், 'No, Mr.Singh. Here all concepts are different and funny. We have to accept what they preach' என்றதும் அவர் முழித்தார்.
Image may contain: text

தாவரங்களில் நம் உயிர் உள்ளது

சார், ஜீவகாருண்யம் வேண்டும் என்று வள்ளலார் வலியுறுத்தி இருக்கார். ஆனால் தாவரங்களுக்கும் உயிர் இருக்கு, அப்போ அதை சாப்பிடுவது மட்டும் சரியா? அதெப்படி ஜீவகாருண்யமாகும். பிராணிகளை மட்டும் சைவர்கள் பேசுவது சரியில்லையே என்று சொல்வார்கள்.
ஆம், தாவரங்களுக்கும் உயிருண்டு. அதன் படைப்பு எதற்கு? நமக்கும் பிராணிகளுக்கும் உணவாகவும் மூலிகையாகவும் பயன்படுவதற்குத்தான். நமக்குப் பயனளிப்பதுதான் அதன் ஜீவித காரணமே. அவை தியாகத்தின் சின்னம். பெரும்பாலும் காய், கனி, இலைகள் என்று பறித்துக் கொள்வதால் செடிகளுக்கு பாதகம் இருப்பதில்லை. ஆனால் வேரோடு பிடுங்கி எடுப்பதோ, வெட்டுவதோ எதைச் செய்தாலும் அதன் அனுமதியோடு 'சாப நிவர்த்தி' பெற்று பயன்படுத்த வேண்டும் என்று சித்தர்பாடல்கள் சொல்கிறது. புலால் மறுப்பு பற்றி சொல்லும் திருவள்ளுவரே இன்னொரு இடத்தில் 'கனியிருப்பக் காய்கவர்ந் தற்று' என்று சொல்கிறார். அப்படி என்றால் அது பறித்து உண்பதற்காத்தானே? உண்ண அரிசி பருப்பு, உடுக்க உடை, வசிக்க கூரை, கற்க ஏடு என எல்லாமே தாவரத்திலிருந்து வருபவைதானே?
அக்காலத்தில் வனம் பெருக்கினர், மழை பெற்றனர். ஆனால் இன்றோ கைக்கு வந்தபடி வெட்டி வேரோடு அழிக்கிறோம். இதெல்லாம் சரியில்லை. மேற்சொன்ன கோட்பாடுகளில் நம்பிக்கை இல்லாததால் அவை ஏதும் இன்று குற்றமாகத் தெரிவதில்லை. மதம் என்ற ஒன்று கொள்கை என்ற ஒன்றை வகுத்துள்ளதால், அதன்படி வாழ்வதே சரி. இன்றைக்கு அதை எப்படியும் வளைத்துக் கொள்ளலாம், பகுத்தறிவோடு அணுகலாம் என்ற நிலை இருப்பதால். இது நமக்கே பாதகமாக முடிகிறது. 

விஞ்ஞானமும் மெய்ஞானமும்

விஞ்ஞானம்-மெய்ஞானம் பிணைந்தே இருப்பது. ஒன்றை செயல்பூர்வமாகக் காணலாம், இன்னொன்றை உணரலாம். பிரத்தியேகமாக ஒரு சூட்சுமத்தை அறியவேண்டும் என்றால் மனதில் அதன் நுணுக்க கட்டமைப்பு முதற்கொண்டு செயல்படும் விதத்தையும் விஷுவலாகக் காணவேண்டும். இது கல்லூரி படிக்கும் காலத்திலிருந்தே எனக்கு வந்துவிட்டது.
இயற்பியலில் இளங்கலை படிப்பு இதற்கு வித்திட்டது என்றால், முதுகலை பட்டப்படிப்பு அதை செம்மைப் படுத்தியது என்பேன். முக்கியமாக Atomic Physics, Solid State Physics, Quantum Mechanics, Crystallography போன்ற பாடங்கள் தத்துவக் கூறுகளை கண்முன்னே கொண்டுவந்து நம்மை தத்துவவியலாளராகவும் விஞ்ஞானியாகவும் மாற்றவல்ல ஆற்றல்பெற்றது. சரி, இந்த பாடங்கள் படித்த எத்தனையோ லட்சக் கணக்கானவர்கள் இப்படி ஆகிவிட்டனரா? இல்லை. ஏன்? அவரவர்களுக்கு விதிக்கப்பட்ட மெய்ஞானவியல் அறிவும், ஆன்ம தத்துவமும் வெளிப்படவேண்டிய விதி இருப்பின் இவை எல்லாமே கைகொடுக்கிறது என்பதையும் கண்டேன். நுட்பமாக ஆய்வுக் கோணத்தில் பல தலைப்புகளை ஆராய இது எனக்கு அடித்தளமாக இருந்தது. அந்த கட்டமைப்பின் உள்ளேயே இருந்து செயல்பாட்டைக் காணும் அனுபவமும் வந்துவிடுகிறது. சூட்சும தத்துவம் விளங்கிவிடுகிறது.
உணர்ந்துவிடுவதால் ஒருவன் மெய்ஞானி ஆகிவிடுவானா? அதை இறைவன்தான் தீர்மானிக்கிறான். என்னதான் உரமிட்டு நீர் தெளித்தாலும், மண்ணில் வீரியமான எல்லா விதைகளுமா முளை விடுகிறது? அதையும் அவன்தான் தீர்மானிக்கிறான். புரிதல் சுலபமாகும்போது மற்ற பட்டப்படிப்பு பிரிவுகளின் தலைப்புகளும் எளிமையாகிறது. ஆய்வு செய்யும்போது எதுவுமே கடினம் என்று தெரிவதில்லை. என்னைப் பொறுத்தவரை, ஒவ்வொருவரும் மெய்ஞான தத்துவத்தை உணர வேண்டுமென்றால் அறிவியலாளராக இருப்பது அவசியம். சூட்சும தத்துவங்களை அறிந்த பிறகு நீங்களே MPhil / PhD வாங்கும் அளவிற்கு செம்மைப்படுவீர்கள். அதற்காக நான் எல்லாம் கரைத்து குடித்து விட்டேன் என்று கொள்ளவேண்டாம். ஓரு விஷயம் எனக்கு விளங்கவேண்டும் என்றால் அவன் ஆணைப்படி சித்த மகான்கள் வந்து தெளிவு படுத்துவதும் நடக்கும்.
இதை நான் சொன்னால் 'பொய்யனே நீ அழிவாய்'' என்பார்கள். நான் சொல்வது உண்மையா என்பதை ஈசனிடம்தான் அவர்கள் கேட்டுத் தெளிவுபெற வேண்டும். காழ்ப்புணர்ச்சியில் இவர்கள் தரம் தாழ்ந்து என்னை நிந்திப்பதை அனுமதிக்க மாட்டேன்.. நந்தியம்பெருமான் முன்மொழிய கோபமானது சாபமாக என் வாயில் வெளிப்படுகிறது. எல்லாம் அவன் சித்தம்!
மெய்ஞானி ஆவதும், அஞ்ஞானி ஆவதும் ஈசனின் கையில்தான் உள்ளது! இதற்காக நான் மற்றவரைப்பார்த்து பொறாமை படுவதோ, அவர்கள் என்னைப்பார்த்து வயிறு எரிவதோ, தம்படி பிரயோஜனம் இல்லை. ஒருவனுக்கு ஞானம் எந்த அளவில் இருந்தால் போதும் என்பதை அவனே முடிவு செய்கிறான். இதை மற்றவரோடு ஒப்பிட்டுக்கொண்டிருந்தால் அஞ்ஞானியாக இருப்பதே சாலச் சிறந்தது. Ignorance is bliss! 

Image may contain: one or more people, ocean and text